மொத்தப் பக்கக்காட்சிகள்

திங்கள், 3 ஜூன், 2013

வழக்குகள் வெற்றி பெற்று சகல சம்பத்துடன் வாழ

வழக்குகள் வெற்றி பெற்று சகல சம்பத்துடன் வாழ :

          

                   இன்றைய நவீன உலகில் தொட்டதற்கெல்லாம் வழக்கு போடுவது ஒரு நாகரீகமாகவே மாறிப் போய்விட்டது. பங்காளி வரப்பு பிரச்சனைக்கு வழக்கு போட்டு வழக்கு நடத்த பணம் போதாமல் வயலை விற்று வக்கீலுக்கும் வாய்தாவுக்கும் கொடுத்து விட்டு நின்றவர்கள் ஏராளம். இந்த நிலையை பலரும் அடைந்திருக்கிறார்கள் என்பதை எனக்கு வரும் அலைபேசி அழைப்புகளும், இமெயில்களும், கடிதங்களும் உறுதிப்படுத்துகின்றன. பல வழக்குகளை சந்தித்துக் கொண்டு தினமும் வேதனையுடன் மனவேதனை அடைந்தவர் ஏராளம் என அறிந்தேன். இதற்கு ஒரு வழியை சொல்லுங்கள் என தினமும் கேட்டு வந்தனர். என் இனிய வாசகர்களுக்காக இங்கே ஒளிவு மறைவு இன்றி மக்கள் அனைவரும் பயன்பெரும் வகையில் தெளிவாக விளக்க முயல்கிறேன்.
           வழக்குகள் வெற்றி பெற்று சகல சம்பத்துடன் வாழ ஞாயற்றுகிழமை அன்று மகம்  நட்சத்திரம் கூடிய சுபதினத்தில் ஆலமரத்தில் இருக்கிற புல்லுருவிக்கு கிழக்கு திசைபார்த்து அமர்ந்து காப்பு கட்டி சாப நிவர்த்தி செய்து, உயிர் மந்திரம் சொல்லி இரும்பு ஆயுதங்களும், இரண்டு சுண்டு விரல்களும், நகங்கள் பத்து படாமல் பிடுங்கி வந்து நிழலில் உலர்த்தி தேனில் அரைத்து சிமிழில் பத்திரப்படுத்தி வசிய மந்திரம் (யநமசிவ) 1008 உரு ஏற்றி  வைத்துக்கொண்டு வெளியில் முக்கிய காரியங்களுக்காகவோ வழக்குகளுக்கோ செல்லும் சமயம் வசிய மையை கையில் எடுத்து 3 முறை வசிய மந்திரம் சொல்லி நெற்றியில் பொட்டிட்டு கொண்டு வெளியே போக பகைவரும் உங்களை வணங்குவர், எல்லா வழக்குகளும் வெல்லும். எல்லா காரியங்களும் தடையின்றி வெல்லும், சர்வ  சம்பத்தும் உங்களை தேடி வரும்.