மொத்தப் பக்கக்காட்சிகள்

சனி, 28 டிசம்பர், 2013

வசியம்



                                                                 காதல் வசியம்

        வசியம் என்ற மிகசக்தி வாய்ந்த அதர்வண வேத கலையை மகிழ்ச்சியான குடும்ப வாழ்வுக்கு பயன் படும் உத்திகள் பற்றிய விளக்கங்கள் இந்த தளத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. பல்வேறு இடங்களில் உண்மையில் வசியம் என்ற பெயரில் ஏற்படுத்தப்படும் அனைத்து பாதிப்புகளுமே மூலிகைகளை பயன்படுத்தி ஆழ்மன சக்தியைக் கொண்டு ஏற்படுத்தப்படும் மன உடல் பாதிப்புகளே என்பதற்கு மிக வலுவான சான்றுகள் உள்ளன.


        ஆழ்மன சக்தியை உபயோகித்து ஒருவரின் மனதை தன் உத்திரவுக்கு கட்டுபடுத்தி செயல்படுத்தும் ஹிப்னாடிஸத்தை நவீன அறிவியல் ஏற்றுக்கொண்டிருக்கிறது. ஆழ்மன சக்தியை ஒருங்கினைத்து மன மொழி உத்தரவுகளை செலுத்தி தூரத்தில் இருக்கும் ஒருவருக்கு சிகிச்சை அளிக்கமுடியும் என்று ரெய்கி மருத்துவம் நிரூபித்திருக்கிறது. ஆழ்மன சக்த்தியை ஒருங்கினைத்து தூரத்தில் இருக்கும் ஒருவருக்கு செய்திகளை அனுப்பும் டெலிபதி முறையை நவீன அறிவியல் ஏற்றுக்கொண்டிருக்கிறது.


         விஷ தன்மை வாய்ந்த மூலிகைகளை பயன்படுத்தி மன பாதிப்புகளையும் உடல் பாதிப்புகளையும் ஏற்படுத்தமுடியும் என்பது அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்ட ஒன்று. எங்கோ இருக்கும் ஒருவரை ரெய்கி மூலமாக குணப்படுத்தமுடியும் என்றால், எங்கோ இருக்கும் ஒருவரிடம் டெலிபதி மூலம் பேச முடியும் என்றால் எங்கோ இருக்கும் ஒருவருக்கு வித்வ பிரயோகம் மூலம் ஏன் பாதிப்புகளை ஏற்படுத்தமுடியாது என்பது வித்வ பிரயோக வல்லுனர்களின் கேள்வி எது எப்படியிருந்தாலும் ஆன்மீக வழியான வித்வ பிரயோகத்திலும் மூலிகைகளின் சக்தியே அடிப்படையாகவும் முக்கியமானதாகவும் பயன் படுத்தப்படுகிறது.


            காதல் வெற்றிக்கு..... காதல் வசப்படுபவர்களில் நிறைய பேர் தங்களின் காதல் வெற்றி பெற வசியம் செய்பவர்களை தேடி செல்வதை அதிகம் பார்க்க முடிகிறது. வசியம் என்பது ஏதோ மிகப்பெரிய சக்தி வாய்ந்தது போலவும் யாரை வேண்டுமென்றாலும் வசியம் செய்து விடலாம் என்பது போலவும் ஒரு மாயை நிலவுகிறது. உண்மையில் வசியம் செய்வதற்க்கு சில விதி முறைகளை ஸ்ரீ தேவி யட்சினி மகாத்மியம் சொல்கிறது அதன்படி......


* திருமணமாகி கணவனுடன் இருக்கும் பெண்ணை வசியம் செய்ய கூடாது,


*வேறு ஒரு ஆணுடன் காதல் வயப்பட்டபெண்ணை வசியம் செய்யகூடாது,


*உறவு முறையற்ற பெண்ணை வசியம் செய்ய கூடாது,


*தன்னை விட மூத்த வயதுடைய பெண்ணை வசியம் செய்ய கூடாது,


* அடைக்கலம் தேடிவந்த பெண்ணை வசியம் செய்ய கூடாது,


* அறிமுகம் இல்லாத பெண்னை வசியம் செய்ய முடியாது,


* சிம்ம லக்னம் கொண்ட பெண்னை வசியம் செய்ய முடியாது,


*வைஜயந்தி உபாசனை செய்யும் பெண்ணை வசியம் செய்ய முடியாது,


இத்தகைய பெண்களை தவிர்த்துத்தான் வசியத்தை பிரயோகிக்க முடியும். அதே போல பெண்களும்,


* திருமணமான ஆண்களை வசியம் செய்ய கூடாது,


* குரு ஸ்தானத்தில் இருப்பவரை வசியம் செய்ய கூடாது,


*விரதம் மேற்கொண்டிருப்பவரை வசியம் செய்ய கூடாது,


             (இன்னும் சில நிபந்தனைகள் வருணம், ஜாதி போன்றவை குறித்து சொல்லப்பட்டிருக்கின்றன) காதலில் வெற்றி பெற யட்சினி உபாசனைகளில் பூஜை முறைகளே அதிகம் சொல்லப்பட்டிருக்கின்றன. மனதில் எண்ணியவரையே கணவராக அடைய அமாவாசை கழித்து வரும் மூன்றாம் பிறையன்று துவங்கி மதன மேகலா லக்ன பீடம் வைத்து செவ்வாய் வெள்ளிகிழமைகளில் மந்திர உச்சாடனம் செய்துவர எண்ணிய திருமணம் பலிதமாகும்.


                மதன மேகலா என்பது விஸ்ரூப யட்சிணி அதாவது நீர், காற்று, மண் தீ போன்ற இயற்கை சக்தியில் அட்சராம்சம் கொண்டது. மதன மேகலா லக்ன பீடம் ஐந்து அங்குல நீளம் நான்கு அங்குல அகலம் கொண்டது இதன் உள்ளே ரதிமன்மத வசிய சக்ரமும், விவாக பந்தினி சக்ரமும் பதிக்கப்பட்டிருக்கும். (சில இடங்களில் குறிப்பிட்ட ஆடவனின் ஜாதகமும் பந்தனம் செய்யப்படுவதுண்டு) பொதுவாக இந்த உபாசனையை நீரில் நின்றுக்கொண்டு செய்ய வேண்டும் ஆனால் குளியலறையில் குளித்து முடித்தப்பின் ஈர உடலோடு ஆடைஏதும் அணியாமல் கிழக்கு நோக்கி நின்று வலது உள்ளங்கையில் பீடத்தை வைத்து இடது கையால் தாங்கி, "ஓம் ஈம் க்லீம் நமோ பகவதி ரதி வித்மயே மஹா மோஹினீ காமேசி மம பந்தம் சித்த பதீம் ஸ்வயம் பூர்வம் பந்தம் வசி குரு குரு ஸ்வாஹா" என்ற மந்திரத்தை ஒன்பது முறைகள் சொல்லி உடலில் இருந்து நீரை எடுத்து மூன்று முறை பீடத்தை சுற்றி குறிப்பிட்ட ஆடவனை நினைத்து காற்றில் தெளிக்க வேண்டும். இந்த முறை பல இடங்களில் பரிபூரண வெற்றியை கொடுத்திருக்கிறது. இதை தவிர்த்து காதலில் வெற்றி பெற, வசிய பொடி அல்லது சொக்கு பொடியை பயன்படுத்துவதாக மலையாள மாந்த்ரீகத்திலும், சித்தர் வழி முறைகளிலும் சொல்லப்படுகின்றன. குறிப்பாக சிதம்பர அஷ்ட கர்மத்தில் கருவூர் சித்தர் பல முறைகளை சொல்லுகின்றார்.


                மலையாள மாந்த்ரீகத்தில் இந்திர கோபம்.மதனகாமபூ, வெண்குன்றி மணி,சுழல் வண்டு, ஈப்புலி, நீர் மேல் நெருப்பு போன்றவற்றை அஷ்ட்டாங்க திராவகம் எனப்படும் குறிப்பிட்ட சில எண்ணைகளை சேர்த்து தயாரிக்கப்படும் களிம்பை மூங்கில் குறுத்தில் காப்பிட்டு வீனாயட்சினி மூலமந்திரத்தை ஒன்பது வேளை 1008 உரு ஏற்றி பெண்ணின் உடல் திரவத்தோடு கலந்து உட்கொள்ள கொடுக்க ஆண்களை வசப்படுத்த முடியும் என்று சொல்லப்படுகிறது.


                 மரமஞ்சள்.கஸ்தூரி,தாழம்பூத்தாள்,கல்மதம்,பாதிரி, வென்கற்கை ஆகியவற்றுடன் குறிப்பிட்ட சில பூஞ்சைகளை குழிதைலத்தில் சேர்த்து அரைத்து சிறு சிறு உருண்டைகளாக்கி வெங்கார பற்பத்தில் புடம்போட்டு வாகை பலகையில் வைத்து மதன கன்னிகா மூல மந்திரத்தால் உரு ஏற்றி உணவில் கலந்து கொடுத்தாலும், பாற்குரண்டி வேரில் கணமாக பூசி காயவைத்து குறிப்பிட்ட ஆணின் உடமைகளில் வைத்தாலும் உச்சிஸ்ட்ட மதன கன்னிகா அந்த ஆணின் உறக்கத்தில் போய் குறிப்பிட்ட பெண்ணோடு சேர உத்தரவு கொடுக்கும் என்று யட்சிணி வசிய நிகண்டு என்ற நூல் குறிப்பிடுகிறது. எத்தகைய வசிய முறையை பின் பற்றினாலும் முதலில் வசியம் படுத்தும் நபரின் லக்ன பலன், தாரா பலன், பஞ்சக பலன் தெரிந்து அதற்கு தக்கவாறு வசிய முறைகளை பயன்படுத்தினால் நிச்சயம் வெற்றி கிடைக்கும்.


                          குடும்ப பிரச்சனைகள் தீர.. ..... ..... கணவன் மனைவி இடையே ஏற்படும் மன வேறுபாடுகள், விருப்பமின்மை, தாம்பத்தியத்தில் ஈடுபாடுஇன்மை, வெறுப்பு ஆகியவற்றை எதிர்மறை சக்த்திகளால் ஏற்படுத்தமுடியுமா என்ற கேள்வி நிறைய பேருக்கு இருக்கிறது. விஷ தன்மை வாய்ந்த மூலிகைகளை பயன்படுத்தி மன பாதிப்புகளையும் உடல் பாதிப்புகளையும் ஏற்படுத்தமுடியும் என்பது அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்ட ஒன்று. வித்வ பிரயோகம் எனப்படும் பூதபிரேத பைசாச பிரயோகங்கள், துர் தேவதைகள், யட்சிணிகள் மற்றும் பிரம்ம ராட்சசர்களைக் கொண்டு செயல் படுத்தப்படுவதாக சொல்லப்பட்டாலும் உண்மையில் மனோசக்தி யைக்கொண்டு எதிர்மறை பதிவுகளை ஆழ்மனத்தில் ஏற்படுத்துவதன் மூலமாகவே செயல் படுத்தப்படுகின்றன.


                      பொதுவாக கணவன் மனைவிக்குள் பிரச்சனைகளையும் பிரிவினைகளையும் ஏற்படுத்த வேண்டும் என்று முற்சி செய்பவர்கள் மூன்று வழிகளை பயன் படுத்துவதுண்டு. சமாதானமாக இருக்கும் கணவன் அல்லது மனைவியை குறிவைத்து அவர்களின் மனத்தை மாற்றி கணவன் அல்லது மனைவியை பற்றிய சிந்தனைகளை மறக்கசெய்வது அல்லது எதிற்மறை சிந்தனைகளை அதிகப்படுத்துவது வித்வேசனம் எனப்படும்.


                       ஒற்றுமையாக இருக்கும் கணவன் மனைவிக்கிடையே எதிற்மறையான எண்னங்களை ஏற்படுத்தி தேவையற்ற சந்தேகங்கள், பயங்கள், மற்றும் குழப்பங்கள் அதிகரிக்க செய்வது இதன் அடிப்படையாகும். கணவன் அல்லது மனைவியின் உடல் அணுக்களில் நச்சுத்தண்மையை ஏற்படுத்தி அவர்களுக்குள் தம்பத்திய உறவும் நெருக்கமும் ஏற்படாமல் செய்வது அஸ்ரஸ்வதம் எனப்படும். இதனால் கணவன் மனைவிக்குள் தாம்பத்திய உறவு ஏற்பட்டால் கணவனுக்கோ மனைவிக்கோ உடல் பாதிப்புகள்,சிரமங்கள் மற்றும் சங்கடங்கள் ஏற்பட்டு ஒருவரை விட்டு ஒருவர் விலகும் நிலை ஏற்படும். இந்த முறையை பயன்படுத்தும் போது கணவன் மனைவி அல்லது காதலர்களிடையே உடல் நெருக்கம் ஏற்பட்டாலோ, உடல் ஸ்பரிசம் ஏற்பட்டாலோ, கந்த ஸ்பரிசம் ஏற்பட்டாலோ அவர்களுக்கிடையே எதிற்மறை எண்னங்கள் ஏற்பட்டு வெறுப்பும் பகையும் ஏற்படும். இதனால் உடல் நெருக்கத்தை தவிர்த்து ஒருவரை ஒருவர் விட்டு விலகி செல்லும் நிலை ஏற்படும். அடுத்ததாக கணவன் அல்லது மனைவிக்கிடையில் மன சஞ்சலங்களை ஏற்படுத்தி மூன்றாம் நபரை பிரவேசிக்க செய்வது இது அந்தராசனம் அல்லது அந்தரபிரவேசம் எனப்படும்.




                          ஒழுக்கமான பெண் அல்லது ஆணுக்கு வேற்று ஆண் அல்லது பெண்ணோடு தொடர்புகள் அல்லது உறவுகள் ஏற்பட்டு அதனால் குடும்பத்தில் விரிசலும் பிரிவும் ஏற்பட செய்வது. பொதுவாக எல்லாவித வசிய முறைகளிலும் திலகம்,அஞ்சனம், மசிகந்தம், ஔஷதம், குளிகை என்ற ஐந்து வித மூலிகை பொருட்கள்அதிகம் பயன் படுத்தப்படுகின்றன.இதில் திலகம் என்பது நெற்றி அல்லது வகிட்டில் வைக்கப்படும் பொட்டையும், அஞ்சனம் என்பது கண்கள் அல்லது புருவத்தில் பூசப்படும் மையையும், மசிகந்தம் என்பது உடலில் பூசும் வசியபொடியையும், ஔஷதம் என்பது உட்கொள்ளும் மருந்தையும், குளிகை என்பது மருந்து உருண்டைகளையும் குறிக்கும். பாதிப்புகளை ஏற்படுத்தவும் ஏற்பட்ட பாதிப்புகளை தடுக்கவும் என இரண்டு வழிகளுக்கும் இந்த ஐந்து பொருட்க்களும் பயன் படுத்தப்படுகின்றன.


ஆண்களை வசியம் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் பெரும்பாலும் மசிகந்தம் அல்லது ஔஷதம் என்ற இரண்டு வழிகளையே பின்பற்றுகின்றனர். சந்தர்ப்ப வசத்தால் நெருக்கமாக பழகும் சூழ்நிலை ஏற்பட்டாலோ உடல் உறவு கொள்ளும் நிலை ஏற்பட்டாலோ மசிகந்தம் முறையில் வசிய மருந்தை உடலில் பூசிக்கொண்டு அந்த ஆனோடு நெருங்கி பழகுகின்றனர். உடலில் பூசப்படும் மூலிகை கலவையின் சக்தி பெண்ணின் ஜீவகாந்த அணுக்கள் மற்றும் மூலிகை கலவையோடு சேர்ந்து ஆணின் வியர்வை துவாரங்கள் வழியாகவும் , உடல் திரவங்கள் வழியாகவும் உடாலுக்குள் ஊடுருவியும், வாசானை நாசி வழியே சுவாசத்தில் கலந்தும் விஷுவல் எனப்படும் காட்சி வடிவிலும்,ஆடிட்டரி எனப்படும் ஒலி வடிவிலும்,கினஸ்தடிக் எனப்படும் உணர்வு வடிவிலும் ஆழ்மனதில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இதனால் ஆழ்மனதில் பதிந்த பெண்ணின் தோற்றம், நறுமணம்,செயல் போன்றவை மீண்டும் மீண்டும் அந்த ஆணின் மனதில் ஆதிக்கம் செலுத்துகிறது.


             இவ்வாறு வசியம் செய்யப்பட்ட ஆண் தனது சுய கட்டுப்பாட்டை இழந்து வசியம் செய்தவர்களின் சிந்தனையிலேயே இருப்பான். அவர்களை தவிர மற்ற அனைத்தும் ஒரு பொருட்டாகவே தெரியாது. வசியத்தை செயல் படுத்தியவர்களை நேரில் பார்த்தாலோ, அவர்களின் குரலை கேட்டாலோ ஒரு வித பயம் அல்லது பதட்டம் ஏற்படும். மற்றவர்களின் கருத்தைவிட வசியத்தை செயல் படுத்தியவர்களின் உத்திரவுக்கு முழுமையாக கட்டுபடுவான்.


                    ஔஷதம் எனப்படும் வசிய மருந்துகளை உட்கொள்ள செய்தால் முதலில் உட்கொள்ளுபவர்களுக்கு உடல் ரீதியான பாதிப்புகள் ஏற்படும். உடலில் தளர்ச்சியும் சோர்வும் அதிகமாகும். வயிற்றில் குத்தல் அல்லது வலி விட்டு விட்டு ஏற்படும், முதுகின் கீழ் புறத்திலும் நடு முதுகிலும் தொடர்ந்து வலி ஏற்படும்.உணவு உட்கொள்ளுவது படிப்படியாக குறையும் நாளடைவில் வசியம் வைத்தவரின் முழு கட்டுப்பாட்டில் அவர்களூக்கு மட்டுமே ஆதரவாக மாறிவிடுவார்கள். உட்கொள்ள கொடுக்கப்படும் மருந்துகள் உடல் திரவங்களை பாதித்து மனத்தின் செயல் இயக்கத்தை மாற்றுவதால் சுய கட்டுபாடு இழந்து ஒரு குறிப்பிட்ட நபரை பற்றிய தொடர் சிந்தனைகள் ஏற்படுகின்றன. இத்தகைய வித்வபிரயோகத்தை செயல்படுத்துபவர்கள் மந்திர யந்திர ஔஷத சக்திகளால் மனமொழி உத்தரவுகளை செலுத்துவதுண்டு. இவ்வாறு மந்திர பிரயோகங்களை பயன் படுத்தினால் 90 நாட்களிலும், யந்திர பிரயோகங்களை பயன் படுத்தினால் 60 நாட்களிலும், ஔஷதங்கள் எனப்படும் மருந்துக்களை பயன் படுத்தினால் 30 நாட்களிலும் பாதிப்புகள் ஏற்படும் என்பது பொதுவான கருத்து. மாந்த்ரீக சாஸ்திரத்தில் உபதேவதை வழிபாட்டின் மூலமாகவே இத்தகைய பிரயோகங்கள் செயல் படுத்தப்படுகின்றன.


                     உச்சிஸ்டசன்டாளி,உச்சிஸ்டகாளிகா, பந்தினி, மதனமேகலா, வடயட்சிணி. துமாவதி, சங்கதரணி போன்ற யட்சிணி உபாசனைகளை பயன்படுத்தி வசியம், தம்பனம், மோகனம், வித்வேசனம், மாரணம், உச்சாடனம் போன்ற பாதிப்புகள் ஏற்படுத்தப்படுகின்றன. உதாரணமாக உச்சிஸ்ட்ட சண்டாளி மூல மந்திரத்தை 1008 உரு நாற்பத்தி எட்டு நாட்க்கள் ஜெபம் செய்து மந்திர ஸித்தியானதும். கர்னீகரம்,புன்னாகமலர்,ஜபபுஷ்பம்,பாதிரி, பாற்குறண்டி இவற்றை முதல் முறையாக காய் விடும் தென்னை மரத்தின் இளனீரில் சேர்த்தரைத்து புடம்போட்டு உணவில் கலந்து கொடுத்தால் சத்ரு வசியம், ஸ்த்ரீவசியம், புருஷ வசியம் ஏற்படும் என்று ருத்ர ஸ்யாமளா என்ற நூலில் சொல்லப்பட்டுள்ளது. நீலி தாரா என்ற யட்சிணி உபாசனையை 1000 இலுப்பை சமித்தில் பசு நெய் கொண்டு ஹோமம் செய்து சந்தனம், கோரோசனை, கஸ்தூரி,புனுகு,கும்குமபூ,வெள்ளாடனை,ஆகியவற்றை அயகாந்த செந்தூரத்துடன் கலந்து மண்சட்டியின் உட்புறத்தில் பூசி ஒன்பது நாட்க்கள் நிழலில் அதன் பின் அரசு சமித்தில் பசு நெய் தடவி தீயிலிட்டு எறித்து அதன் தீயை மன்சட்டியில் காட்டி கரியாக எடுத்து அதோடு எண்ணை கலந்து உலர்த்தி திலகமாக இட்டால் பதி வசியம் ஏற்படும்.


                காமதேவனான மன்மதனின் ஐந்து வித மலர் அம்புகளான தாமரை, மாம்பூ, அசோகம், முல்லை, நீலோற்பவம் ஆகியவற்றை மசித்து அத்துடன் வெங்காரம், மனோசிலை,  உத்தரோணிபூ ஆகியவற்றை மணிக்கு ஒன்றாக கலந்து வேப்பெண்னை தவிர்த்து ஏதாவது ஒரு எண்னையில் கலந்து மூன்று நாட்க்கள் ஊறவைத்து உச்சிஸ்ட பைரவி மூலமந்திரத்தை மூன்று  வேளை மூன்று நாட்கள் வளர் பிறையில் உரு ஏற்றி உடல் முழுவதும் தேய்த்து மூன்று நாழிகை (ஒரு நாழிகை என்பது 24 நிமிடங்கள்) உடலில் ஊற விட்டு அதன்பின் ஸ்னானம் செய்தால் மன வேற்றுமையால் பிரிந்த கணவன் மனைவி ஓன்றாக சேர்வார்கள். என்றும்,( மனைவியின் மணம்,ஸ்பரிசம், நெருக்கம் கணவனின் அண்மையில் இருக்க வேண்டும்) மேற்படி கலவையை பனை ஓலையில் தேய்த்து மனைவியின் கூந்தல் ரோமம் மூன்றை பந்தனம் செய்து நன்றாக காய வைத்து விருப்பம் இல்லாத கணவனின் படுக்கையில் வைத்தால் அவனுக்கு மனைவிமீது அன்பும் நெருக்கமும் அதிகரிக்கும். மேற்சொன்ன ஐந்து பூக்களுடன் கன்று ஈனாத பசுவின் கோமியம் ஒரு பலம், சரம் கொன்றை மிளறு, தேவதாரு வேர், இலந்தை வேர்,வெண்டை வேர், வெம்பலி (வெள்ளை கொள்ளுகாடை வேர்) ஆகியவற்றை கலந்து மண்கலயத்தில் வைத்து காலை நேரத்து சூரிய ஒளியில் சூடாக்கி உடலில் தேய்த்து மூன்று நாழிகை கழித்து ஆணுடன் உறவு கொண்டால் அந்த ஆண் எந்த காலத்திலும் அந்த பெண்ணை விட்டு விலக மாட்டான். என்றும் பைரவி தந்த்ரம் என்ற நூலில் சொல்லப்பட்டிருக்கிறது.


                 இத்தகைய மருந்து கலவைகளை பெண்கள் தங்கள் கணவனிடம் பயன் படுத்தினால் அது அவர்களின் குடும்ப வாழ்வில் அதிக நெருக்கத்தையும் இன்பத்தையும் தரும் ஆனால் துரதிருஷ்டவசமாக சில பெண்கள் தங்களுக்கு பிடித்தமான அல்லது உதவிகரமான அல்லது வசதியான, திருமணமான ஆண்களிடம் பயன் படுத்தும் போது அது அந்த ஆடவனின் குடும்ப வாழ்வில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி விடுகிறது. அவ்வாறு தவறாக பயன்படுத்தி ஆண்களின் மனதை மற்றும் முயற்சிகளை தடுக்கவும் நமது பாரம்பர்ய சாஸ்திரங்கள் வழிகளை சொல்லி இருக்கின்றன. பெண்கள் தங்களுக்கு வேறு யாராவது எதிர்மறை பிரயோகங்களை செலுத்திவிடுவார்கள் என்ற பயம் இருந்தாலோ, எதிர்மறை பிரயோகங்களால் தன் கணவனின் உயிருக்கோ ஆரோக்கியத்திற்க்கோ பாதிப்பு ஏற்படும் என்ற பயம் இருந்தாலோ வைஜயந்தி யந்திரம் என்னும் அஸ்வரூட ரக்ஷையை வெள்ளி கிழமையும் பஞ்சமி திதியும் சேர்ந்து வரும் நாளில் மாங்கல்யத்தில் கோர்த்து அணிவது பாதுகாப்பை தரும். அஷ்வரூடா என்பவள் பராசக்தியின் பாஸ பானத்தில் இருந்து தோன்றியவள். கணவன் மனைவி ஒற்றுமைக்கும், குடும்ப அமைதிக்கும் உரிய தெய்வமாக தேவி மஹாத்மியம் சொல்கிறது.


                  ரக்ஷையில் இருக்கும் அஸ்வரூடா யந்திரம் கணவன் மனைவிக்கிடையே ஜென்ம பந்தம் எனப்படும் மன இணைப்பை அதிக படுத்துவதுடன், பகளாமுகி யந்திரம் - கணவன் மனைவி ஒர்ருமையான திருமண பந்தத்திற்கு ஏற்படும் ஆபத்தை தடுக்கும் ஆற்றல் கொண்டது. ஔஷதம் எனப்படும் மருந்துகள் கொடுக்கப் பட்டிருந்தால் என்ன வகையான மருந்துகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன என்பதை அறிந்து அவற்றை செயல் இழக்க செய்யும் எதிருரை மருந்துகளை ஸ்ரீ தேவி கார்த்யாயணி மந்திர பிரயோகத்தால் ஒன்பது வேளைகள் உரு ஏற்றி தேய் பிறை நாட்களில் உட்கொண்டால் செலுத்தப்பட்ட விஷம் உடல் கழிவுகள் வழியாக வெளியேரும். எதிர் மறை சக்திகளால் குடும்பதலைவனின் பொறுப்பின்மை அதிகரித்தாலோ, குடும்பத்தில் குழப்பங்களும் அமைதியின்மையும் நிலவினாலும் கார்த்யாயனி யந்திர பீடத்தை வீட்டில் வைத்து வெள்ளி மற்றும் செவ்வாய் கிழமைகளில் பூஜித்து வந்தால் அனைத்து வித ஸாகினி, டாகினி,மோகினி,பில்லி, சூனியம்,வைப்பு,ஏவல் முதலிய துஷ்ட சக்திகளின் பாதிப்புகளை தடுத்து நீக்கிவிடும்.

                                       ஸ்ரீ லக்ஷ்மி தாச சுவாமிகள் ,
                                       சர்வ சக்தி விருட்ச பீடம்,
                                       ஸ்ரீ சர்வ சக்தி சேவா டிரஸ்ட் ,
                                       26/6, கிச்சகத்தியூர்,
                                       இலுப்பாபாளையம் (போஸ்ட்),
                                       சிறுமுகை - 641302
                                       தமிழ்நாடு, இந்தியா.
                                       செல் : 99440 99980, 85260 74891

வெள்ளி, 27 டிசம்பர், 2013

திருமூலர் வரலாறு

திருமூலர் வரலாறு செந்தமிழ்ச் சிவாகமம்: `சிவபூமி` எனப் போற்றப் பெறுஞ் சிறப்புவாய்ந்த நம் நாட்டின் தொன்மை வாய்ந்த சமயமாகத் திகழ்வது; சைவ சமயமாகும். உலகமக்கள் உள்ளத்திலே தெய்வம் உண்டு என்னும் தெளிவினை நல்கி அன்பு நெறியில் ஒழுகப்பணித்து அறிவு நெறியை வளர்ப்பன தெய்வநெறிச் சிவம் பெருக்கும் சைவ சமய அருளாசிரியர்கள் அருளிய பன்னிரு திருமுறைகளாகும். திருமுறைப் பனுவலாகிய அருள் நூல்களுள் பத்தாம் திருமுறையாகத் திகழ்வது, தமிழ் மூவாயி ரமாகிய திருமந்திரமாகும். திருமந்திரமாலை என்னும் இத்திருமுறை, சைவசித்தாந்த சாத்திரமாகவும் இறைவன் திருவருளைப் போற்றிப் பரவும் தோத்திர மாகவும் விளங்குந் தனிச் சிறப்புடையது; வேத நெறியாகிய உலகியலொழுக்கத்தையும் மிகு சைவத் துறையாகிய சிவாகமவுண்மைகளையும் இனிய தமிழால் விரித்து விளக்குவது. உலக மக்கள் எல்லோரும் பொதுவாக மேற்கொள்ளுதற்குரிய நல் வாழ்க்கை முறையினையும் சிவநெறிச் செல்வர்களாற் சிறப்பாக மேற் கொள்ளத்தக்க ஞானயோக நுண்பொருள்களையும் ஒருங்கே விளக்குவதாய்ச் சைவசித்தாந்த மெய்ந்நூற் பொருளை அறிவுறுத்தும் செந்தமிழ்ச் சிவாகமமாகத் திகழ்வது இத்திருமந்திரமேயாகும்.
திருத்தொண்டர் திருவந்தாதியில்: திருமந்திர மாலையாகிய இத்திருவருட் பனுவலை அருளிச் செய்தவர், இறைவனருளால் எண்வகைச் சித்திகளும் பெற்றுச் சிவமே பெறுந்திருவினராய் எல்லாவுயிர்களிடத்தும் அருளுடையராய்ப் பன்னெடுங்காலம் சிவயோக நிலையில் அமர்ந்திருந்து `நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்` என்னும் நல்ல குறிக்கோளுடைய ராய்த் தாமுணர்ந்த ஞானப்பொருளைத் தண்ணார் தமிழால் உலகத்தார்க்கு வழங்கியருளிய திருமூல நாயனாராவர். இவ்வாசிரியரை.
``நம்பிரான் திருமூலன் அடியார்க்கும் அடியேன்`
-தி.7 ப.35 பா.5
என நம்பியாரூரராகிய சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருத்தொண்டத் தொகையிற் பரவிப் போற்றியுள்ளார். செந்தமிழ் நாட்டின் சிறந்த சிவயோகியாய் முக்காலமுணர்ந்த அறிவராகிய திருமூலநாயனாரது வரலாறு, திருத்தொண்டத் தொகையின் வகையாகிய (தி.11) திருத்தொண்டர் திருவந்தாதியிற் சுருக்கமாகவும் விரிநூலாகிய திருத்தொண்டர் புராணத்தில் விரிவாகவும் விளக்கப் பெற்றுள்ளது. நம்பியாண்டார் நம்பிகள் தாம் இயற்றிய (தி.11) திருத்தொண்டர் திருவந்தாதியில்,
குடிமன்னு சாத்தனூர்க் கோக்குல
மேய்ப்போன் குரம்பைபுக்கு
முடிமன்னு கூனற் பிறையாளன்
றன்னை முழுத்தமிழின்
படிமன்னு வேதத்தின் சொற்படி
யேபர விட்டெ னுச்சி
அடிமன்ன வைத்த பிரான்
மூல னாகிய அங்கணனே. -தி.11 ப.33 பா.36 எனவரும் திருப்பாடலில் திருமூல நாயனாரது வரலாற்றை வகுத்துக் கூறியுள்ளார். ``நற்குடிகள் நிலைபெற்று வாழும் சாத்தனூரிலே பசுக் கூட்டத்தை மேய்ப்போனாகிய இடையனது உடம்பிற் புகுந்து, சென்னியிலே நிலைபெற்ற வளைந்த பிறைச் சந்திரனை யணிந்த சிவபெருமானை முழுமை வாய்ந்த தமிழிற் கூறியவண்ணமே நிலைத்த வேதங்கள் சொல்லியபடியே பரவிப் போற்றி எனது தலையிலே தன் திருவடியினை நிலைபெறச் செய்தருளிய பெரியோன் திருமூலன் என்னும் பெயரையுடைய அருளாளனாவன்`` என்பது இத் திருப்பாடலின் பொருளாகும். சிவயோகியராகிய சித்தர் புகுந்திருந்த உடம்பு சாத்தனூரில் ஆநிரை மேய்க்கும் மூலன் என்னும் இடைய னுடைய உடம்பு என்பதும், இறைவன் அருள்வழி அவ்வுடம்பிற் புகுந்த சிவயோகியார் ஞான நிறைவுடைய முழுத் தமிழின்படியும் வேதத்தின் சொற்படியும் பிறைமுடிப் பெருமானாகிய சிவபெரு மானைப் பரவிப் போற்றிச் சிவாகம வேதப் பொருளைச் செந்தமிழால் அருளிச் செய் தார் என்பதும் இத் திருவந்தாதியால் இனிது புலனாதல் காணலாம்.
திருத்தொண்டர் புராணத்தில்: அருண்மொழித் தேவராகிய சேக்கிழாரடிகள், திருத் தொண்டத் தொகையின் விரியாகத் தாம் இயற்றிய திருத்தொண்டர் புராணத்திலே திருமூல நாயனாரது வரலாற்றினை இருபத்தெட்டுப் பாடல்களால் விரித்துக் கூறியுள்ளார்.
தென்னாடு வருகை: திருக்கயிலாயத்திலே சிவபிரானது திருக்கோயிலில் முதற் பெருங் காவல் பூண்டவர் திருநந்திதேவர். அவரது திருவருள் பெற்ற மாணாக்கராகிய சிவயோகியார் ஒருவர். அவர் அணிமா முதலிய எண்வகைச் சித்திகளும் வாய்க்கப் பெற்றவர்; அகத்திய முனிவர்க்கு நண்பர். அம் முனிவருடன் சில நாள் தங்குதற்கு எண்ணிய சிவ யோகியார், பொதியமலையை அடைதற்கு எண்ணித் திருக்கயிலாயத் தினின்றும் புறப்பட்டுத் தென்திசை நோக்கி வந்தார். வரும் வழியில் திருக்கேதாரம், பசுபதிநாதம் (நேபாளம்), அவிமுத்தம் (காசி), விந்தமலை, திருப்பருப்பதம், திருக்காளத்தி, திருவாலங்காடு ஆகிய திருத் தலங்களைப் பணிந்து காஞ்சி நகரையடைந்தார். அங்குத் திருவேகம் பத்தில் எழுந்தருளிய பெருமானை இறைஞ்சிப் போற்றினார். கல்வியிற் கரையிலாத காஞ்சி நகரில் வாழும் சிவயோகியர்களாகிய தவமுனிவர் பலருடனும் அளவளாவி மகிழ்ந்தார். பின்னர்த் திருவதி கையை யடைந்து திரிபுரமெரித்த விரிசடைக் கடவுளை வழிபட்டுப் போற்றினார். இறைவன் அற்புதத் திருக்கூத்தாடியருளும் திருச்சிற்றம் பலத்தினைத் தன்னகத்தே கொண்டு திகழும் பொற்பதியாகிய பெரும் பற்றப் புலியூரை வந்தடைந்தார். அங்குக் கூத்தப் பெருமானைப் போற்றித் தம் உள்ளத்தே பொங்கியெழுந்த சிவஞானமாகிய மெய் யுணர்வினால் சிவானந்தத் திருக்கூத்தினைக் கண்டுகளித்து ஆராத பெருவேட்கையினால் தில்லைப் பதியில் சிலகாலம் தங்கியிருந்தார்.
சாத்தனூரில்: தில்லைத் திருநடங்கண்டு மகிழ்ந்த சிவயோகியார், அங்கிருந்து புறப்பட்டுக் காவிரியில் நீராடி அதன் தென்கரையினை அடைந்தார். உமையம்மையார் பசுவின் கன்றாக இருந்து இறைவனை வழிபாடு செய்து அம்முதல்வனுடன் எழுந்தருளியிருந்து மன்னுயிர்க்கு அருள் புரியுந் திருத்தலமாகிய திருவாவடுதுறையை அணுகித் திருக்கோயிலை வலம் வந்து வழித்துணை மருந்தாகிய மாசிலா மணியீசரை வழிபட்டு மகிழ்ந்தார். அந்நிலையிலே அத் தலத்தை விட்டு நீங்காததொரு கருத்து அவருள்ளத்தே தோன்றியது. அதனால் அத்தலத்திலே தங்கியிருந்தார். ஆவடுதுறையீசர்பால் ஆராத காதலையுடைய சிவயோகியார், அத்தலத்தை அரிதின் நீங்கிச் செல்லத் தொடங்கினார். அவர் செல்லும் வழியிற் காவிரிக் கரையிலுள்ள சோலையிலே மேய்ந்துகொண்டிருந்த பசுக்கள் கதறி யழுவதனை எதிரே கண்டார். அந்தணர்கள் வாழும் சாத்தனூரிலே ஆநிரை மேய்க்குங் குடியிற் பிறந்த ஆயனாகிய மூலன் என்பான் அவ் விடத்தே தனியே வந்து பசு நிரையை மேய்க்குந் தொழிலில் ஈடு பட்டவன், தான் எடுத்த பிறவிக்குக் காரணமாகிய வினைகள் நுகர்ந்து தீர்ந்தமையால் அவனது வாழ்நாளைக் கூற்றுவன் கவர்ந்துகொள்ள உயிர்நீங்க அங்கு நிலத்தில் வீழ்ந்து இறந்து வெற்றுடலாய்க் கிடந்தான். அவனது உயிர்பிரியவே அவனால் அன்புடன் மேய்க்கப்பெற்ற பசுக்கள் அவனது உடம்பினைச் சுற்றி நெருங்கிநின்று மோப்பனவும் கதறுவனவுமாகி வருந்தின.
திருமூலராதல்: ஆக்களின் பெருந்துயரத்தைச் சிவயோகியார் கண்டார். அருளாளராகிய அவருள்ளத்திலே `பசுக்கள் உற்ற துயரத்தை நீக்குதல் வேண்டும்` என்னும் எண்ணம் இறைவன் திருவருளால் தோன்றியது, `இந்த ஆயன் உயிர் பெற்றெழுந்தாலன்றி இப்பசுக்கள் துயரம் நீங்கா`` எனத் தெளிந்த சிவயோகியார், தம்முடைய உடம்பினைப் பாதுகாப்புடைய ஓரிடத்தில் மறைத்து வைத்துவிட்டுத் தாம் பயின்றுணர்ந்த பரகாயப் பிரவேசம் (கூடுவிட்டுக் கூடுபாய்தல்) என்னும் பவன வழியினாலே தமது உயிரை ஆயனாகிய மூலனது உடம்பிற் புகும்படி செலுத்தித் திருமூலர் என்னும் பெயருடையராய் எழுந்தார். அவர் ஆயனுடம்புடன் எழுதலும், சுற்றி நின்ற பசுக்கள் யாவும் தம் துயரம் நீங்கி அன்பின் மிகுதியால் அவரது உடம்பினை நாத்தழும்ப நக்கிமோந்து கனைத்து மிகுந்த களிப்புடன் துள்ளியோடித் தாம் விரும்பிய இடங்களிற் சென்று புல்லை மேய்ந்தன. அதுகண்டு மகிழ்ந்த திருமூலர் பசுக்கள் விரும்பிப் புல்மேயும் இடங்களில் உடன் சென்று நன்றாக மேய்த்தருளினார். வயிறார மேய்ந்த பசுக்கள் கூட்டமாகச் சென்று காவிரியாற்றின் துறையில் இறங்கி நல்நீர் பருகிக் கரையேறின. திருமூலர் அப்பசுக்களைக் குளிர்ந்த நிழலிலே தங்கி இளைப்பாறச் செய்து பாதுகாத்தருளினார்.
ஊரவர் உண்மை உணர்தல்: அந்நிலையில் கதிரவன் மேற்குத் திசையை யணுக, மாலைப் பொழுது வந்தது. பசுக்கள் தத்தம் கன்றுகளை நினைந்து தாமே மெல்ல நடந்து சாத்தனூரை அடைந்தன. அவை செல்லும் வழியிலே தொடர்ந்து பின் சென்ற திருமூலர், பசுக்கள் தத்தமக்குரிய வீடுகளிற் சென்று சேர்ந்த பின்னர் அவ்வூர் வழியில் தனித்து நின்றார். அப்பொழுது ஆயனாகிய மூலனுடைய மனைவி ``என் கணவர் பொழுது சென்றும் வரவில்லையே, அவர்க்கு என்ன நேர்ந்ததோ`` என்று அஞ்சியவளாய்த் தன் கணவனைத் தேடிக் கொண்டு வழியெதிரே செல்பவள் திருமூலராகிய சிவயோகியார் நின்ற இடத்தை அடைந்தாள். தன் கணவனது உடம்பிற்றோன்றிய உணர்வு மாற்றத்தைக் கண்டாள். `இவர்க்கு ஏதோ தீங்கு நேர்ந்திருத்தல் வேண்டும்` என எண்ணினாள்; அவரைத் தளர்ச்சியின்றித் தன் வீட்டுக்கு அழைத்துச் செல்லும் கருத்துடன் அவருடம்பைத் தொடு தற்கு நெருங்கினாள். அதுகண்ட திருமூலராகிய சிவயோகியார் அவர் தம்மைத் தீண்டாதபடி தடுத்து நிறுத்தினார். நெருங்கிய சுற்றத்தார் எவருமின்றித் தனியளாகிய அவள் திருமூலரது தொடர்பற்ற தனி நிலையைக் கண்டு அஞ்சிக் கலக்கமுற்றாள். ``நும்பால் அன்புடைய மனைவியாகிய எளியேனை வெறுத்து நீங்குதலாகிய இதனால் எனக்குப் பெருந்துன்பத்தைச் செய்துவிட்டீர்`` என்று புலம்பி வாட்ட முற்றாள். நிறைதவச் செல்வராகிய திருமூலர் அவளைப்பார்த்து, ``நீ எண்ணியபடி உனக்கு என்னுடன் எத்தகைய உறவும் இல்லை` என்று சொல்லிவிட்டு அவ்வூரிலுள்ள பொது மடத்திற் புகுந்து சிவ யோகத்தில் அமர்ந்திருந்தார். தன் கணவனது தன்மை வேறுபட்டதனைக் கண்ணுற்ற மூலன் மனைவி, அது பற்றி யாரிடமும் சொல்லாமலும் தவநிலையினராகிய அவர்பால் அணையாமலும் அன்றிரவு முழுதும் உறங்காதவளாய்த் துயருற்றாள். பொழுது விடிந்தபின் அவ்வூரிலுள்ள நல்லோரை யடைந்து தன் கணவனது நிலைமையை எடுத்துரைத்தாள். அதனைக் கேட்ட பெரியோர்கள் திருமூலரை அணுகி அவரது நிலையை நாடி உற்று நோக்கினார்கள். `இது பித்தினால் விளைந்த மயக்கம் அன்று; சித்த விகாரக் கலக்கங்களை யெல்லாம் அறவே களைந்து தெளிவுபெற்ற நிலையில் சிவயோகத்தில் அழுந்திய கருத்தினராய் இவர் அமர்ந்திருக்கின்றார். இந்நிலைமை யாவராலும் அளந்தறிதற்கு அரியதாகும்` எனத் தெளிந்தார்கள். `இவர் இருவகைப் பற்றுக்களையும் அறுத்து ஞானோபதேசத்தால் பரமர் திருவடியைப் பெற்ற சீவன் முத்தர்களைப் போன்று எல்லாவற்றையும் ஓருங்கே அறியவல்ல முற்றுணர்வுடைய முனிவராக விளங்குகின்றார். எனவே முன்னை நிலைமைப்படி உங்கள் சுற்றத் தொடர்பாகிய குடும்ப வாழ்க்கையில் ஈடுபடமாட்டார்` என மூலனுடைய மனைவிக்கு எடுத்துரைத்தார்கள். அதுகேட்டு அவள் அளவிலாத் துயரத்தால் மயக்கமுற்றாள். அருகேயுள்ளவர்கள் அவளுக்குத் தேறுதல்கூறி வீட்டுக்கு அழைத்துச் சென்றனர்.
திருவாவடுதுறையில் சிவயோகம்: சாத்தனூர்ப் பொதுமடத்தில் சிவயோகத்தில் அமர்ந்திருந்த திருமூலர். யோகுகலைந்து எழுந்து முதல்நாளில் பசுக்கள் வந்த வழியினையே நோக்கிச் சென்று தமது உடம்பினை மறைத்து வைத்த இடத்தை அடைந்து தம் உடம்பைத் தேடிப்பார்த்தார். வைத்த இடத்தில் அவ்வுடம்பு காணப்படவில்லை. அது மறைந்து போன செயலை மெய்யுணர்வுடைய சிந்தையில் ஆராய்ந்து தெளிந்தார். `சிவபெருமான் உயிர்கள் பால்வைத்த பெருங்கருணை யினாலே அருளிச் செய்த சிவாகமங்களின் அரும்பொருள்களை இந் நிலவுலகில் திருமூலரது வாக்கினால் தமிழிலே வகுத்துரைக்கக் கருதிய திருவருட்டிறத்தால் சிவயோகியாரது முன்னைய உடம்பினை இறைவர் மறைப்பித்தருளினார்` என்ற உண்மையினைத் திருமூலர் தமது முற்றுணர்வினால் தெளிய வுணர்ந்தார். சாத்தனூரிலிருந்து தம்மைப் பின்தொடர்ந்து வந்த ஆயர் குலத்தவர்க்கும் தமக்கும் எத்தகைய உறவும் இல்லை என்று அவர்களுக்குத் தெளிவாக எடுத்துரைத்தார், அவர்களெல்லோரும் தம்மை விட்டு நீங்கியபின் சிவபெருமான் திருவடிகளைச் சிந்தித்து அவ்விடத்தை விட்டு நீங்கித் திருவாவடுதுறைத் திருக்கோயிலை அடைந்தார்; அங்கு எழுந்தருளிய அம்மையப்பரை வணங்கி அத் திருக்கோயிலின் மேற்றிசையிலுள்ள அரசமரத்தின் கீழ்த் தேவாசனத்தில் சிவயோகத்தில் அமர்ந்து, நெஞ்சத் தாமரையில் வீற்றிருந்தருளும் செம்பொருளாம் சிவபரம் பொருளுடன் உணர்வினால் ஒன்றியிருந்தார். திருமந்திரம் அருளிச் செய்தல் இங்ஙனம் சிவயோக நிலையில் அமர்ந்திருந்த திருமூல thiru moolar. ஊனொடு தொடர்ந்த பிறவியாகிய தீய நஞ்சினாலுளவாம் துயரம் நீங்கி உலகத்தார் உய்யும் பொருட்டு ஞானம் யோகம் சரியை கிரியை என்னும் நால்வகை நன்னெறிகளும் நால்வகை மலர்களாக விரிந்து ஞானமணம் பரப்பிச் சிவானந்தத் தேன் பிலிற்றும் திருமந்திர மாலையாகிய செந்தமிழ்ப் பனுவலை இறைவன் திருவடிக்கு அணிந்து போற்றும் நிலையில், ஒன்றவன் தானே, இரண்டவன் இன்னருள், நின்றனன் மூன்றினுள், நான்குணர்ந்தான், ஐந்து வென்றனன், ஆறு விரிந்தனன், ஏழும்பர்ச் சென்றனன், தானிருந் தானுணர்ந் தெட்டே.-தி.10 பாயி. பா.2 என்னும் திருப்பாடலைத் தொடங்கி, ஒராண்டுக்கு ஒரு திருப்பாடலாக மூவாயிரம் ஆண்டுகள் சிவயோகத் தமர்ந்திருந்து மூவாயிரம் திருப் பாடல்களைத் திருவாய் மலர்ந்தருளினார். இவ்வாறு தமிழ் மூவாயிரமாகிய திருமந்திர மாலையை நிறைவு செய்தருளிய திருமூல நாயனார் சிவபெருமானது திரு வருளாலே திருக்கயிலையை யடைந்து இறைவன் திருவடி நீழலில் என்றும் பிரியாதுறையும் பேரின்ப வாழ்வினைப் பெற்று இனி திருந்தார். திருமூலர் அருளிய திருமந்திர மாலை `நலஞ் சிறந்த ஞான யோகக் கிரியா சரியையெலாம் மலர்ந்த மொழிமாலையாகத் திகழ் கின்றது` எனச் சேக்கிழார் பெருமான் திருமூலநாயனார் வரலாற் றினைப் பெரிய புராணத்தில் விரித்துக் கூறியுள்ளார்.
திருமூலரது முன்னை நிலை: இங்ஙனம் திருமூல நாயனார் வரலாறாகச் சேக்கிழார் நாயனார் விரித்துரைத்த நிகழ்ச்சிகள் பலவற்றுக்குத் திருமந்திரத்தில் திருமூலர் தம் வரலாறு கூறும் முறையில் அருளிச் செய்த திருமந்திரப் பாடல்கள் அகச்சான்றுகளாக அமைந்துள்ளன. மூலன் என்னும் ஆயனது உடம்பிற் புகுந்து திருமந்திர மாலையை அருளிச் செய்த முனிவர்பிரான் திருக்கயிலையில் நந்தி தேவர்பால் ஞானோபதேசம் பெற்ற நான்மறையோகிகளுள் ஒருவர் எனவும் அருளாளராகிய அவர் சாத்தனூரை அடைந்த பொழுது மூலனால் மேய்க்கப்பெற்ற பசுக்களின் துயரம் நீங்கத் தமது சித்தித் திறத்தால் தமது உயிரை மூலனது உடம்பிலே புகச் செய்து, திருமூலர் என்னும் பெயர் பெற்றுத் திருமந்திர மாகிய செந்தமிழ் ஆகமத்தை அருளிச் செய்தார் எனவும் நம்பியாண்டார் நம்பியும் சேக்கிழா ரடிகளும் தெளிவாகக் கூறியிருத்தலால், திருமந்திர நூலாசிரியர்க்கு வழங்கும் திருமூலர் என்னும் இப்பெயர் அவர் மூலன் என்னும் ஆயனது உடம்பிற் புகுந்த பின்னரே உளதாயிற்று என்பது நன்கு புலனாகும். நந்தி தேவர் பால் அருளுபதேசம் பெற்ற நான்மறை யோகியராகிய அவர், தம்முன்னை நிலையில் அவர் பிறந்த ஊர், குடி, பேர் முதலியவற்றை அறிந்து கொள்ளுதற்குரிய வரலாற்றுச் சான்றுகள் தெளிவாகக் கிடைக்காமையால், அவரது வரலாறு கூற வந்த சேக்கிழாரடிகள், சிவயோகியார் மூலனுடம்பிற் புகுந்து திருமூலர் என்னும் பெயர் பெறுவதற்கு முன்னுள்ள அவர்தம் ஊர், பேர், குலம், முதலிய வரலாற்றுச் செய்திகளைக் குறித்து எதுவும் கூறாது விட்டார் எனக் கருதவேண்டியுள்ளது.

                                       ஸ்ரீ லக்ஷ்மி தாச சுவாமிகள் ,
                                       சர்வ சக்தி விருட்ச பீடம்,
                                       ஸ்ரீ சர்வ சக்தி சேவா டிரஸ்ட் ,
                                       26/6, கிச்சகத்தியூர்,
                                       இலுப்பாபாளையம் (போஸ்ட்),
                                       சிறுமுகை - 641302
                                       தமிழ்நாடு, இந்தியா.
                                       செல் : 99440 99980, 85260 74891

வியாழன், 26 டிசம்பர், 2013

நலங்கள் யாவும் நல்கும் நவாவரண பூஜை




நலங்கள் யாவும் நல்கும் நவாவரண பூஜை :

ஸ்ரீ சக்ர நாயகி, அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகியாக
விளங்குபவள், வேதங்கள் போற்றும் வேதநாயகி, அனைத்துலைகயும்
ஈன்றவள், அனைத்து உயிரினங்களுக்கும் அன்னையாக விளங்குபவள்,
மஹா மஹா சக்ரவர்த்தினியாக ஈரேழு பதினான்கு லோகங்கைளயும்
அரசாட்சி புரிபவள் - ஸ்ரீ மாதா புவேனஸ்வரி அம்பிகை.
அம்பிகையே  அனைத்திற்கும் காரணியாக எண்ணிப் போற்றி வழிபடும்
சாக்த வழிபாடு எனும் முறைப்படி செய்யப்படும் பூஜைகளில்
முதன்மையானதாகவும், மிக மேன்மையானதாகவும் விளங்குவது ஸ்ரீ
நவாவரண பூஜையாகும்.

ஸ்ரீ மாதா புவேனஸ்வரி அம்பிகை , க்ஷடர சாகரம் எனும் அலகிலாத
எல்லைகளுடைய பாற்கடலின் நடுவே, ஸ்ரீ நகரம் எனும் ஸ்ரீ
சக்ரத்தின் நடுவே  கற்பக விருட்சங்கள் நிறைந்ததும், சிந்தாமணி எனும்
கேட்டவுடன் வரமளிக்கக் கூடிய கற்களால் ஆன கருவறையில்,
மந்த்ரிணி, வாராஹி, அச்வாரூடா எனும் தனது சக்தி பரிவாரங்களுடன்
மஹா ராஜ ராஜேஸ்வரியாக, திரிபுர சுந்தரியாக, பஞ்ச ப்ரஹ்ம
ஆசனத்தில் அமர்ந்து அகிலங்கள் அனைத்தையும் பரிபாலனம் செய்து
வருகின்றாள்.

ஸ்ரீ நகரம் அல்லது ஸ்ரீ சக்ரம் ஸ்ரீ நகரம் அல்லது ஸ்ரீ சக்கரம் அல்லது
ஸ்ரீ யந்திரம் என்பது பொன்னாலும், ரத்தினங்களாலும் இழைக்கப்பட்ட ஒரு
அற்புதமான கோட்டை. அந்தக் கோட்டையினுள் ஒன்பது பிரகாரங்களின்
வாசல்கள் உண்டு. ஒன்பது பிரகாரங்களுக்கும் மத்தியில் அம்பிகை
கொலுவீற்றிருக்கின்றாள்.

ஸ்ரீ யந்திரத்தில் நாற்பத்து மூன்று முக்கோணங்கள் அமைந்துள்ளன.
ஒவ்வொரு முக்கோணத்திலும் ஒவ்வொரு அம்பிகை  ஸ்ரீ மாதா
புவேனஸ்வரி  அம்பிகைக்கு சேவை  புரிவார்கள். அம்பிகையின் குதிரைப்
படையை  அச்வாரூடா, யானைப் படையை  கஜமுகி, மந்திரியாக
மந்த்ரிணீ போன்ற அம்பிகைகள் பரிபாலனம் செய்கின்றார்கள்.
ஸ்ரீ நகரத்தின் நடுவே , கோடி சூர்ய பிரகாசத்துடனும், கோடி சந்திரர்களின்
குளிர்ச்சியுடனும், பக்தர்கைள எப்பொழுதும் பார்த்துக்கொண்டிருக்கும்
இமை மூடாத மீனைப் போன்ற கண்களுடனும், மாதுளம்பூவை  ஒத்த
நிறத்துடனும், பொன்னும், வைரமும், ரத்தினங்களும் இழைக்கப்பட்ட
கிரிடத்துடனும், அனைவருக்கும் அபயம் எனும் வகையில் காக்கும்
கரமும், ஆணவம், கன்மம், மாயை  எனும் மும்மலங்களை  அழிக்கும்
வகையில் பாசமும் அங்குசமும் கொண்டு, வேண்டுவோருக்கு
வேண்டுவனவற்றை  அருளும் வகையில் அமைந்து ஸ்ரீ மாதா
புவேனஸ்வரி  அம்பிகை  அருள்பாலிக்கின்றாள்.

ஸ்ரீ நவாவரண பூஜை  ஸ்ரீ சக்ரத்தினுள்ளே  இருக்கும் அனைத்து பரிவார
தெய்வங்களுக்கும் மற்றும் நடுநாயகமாக விளங்கும் ஸ்ரீ மாதா
புவேனஸ்வரி  அம்பிகைக்கும் அனைத்து பூஜை  அம்சங்களும் இணைந்த
வகையில் செய்யப்படுவது ஸ்ரீ நவாவரண பூஜை ஆகும்.
நவ (ஒன்பது) ஆவரணங்களில் (வரிசையில்) உள்ள
தெய்வங்களுக்கான பூஜை, அர்ச்சனை, தர்ப்பணம் போன்ற பூஜைகள்
நடத்தப்படும். ஒவ்வொரு ஆவரணத்திற்கும் உரிய பூஜை  முடிந்ததும்
ஒரு தீபாராதைன நடத்தப்படும். ஒன்பது தீபாராதைனகளுக்குப் பிறகு
சுவாஸினி பூஜை, கன்யா பூஜை  போன்ற பூஜைகள் நடைபெறும்.
புரஸ்சரணை என்பது உடனடி பலன் தரும் பூஜா முறையாகும். அதில்
பூஜை, அர்ச்சனை, ஹோமம், தர்ப்பணம், பலி, போஜனம் எனும் வரிசை
கிரமமாக அமைந்தது. புரஸ்சரணையை ஒத்தது ஸ்ரீ நவாவரண பூஜை.
இதில் யாகம் என்பது நேரடியாக இல்லாவிட்டாலும், பூஜை
செய்யும் சாதகன் தனனைத்தானே  பூஜை  முறையால் ஹோமாக்னி
போல் இருப்பதே இதன் சிறப்பம்சம்.

பூஜையும், தர்ப்பணமும் ஒரே  நேரத்தில் இணைந்து செய்யப்படும் பூஜை,
நவாவரண பூஜையை  தவிர வேறு எந்த வகையிலான பூஜையிலும்
கிடையாது. பூஜைக்கு மலரும், தர்ப்பணத்திற்கு இஞ்சி
துண்டத்தில் நனைத்த பாலையும் ஒரு சேர அர்ச்சிப்பது (பூஜையாமி
தர்ப்பயாமி நம:) இந்த பூஜையில் மிக மிகச் சிறப்பு வாய்ந்ததாகக்
கருதப்படுகிறது.

இந்த பூஜை  குரு ஸ்துதியில் ஆரம்பித்து குரு வந்தனத்தோடு முடிவதும்
மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

ஸ்ரீ நவாவரண பூஜையில் உள்ள பூஜைகள் :

மண்டப ப்ரவேச பூஜை, பூத சுத்தி, ஸங்கல்பம், குரு ஸ்தோத்ரம், அமரும்
ஆசனத்திற்குரிய பூஜை, பூஜிப்பவர்  தன்னைத்தானே மந்திர
மண்டலத்திற்குள் உட்படுத்திக்கொள்ளும் பூஜை, திக் பந்தனம், ப்ராண
ப்ரதிஷ்டை , ஸ்ரீ நகரத்திற்குரிய பூஜை, ஸகலவிதமான நியாஸ
பூஜைகள், கலச பூஜை, சங்குக்குரிய பூஜை, விசேஷ அர்க்கியம் எனும்
பிரஸாதமாகத் தரக்கூடிய, அஷ்டகந்தம் எனும் வாசனை  திரவியங்கள்
கலந்த பாலுக்கு உரிய பூஜை, ஆவாஹன உபசார பூஜை,
மங்களாராத்ரிகம் எனும் பூஜை  (சத்துமாவை விளக்காகக் கொண்டு
தீபாராதனை  செய்வது), சதுராயதனம் எனும் சிறப்பு பூஜை, குரு மண்டல
பூஜை, அதைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆவரணங்களுக்கான, ஒன்பது
வரிசைகளுக்கான பூஜை, பஞ்ச பஞ்சிகா பூஜை  எனும் பஞ்ச
ப்ரஹ்மாசனத்திற்குரிய பூஜை, ஸ்ரீ மாதா புவேனஸ்வரிக்கு சிறப்பு பூஜை,
தூப தீப நிவேதன பூஜை, பலிதானம், குரு வந்தனம், ஸஸாவாஸினி
பூஜை, கன்யா பூஜை, வேதார்ப்பணம் (வேதகோஷம்), நிருத்யார்ப்பணம்
(நாட்டியம்), கானார்ப்பணம் (பாடல்) என்று மிக அழகியதொரு
வரிசையில் ஸ்ரீ நவாவரண பூஜை அமைகின்றது.

பூஜை  பிரஸாதம் :

பூஜையின் நிறைவில் பிரஸாதமாக, ஸாமான்யர்க்கியம் எனும்
வலம்புரிச் சங்கில் உள்ள பூஜை  செய்யப்பட்ட தீர்த்தம் தெளிக்கப்படும்.
விசேஷ அர்க்கியம் எனும் பூஜை  செய்யப்பட்ட பால்
விநியோகிக்கப்படும்.
இவ்விரண்டையும் பெறுபவர்கள் அம்பிகையின் பரிபூரணமான
அருளையும், நவாவரண பூஜையின் முழு பலனையும் பெறுவார்கள்
என்று இந்த பூஜையின் பலஸ்துதியில் உள்ள ஸ்லோகம் கூறுகின்றது.
உடல் சுத்தத்திற்கு சங்கு தீர்த்தமும், உள்ளுறுப்புகளை  (மனதை  -
உள்ளத்தை) சுத்தம் செய்ய பூஜிக்கப்பட்ட பாலும் கொடுக்கப்படுகிறது.

வேத புராண இதிகாசங்களில் ஸ்ரீ நவாவரண பூஜை  :

இந்த பூஜையின் மகத்துவம் ஸ்ரீ ஸூக்தம், ஸ்ரீ தேவ ஸூக்தம் போன்ற
ச்ருதிகளிலும், தேவ உபநிஷத், கோனோபநிஷத், பஹ்ருவ்ருசோபநிஷத்,
பாவேனாபநிஷத் போன்ற உபநிஷதங்களிலும், பிரம்மாண்ட புராணம்
(ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமம்) போன்ற புராணங்களிலும், துர்கா சப்த
சதீயிலும், ராமாயணம், மஹா பாரதம் போன்ற இதிகாசங்களிலும்
காணப்படுகிறது.

ஸ்ரீமத் பாகவதத்தில் ருக்மிணி விவாகத்திற்கு முன்னதாக தேவி
வழிபாடு செய்ததாகவும், ராமாயணத்தில் ராமர் அம்பிகையை
வழிபட்டே  வெற்றி கொண்டதாகவும், மஹாபாரதத்தில் ஸ்ரீ கிருஷ்ணர்
அர்ஜுனனுக்கு துர்கை  வழிபாட்டினை  உபேதசம் செய்ததால் ஜெயம்
கொண்டதாகவும் கூறப்படுகிறது.
தேவிக்குரிய பூஜைகளை  பல்வேறு ஆர்ணவங்கள், வேதங்கள்,
புராணங்கள் கூறுகின்றன.
பரமசிவன் பார்வதி தேவிக்கு பல்வேறு தந்திரங்களை உபதேசித்த
பின்னர், தேவி கேட்டுக்கொண்டதற்கு இணங்க அனைத்து
தந்திரங்களின் சாரமாக ஸ்ரீ வித்யா எனும் ஸ்ரீ தந்திரத்தை  உபேதசம்
செய்தார். இதுவே  ஸ்ரீ புர உபாஸனை  அல்லது ஸ்ரீ சக்ர உபாஸனை
அல்லது ஸ்ரீ வித்யா உபாஸனை என்று அழைக்கப்படுகிறது. இந்த ஸ்ரீ புர
உபாஸைனையை  தத்தாத்ரேயர், தனது தத்த ஸம்ஹிதையில் த்ரிபுர
உபாஸனை  உட்பட அனைத்தையும் சுமார் 18000 ஸ்லோகங்களில் மிக
விரிவாகக் கூறியுள்ளார். தத்தாத்ரேயரிடமிருந்து பரசுராமர் வித்தைகள்
அனைத்தையும் கற்று சுமார் 6000 ஸதோத்திரங்களாக சுருக்கி
எழுதியுள்ளார். பரசுராமரின் சிஷ்யர் ஸமேதஸ் என்பவர் மேலும்
சுருக்கமாக தத்தருக்கும் ஸ்ரீ ராமபிரானுக்கும் இடைய நடைபெறும்
சம்பாஷணை வடிவில் நூல் இயற்றினார். இதுவே பரசுராம மஹா கல்ப
தந்திரம் அல்லது 'பரசுராம கல்ப சூத்திரம்' என்று அழைக்கப்படுகிறது.
தற்காலத்தில் செய்யப்படும் அம்பிகைக்குரிய அனைத்து பூஜை
அம்சங்களும் இந்த பரசுராம தந்திரத்தை ஒட்டியே  செய்யப்படுகிறது.
ஸ்ரீ லலிதோபாக்யானம், ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமம், சௌந்தர்ய லஹரி,
அபிராமி அந்தாதி ஆகிய நூல்களில் தேவியினுடைய பூஜை  மிக
அழகாக விளக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ வித்யா உபாஸனை  :

உபாஸனை என்றால் ஒரே  தெய்வத்தை  மனதில் மேன்மையானதாக
இருத்திக்கொண்டு அந்த தெய்வத்தையே  சதா சர்வ காலமும் நினைத்து
போற்றி வழிபாடு செய்வதாகும். ஸ்ரீ வித்யா என்பது அம்பிகையின் மூல
மந்திரங்களில் மிக மேன்மையானது. பதினாறு எழுத்துக்கைளக்
கொண்ட மந்திரம் ஸ்ரீ வித்யா எனப்படும். இந்த மந்திரம் அம்பிகையே
அனைத்திற்கும் காரண காரணியாக விளங்குகின்றாள் என்பதை
எடுத்துக்காட்டும் மிகச் சிறப்பு வாய்ந்த மந்திரம்.
ஸ்ரீ நவாவரண பூஜையை  தகுந்த குருவிடம் ஸ்ரீ வித்யா உபேதசம்
எடுத்துக்கொண்டவர்கள் மட்டுமே  செய்யேவண்டும்.
பூஜை  செய்யும் போது பூஜகன் மந்திரங்களால் சூழப்பட்டு, அஹமேத்வம்
எனும் சொல்லுக்கிணங்க பூஜகனே அம்பிகையாக மாறிச் செய்வது தான்
இந்த பூஜையின் மிக முக்கியமான அம்சமாகும். பூஜகன் பூஜனை
மந்திரத்தினால் மானசீகமாக தன்னை பூஜையில் எரித்துக்கொள்வதே
இந்த பூஜையின் யாகமாகக் கருதப்படுகிறது. ஆகையினாலேயே  இந்த
பூஜை  "ஸ்ரீவித்யா மஹா யாக க்ரமம்" என்று போற்றி
அழைக்கப்படுகிறது.

ஸ்ரீ என்றால் செல்வங்களை  வாரி வழங்கும் லக்ஷ்மிக்குரிய அக்ஷரம்.
வித்யா என்றால் கலை. இந்த பூஜையைக் காண்பதால் வாழ்விற்குத்
தேவையான செல்வம், புகழ் தரும் கலை  எனும் வித்தை  தன்னாலேயே
உண்டாகும் என்பது மரபு.

ஸ்ரீ நவாவரண பூஜையில் முத்திரைகள் :

இந்த பூஜையில் முத்திரை  மிக முக்கிய இடம் பெறுகிறது.
ஸ்ரீ தஷினாமூர்த்தியானவர் சனத்குமாரர்களுக்கு சின் முத்திரையின்
(ஆட்காட்டி விரலும் கட்டை  விரலையும் இணைப்பது) மூலமாக,
பேசாமல் பேசி பொருளுணர்த்தி உபேதசம் செய்வது போல, இந்த
பூஜையில் அம்பிகைக்கு முத்திரைகளால் பூஜைகளைச் செய்வது மிக
மேன்மையானதாக அமைகின்றது. ஆகையினால்தான், நவாவரண
பூஜை  ஆரம்பித்தது முதல் இறுதி வரை  பூஜகன் பூஜை  மந்திரங்களைத்
தவிர வேறேதுவும் பேசாமல் இருக்க வேண்டும் என்று இந்த பூஜை
வரையறுக்கிறது.

ஸ்ரீ நவாவரண பூஜையை  தரிசனம் செய்வதால் கிடைக்கும் பலன்கள் :

1 நற்குழந்தைப் பேறு,

2 அனைத்து தோஷங்களும் நீங்குதல்,

3 குழந்தைகளின் கல்வி மேம்படுதல்,

4 நல்ல இல்லற வாழ்க்கை,

5 அஷ்ட ஐஸ்வர்யங்களும் பெறுதல்,

6 உத்தியோகம், வியாபார அபிவிருத்தி,

7 ஸகல நோய்களும் நீங்குதல்,

8 வேண்டுவன அனைத்தும் பெறுதல்,

9 ஆனந்தமான, வசதியான அமைதியான வாழ்வு,

ஸ்ரீ நவாவரண பூஜை  பரார்த்த பூஜை, பராபரா பூஜை, ஸபர்யா நியாஸ
பூஜை, தஷிணாச்சாரம், வாமாசாரம் போன்ற பல்வேறு முறைகளில்
பல்வேறு இடங்களில் செய்யப்படுகின்றது.
அனைத்து தெய்வங்களுக்கும் மேலான ஒரே  தெய்வமான அம்பிகையை,
ஏகாக்ரமாக (ஒரே மனதாக) பூஜையில் ஈடுபாடு கொண்டு
செய்யப்படுவது,
இம்மை மறுமை  இரண்டிலும் சுபம் அளிக்கவல்லது,
மனம், வாக்கு, காயம்  எனும் முப்பொறிகளாலும், ஆணவம்,
கன்மம், மாயை  எனும் மும்மலங்களை அறுக்கக்கூடியது,
பிரம்மச்சரியம், இல்வாழ்வு, வானப்ரஸ்தம், சன்னியாஸம் என்ற சதுர்
(நான்கு) வர்ணத்திற்கும் பொதுவான பூஜை, சாலோகம், சாமீபம்,
சாரூபம், சாயுஜ்யம் எனும் நான்கு நற்பதவிகளைத் தருவது,
பஞ்ச (ஐந்து) தன்மாத்திரைகளாலும் (கண், காது, மூக்கு, வாக்கு,
சருமம்) பூஜை  செய்யப்படுவது, பஞ்ச (ஐந்து) யக்ஞத்தினால் (பிரம்ம
யக்ஞம், தேவ யக்ஞம், பூத யக்ஞம், பிதுர் யக்ஞம், மானுஷ்ய யக்ஞம்)
செய்யப்படும் பூஜையை விட மேலானது, காமம், குரோதம், உலோபம்,
மோகம், மதம், மாத்சர்யம் எனும் ஆறுவகை  பகைகளைக் களைவது,
மூலாதாரம், ஸ்வாதிஷ்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி,
ஆக்ஞா எனும் மனித உடலில் உள்ள ஆறுவகைச் சக்கரங்களை
உயிர்ப்பித்துத் தூண்டி பூஜைகளைச் செய்யப்படுவது,
உலகம் ஏழுக்கும் (பூலோகம், புவலோகம், சுவலோகம், மஹாலோகம்,
சனலோகம், தவலோகம், சத்யலோகம்) அதிபதியாக விளங்குபவளும்,
காப்பவளும் பின் கரந்து விளையாடுபவளும் ஆகிய அம்பிகையைத்
தொழுது பணிவது, அஷ்ட - எட்டு - (தனம், தான்யம், நிதி, பசு, புத்திரர்,
வாகனம், ஆற்றல், தைரியம்) ஐஸ்வர்யங்களைத் தருவது, அஷ்டமா
(எட்டு) சித்திகளை  (அணிமா, மகிமா, லகிமா, கரிமா, பிரார்த்தி,
பிராகாம்யம், ஈசித்வம், வசித்வம்) அருளூவது, குபேரனுக்கு நிகரான
செல்வங்களை  நிறைக்கும் நவ (ஒன்பது) நிதிகளை (சங்க நிதி,
பதுமநிதி, மகா பதுமம், மகரம், கச்சபம், முகுந்தம், குந்தம், நீலம், வரம்)
தரவல்லது ஸ்ரீ நவ (ஒன்பது) ஆவரண (வரிசை) பூஜை.
ஆவரணம் என்பதற்கு வரிசை  என்று ஒரு பொருளும், அடைப்பு அல்லது
மறைப்பு என்று ஒரு பொருளும் உண்டு.
நம் மனதில் உள்ள அழுக்கான ஒன்பது திரைகளை, மறைப்புகளை
விலக்கி நிர்மலமான பேரானந்தம் தரும் அம்பிகையின் ஸ்வரூபத்தை
தரிசனம் செய்வது இந்த பூஜையின் மிக முக்கிய தாத்பர்யம்.

                                       ஸ்ரீ லக்ஷ்மி தாச சுவாமிகள் ,
                                       சர்வ சக்தி விருட்ச பீடம்,
                                       ஸ்ரீ சர்வ சக்தி சேவா டிரஸ்ட் ,
                                       26/6, கிச்சகத்தியூர்,
                                       இலுப்பாபாளையம் (போஸ்ட்),
                                       சிறுமுகை - 641302
                                       தமிழ்நாடு, இந்தியா.
                                       செல் : 99440 99980, 85260 74891




யோகா முத்திரைகள்

முத்திரை யோகம் கதயோகத்தின் ஒரு அங்கம். எளிமையானது. சுலபமாக செய்யக் கூடியது. நம் விரல்களை பயன்படுத்தி செய்யக்கூடிய ஆசனங்களாகும். மற்ற விரல்களால் கட்டை விரலை தொடுவது இதன் முக்கிய அம்சம்.
சித்தா, ஆயுர்வேதம் மற்றும் 

யோகா இவற்றின் அடிப்படை தத்துவம் – உலகில் உள்ள அனைத்தும் ஐந்து மூலப் பொருட்களால் ஆனவை. இந்த ஐம்பூதங்கள் ஆகாயம், காற்று, தீ, நீர், நிலம் ஆகியனவாகும். இதில் ஆகாயம் “ஈதர்” என்று விஞ்ஞான ரீதியாக கூறப்படுகிறது. உலகின் பொருட்களை சூழ்ந்து இருப்பது ஆகாயம். பூமி அடர்த்தி மிகுந்தது. நீருடன் சேர்ந்த பூமி கப தத்துவமாக சொல்லப்படுகிறது. காற்று உருவமில்லாத ஆகாயத்துடன் சேர்ந்து உடலில் வாதத் தத்துவத்தை ஏற்படுத்துகின்றன. தீ பித்தம். வெளிச்சத்தை உண்டாக்கும். இந்த ஐம்பூதங்கள் உடலில் சமச்சீராக இருந்தால் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். இவைகளில் ஏதாவது ஒன்று பாதிக்கப்பட்டால் வியாதி உண்டாகும்.நமது கைகளின் ஐந்து விரல்கள் ஐம்பூதங்களை குறிக்கின்றன.

1. கட்டைவிரல் – தீ
2. ஆள்காட்டி விரல் – காற்று
3. நடுவிரல் – ஆகாயம்
4. மோதிரவிரல் – நிலம்
5. சுண்டுவிரல் – நீர்.

இந்த ஐந்து விரல்களை பயன்படுத்தி முத்திரை ஆசனங்கள் செய்தால் உடல் நலம் கூடும்.

முத்திரைகளை பயிலும் முறை

1. “பத்மாசனம்” போன்ற உட்காரும் ஆசனங்களில் அமர்ந்து யோகமுத்திரைகளை செய்வது சிறந்தது. ஆனால் நீங்கள் பல நிலைகளில் முத்திரைகளை செய்யலாம். டி.வி. பார்க்கும் போது, நிற்கும் போது, பயணிக்கும் போதும் செய்யலாம்.

2. ஞான முத்திரைதவிர மற்றவைகளை ஒரேசமயத்தில் இரண்டு கைகளை உபயோகித்து செய்யலாம்.

3. எல்லா பருவத்தினரும், எப்போது வேண்டுமானால் முத்திரைகளை செய்யலாம். விலக்கு “சூன்ய முத்திரை”. இதுமட்டும் காது கேட்காதவர்கள் மட்டும் செய்ய வேண்டிய பயிற்சி.

4. எல்லா முத்திரைகளையும், அக்னியை குறிப்பிடும் கட்டைவிரலை சேர்த்துத் தான் செய்ய வேண்டும்.

5. இவற்றை செய்யும் போது, விரலோடு விரலை மெதுவாக தொடவும். அழுத்த வேண்டாம்.

6. முதலில், ஆரம்பத்தில் 10-15 நிமிடம் இந்த யோகமுத்திரை பயிற்சிகளை செய்யவும். பிறகு தினமும் 45 நிமிடமாவது செய்ய வேண்டும்.

7. வலதுகை முத்திரைகள் உடலின் இடது பக்க அவயங்களுக்கு பலன் அளிக்கும். அதே போல் இடது கையினால் செய்யப்படும் பயிற்சிகள் வடபக்க உறுப்புகளுக்கு பலன் கொடுக்கும்.

முத்திரைகள் 100 வகைகள் உள்ளன. முக்கியமான சில

1. பிராண முத்திரை – மோதிர மற்றும் ஆள்காட்டி விரல்களை சேர்த்து வளைத்து கட்டை விரலை தொடவும்.
பயன்கள் – களைத்த உடலை புதுப்பிக்கும். நரம்புத்தளர்ச்சியை போக்கும் பார்வைத் திறன் அதிகரிக்கும். ஞானமுத்திரையுடன் சேர்த்து செய்தால், தூக்கமின்மை வியாதி குணமாகும். அபான முத்திரையுடன் சேர்த்து செய்தால் நீரிழிவு குணமாகும். உடலில் நோய் தடுப்புசக்தியை அதிகரிக்கும். பொதுவாக ஆரோக்கியம் மேம்படும்.

2. ஞான முத்திரை – இதில் வாயுவையும், அக்னியையும் சேர்ப்பது போல் ஆள்காட்டி விரலின் நுனியால் கட்டை விரல் நுனியை தொடவும். மற்ற விரல்கள் நிமிர்ந்து நிற்கவும்.
பயன்கள் – மூளைக்கு அதிக ரத்தம் பாயும். மூளை செயல்பாடு, ஞாபகசக்தி அதிகரிக்கும். முன்பு சொன்னபடி ‘பிராண முத்திரையுடன் செய்தால்’ தூக்கமில்லா வியாதியை தீர்க்கும்.

3. அபான முத்திரை – நடு விரல் மற்றும் மோதிர விரல்களின் நுனிகளை சேர்த்து கட்ட விரலின் அடிப்பகுதியை தொடவும்.
பயன்கள் – நீரிழிவு நோயினால் ஏற்படும் சிறுநீர் பாதிப்புகளை குறைக்கும். அடைப்பட்ட மூக்கு சளியை குறைக்கும். மல ஜலங்கள் சீராக பிரிய உதவும். வியர்வையை அதிகரித்து உடலின் நச்சுப் பொருட்களை களையும்.

4. அபான வாயு முத்திரை (மிருத்த சஞ்சீவினி முத்திரை) – ஆள்காட்டி விரல் (வாயு) நுனியை கட்டைவிரலின் (அக்னி) கட்டை விரலின் அடியை தொடவும் பிறகு நடு விரல் மற்றும் மோதிர விரல்களால் கட்டை விரல் நுனியை தொடவும்.
பயன்கள் – இந்த முத்திரை இதயத்திற்கு நல்லது. அதனால் இதன் மற்றொரு பெயர் இதய முத்திரை. உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கும். வாயு மற்றும் தலைவலியை குறைக்கும்.

5. வாயு முத்திரை – ஆள்காட்டி விரலால் கட்டை விரலின் அடி பகுதியை தொடுவது வாயு முத்திரை ஆகும். கட்டை விரல் வளைந்து மெதுவாக ஆள்காட்டி விரலின் கனுவை தொட வேண்டும்.
பயன்கள் – மூட்டு வலி – ஆர்த்தரைடீஸ், ரூமாடீஸம், ஸ்பாண்டிலோஸீஸ் இவற்றின் வலிகளை குறைக்கும். பிராண முத்திரையுடன் சேர்த்து செய்தால் முழு பயன் கிடைக்கும்.

6. பிருத்திவி முத்திரை- மோதிர விரல் நுனியால் கட்ட விரல் நுனியை தொடவும்.
பயன்கள் – உடலையும் உள்ளத்தையும் புதுப்பிக்கிறது. மன அமைதியை உண்டாக்கும். உடலை பருமனாக்கும்.

7. சூரிய முத்திரை – மோதிர விரலை வளைத்து அதன் நுனி கட்டை விரலை தொடவும். கட்டை விரல் வளைந்து மோதிர விரலை அழுத்த வேண்டும். இந்த முத்திரையை பத்மாசனத்தில் அமர்ந்து இரு கைகளால் செய்ய வேண்டும்.
பயன்கள் – டென்ஸன், அதிக உடல் பருமன் இவற்றை குறைக்கும். சோம்பலை போக்கும்.

8. வருன முத்திரை – சுண்டு விரல் நுனியை கட்டை விரல் நுனியால் தொடவும்.
பயன்கள் – சிறுநீரக கோளாறுகள் ரத்தத்தில் நச்சுப் பொருள்கள் நீர்மச் சத்து குறைவு சூளுக்கு இவற்றுக்கு எல்லாம் இந்த முத்திரை நல்ல சிகிச்சை.

9. லிங்க முத்திரை – இரண்டு உள்ளங்கைகளையும் சேர்க்கவும். இரண்டு கைகளின் விரல்களை ஒன்றுக்கொன்றுடன் பின்னிக் கொள்ளவும். இடது கட்டை விரலை மட்டும் விட்டுவிடவும். இந்த விரல் தனித்து நிமிர்ந்து நிற்கட்டும் வலது கையின் கட்டை விரலும் ஆள்காட்டி விரலும் லேசாக இடது கட்டை விரலை தொட்டுக் கொண்டு மற்ற விரல்களை பிடித்துக் கொள்ளவும்.
பயன்கள் – இந்த முத்திரையை குளிர்காலத்தில் செய்வது நல்லது. உடல் உஷ்ணம் அதிகரிக்கும். ஜீலதோஷம் இருமலுக்கு நல்லது. உடல் எடை குறைக்கும். இந்த பயிற்சியை செய்பவர்கள் பால், நெய், பழங்கள், மற்றும் தண்ணீர் இவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

10. சூன்ய முத்திரை – இந்த முத்திரையில் நடு விரல் கட்டை விரலின் அடி பகுதியை தொட வேண்டும். கட்டை விரல் வளைந்து நடு விரலின் கனுவை தொட வேண்டும்.
பயன்கள் – இந்த முத்திரை காது கோளாறுகளுக்கு சிறந்தது. வலது காதில் பாதிப்பு இருந்தால் இந்த முத்திரையை வலது கரத்தால் செய்ய வேண்டும். அதே போல் இடது காதில் கோளாறுகளுக்கு இடது கரத்தால் செய்ய வேண்டும். காது கோளாறு உள்ளவர்கள் இந்த முத்திரையை அடிக்கடி, 45 நிமிடமாவது செய்ய வேண்டும்.எச்சரிக்கை
1. காது கோளாறு இல்லாதவர்கள் இந்த முத்திரையை செய்யக் கூடாது. செய்தால் காதுகளில் அடைப்பு ஏற்படும்.
2. இந்த முத்திரையை செய்யும் பொழுது இரண்டு கைகளையும் உபயோகிக்க வேண்டாம்.

11. சங்க முத்திரை – இடது கை கட்டை விரலை வலது கை விரல்களால் பிடித்துக் கொள்ளவும். இடது ஆள்காட்டி விரல் வலது கை கட்டை விரலை தொட்டுக் கொண்டிருக்க வேண்டும். மீதமுள்ள இடது கை மூன்று விரல்களால் வலது கை விரல்களை லேசாக அழுத்தவும். இந்த பயிற்சியை கைகளை மாற்றி மாற்றி செய்யவும்.
பயன்கள் – தொண்டை பாதிப்புகள், தைராயீடு பிரச்சனைகள், ஜீரண கோளாறுகள் இவற்றை குறைக்கும். குரல் வளத்தை அதிகரிக்கும்.

12. ஆகாய முத்திரை – கட்டை விரலின் நுனியை நடு விரலால் தொடவும்.
பயன்கள் – இதயத்திற்கு நல்லது. தேவைப்பட்டால் மட்டும் இந்த முத்திரையை செய்யவும்.

நமது பழங்கால முனிவர்ககளும் சித்தரகளும் விரல் நுனிகளில் ஒரு வித மின்சக்தி இருப்பதாக கருதினர். முத்திரைகளை பயிலும் போது, இந்த மின்சக்தி பல பலன்களை தரும் என்று நம்பினர்.
நமது கைகளின் ஐந்து விரல்கள் ஐம்பூதங்களை குறிக்கின்றன

1. கட்டைவிரல் – தீ
2. ஆள்காட்டி விரல் – காற்று
3. நடுவிரல் – ஆகாயம்
4. மோதிரவிரல் – நிலம்
5. சுண்டுவிரல் – நீர்.

இந்த ஐந்து விரல்களை பயன்படுத்தி முத்திரை ஆசனங்கள் செய்தால் உடல் நலம் கூடும்.



                                       ஸ்ரீ லக்ஷ்மி தாச சுவாமிகள் ,
                                       சர்வ சக்தி விருட்ச பீடம்,
                                       ஸ்ரீ சர்வ சக்தி சேவா டிரஸ்ட் ,
                                       26/6, கிச்சகத்தியூர்,
                                       இலுப்பாபாளையம் (போஸ்ட்),
                                       சிறுமுகை - 641302
                                       தமிழ்நாடு, இந்தியா.
                                       செல் : 99440 99980, 85260 74891

திங்கள், 23 டிசம்பர், 2013

வேங்கை மரமும் சில உண்மைகளும்

                     
வேங்கை மரமும் சில உண்மைகளும்  என்ற தலைப்பில் வேங்கை மரம் எத்தனை வழிகளில் எந்தெந்த வழிகளில் மனிதனுக்கு பயன்படுகிறது என்பதனை பற்றி நாம் ஆராய இருக்கிறோம்.

                 வேங்கை மரம் நவ கிரகங்களில்  செவ்வாய் கிரகத்தின் சக்தியை பூரணமாக உடையது. இம்மரத்தை வெட்டினால் சிவப்பு நிறத்தில் பால் வடியும். ஏனென்றால் செவ்வாய் கிரகத்தின் கதிர்கள் சிவப்பு நிறமாகும். நம் தமிழ் கடவுளான முருகப் பெருமான் இம்மரத்தில் வாசம் செய்வதாக வேதங்கள் குறிக்கின்றன.

                 வேங்கை மரத்தின் பாலை நெற்றியில் வைத்துக்கொண்டால் பேய், பிசாசு, காற்று, கருப்பு இவைகள் நம்மை அண்டாது. ஆங்கில தேதி 9,18,27 ல் பிறந்தவர்களும் மேஷம் விருச்சிகம் இராசியில் பிறந்தவர்களும் இம்மரத்தின் பாலை நெற்றியில் வைத்துக்கொள்வதால் இதன் சக்தி உடலில் பரவி நல்ல ஆற்றல்களையும் வாழ்வில் உயர்வுகளையும் உண்டாக்கும்.

                                       ஸ்ரீ லக்ஷ்மி தாச சுவாமிகள் ,
                                       சர்வ சக்தி விருட்ச பீடம்,
                                       ஸ்ரீ சர்வ சக்தி சேவா டிரஸ்ட் ,
                                       26/6, கிச்சகத்தியூர்,
                                       இலுப்பாபாளையம் (போஸ்ட்),
                                       சிறுமுகை - 641302
                                       தமிழ்நாடு, இந்தியா.
                                       செல் : 99440 99980, 85260 74891


வியாழன், 12 டிசம்பர், 2013

தேவ தோஷம் ( தெய்வ சாபம் )

     
தேவ தோஷம் ( தெய்வ சாபம் ) என்பது நாம் வழிபடும் தெய்வங்களால் நமக்கு வருவதாகும். நாம் நாம் வழிபடும் தெய்வங்கள் கூட நமக்கு தோஷத்தை தருமா என்ற கேள்வி இங்கு எழலாம். உண்மை தான் நாம் வழிபடும் தெய்வங்களை முறையாக வழிபடாமல் விட்டால் கூட அது தோஷங்களாகும். அத்தகைய தோஷங்களை தேவ தோஷம் ( தெய்வ சாபம் ) என்கிறோம்.

                தேவ தோஷம் ( தெய்வ சாபம் ) என்பது  நமது இல்லங்களில் தலைமுறை தலைமுறையாக பூஜித்து வந்த தெய்வ படங்கள், தெய்வ சிலைகள், தெய்வீக எந்திரங்கள் இவற்றை சரிவர பூஜிக்காமல் விடுவது அல்லது அலட்சிய படுத்துவது ஆகிய காரணங்களால் தேவ தோஷம் ( தெய்வ சாபம் ) உண்டாகிறது.

          தேவ தோஷம் ( தெய்வ சாபம் )  ஒரு வீட்டில் உண்டானால்  அதனால் அந்த வீட்டில் எவ்வளவு சம்பாதித்தாலும் பணம் வீட்டில் தங்கது, தொடர்ந்து  வீண் செலவுகள் ஏற்பட்டு கொண்டே இருக்கும். உற்றார் உறவினர் நண்பர்கள் மூலம் செலவுகள், வம்பு, வழக்குகள், விபத்துகள், மருத்துவ செலவுகள், உறவுகள் பகையாக மாறுதல், அக்கம் பக்கம் வீட்டுகாரர்களால் சதா பிரச்சனைகள், கணவன் - மனைவி உறவில் விரிசல், தாம்பத்தியத்தில் வெறுப்பு முதலிய தொல்லைகள் அந்த வீட்டில் உண்டாகும்.

          தேவ தோஷம் ( தெய்வ சாபம் ) இருப்பவர்கள் சரியான பரிகாரங்களை செய்து கொள்ளுவதன் மூலம் மேற்கண்ட பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு நல்ல வாழ்வினை பெறலாம்.

                                       ஸ்ரீ லக்ஷ்மி தாச சுவாமிகள் ,
                                       சர்வ சக்தி விருட்ச பீடம்,
                                       ஸ்ரீ சர்வ சக்தி சேவா டிரஸ்ட் ,
                                       26/6, கிச்சகத்தியூர்,
                                       இலுப்பாபாளையம் (போஸ்ட்),
                                       சிறுமுகை - 641302
                                       தமிழ்நாடு, இந்தியா.
                                       செல் : 99440 99980, 85260 74891


புதன், 11 டிசம்பர், 2013

பிரேதசாபம் விளைவும் பரிகாரமும்

          பிரேத சாபம் என்பது ஒருவரது குடும்பத்தில் இறப்பு நேரும் போது  இறப்பு நடந்த இடத்தை சுற்றி 88 அடி தூரத்திற்கு தீட்டு ஏற்படுகிறது. இதனை பொருட்படுத்தாமல் உணவு அருந்துதல், பூஜைகள் செய்தல், தாம்பத்ய உறவு கொள்ளல் போன்ற காரியங்களில் ஈடுபடுதல், பிணத்தை வைத்துக் கொண்டு முறை செய்வதற்கு சண்டை போடுவது, பாகப்பிரிவினை  செய்வது, கடன் கொடுத்தோர் கடனை திருப்பி கேட்பது இத்தகைய காரியங்களால் பிரேத சாபம் தொடரும்

       விளைவு :
                             தீராத நோய்கள் ஏற்படும், அடிக்கடி விபத்துகள் ஏற்படும், மனநிம்மதி இல்லாமல் போகும். எடுத்த காரியங்கள் சுலபத்தில் முடியாது, மணவாழ்க்கையில் வெறுப்பு, பிரிவு ஏற்படும். புத்திர சோகம் உண்டாகும். தேவையற்ற பொருள் நஷ்டம் ஏற்படும்.

       எப்படி பிரேத சாபத்தை அறிவது :
                                                                           ஜாதகத்தில் இலக்னத்திற்கு 4ம் பாவத்தை கொண்டு எளிதில் அறியலாம்.

         பரிகாரம் :
                             1. புரட்டாசி மாதம் மஹாளய அமாவாசை அன்று நதிக்கரையில் இறந்தவர்களை நினைத்து சிரார்த்தம் கொடுக்கவும், விருட்ச பீடத்தில் நடைபெறும் பரிகார  பூஜைளில் கலந்துகொண்டு தோஷ விலக்கம் பெறலாம்.

ஞாயிறு, 1 டிசம்பர், 2013

வளமான வாழ்வு தரும் கருணை கல்

வளமான வாழ்வு தரும் கருணை கல்


வளமான வாழ்வு தரும் கருணை கல் பற்றி இந்த கட்டுரையில் நாம் விரிவாக காணலாம் . நாம் அதிர்ஷ்டங்களை அள்ளி வழங்குவதில் இராசி கற்களையும், நவரத்தினங்களையும், உபரதினங்களையும் அதன் குணங்களையும் கேட்டும் படித்தும், அனுபவத்தில் வாங்கி உபயோகப்படுத்தியும் இருப்போம்.நவரத்தினங்கள் என்பது மாணிக்கம், முத்து, புஸ்பராகம், கோமேதகம், வைரம், மரகதம், வைடூர்யம், நீலம், பவளம் ஆகும். உப இரத்தினங்கள் என்பவை டோபாஸ், அமிதிஸ்ட், சன் ஸ்டோன், மூன்ஸ்டோன், கார்னெட், டைகர்ஸ் ஐ, ஜிர்கான் போன்றவைகள் ஆகும். இந்த கற்கள் எல்லாம் ரசியின்படியும், எண்கணிதத்தின் படியும் ஜோதிடர்களால் நமக்கு சொல்லப்படும் கற்களாகும். இவைகள் கிரக ரீதியில் வரும் கேடு பலன்களை குறைத்து நமக்கு நல்ல பலன்களை வழங்குவதற்காக இறைவனால் உண்டாக்கப்பட்டது ஆகும்.

                ஆனால் நாம் இங்கு பார்க்கப்போவது வளமான வாழ்வு தரும் கருணை கல். இது உலகிலேயே கிடைப்பதற்கு அரிதான அறிய அற்புதமான கல் ஆகும். உலகம் முழுவதும் பல கல கட்டங்களில் பல சித்தர்களும், ஞனிகளும் தோன்றி பல அற்புதங்களை செய்துவந்ததை நாம் அனைவரும் படித்திருக்கிறோம். இவ்வகையில் தாய்லாந்து நாட்டில் உள்ள ஒரு மலையில் ஒரு அபூர்வ சித்தர் பல ஆண்டு காலமாக கடும் தவம் இயற்றி வந்தார். பலகாலமாக தவம் செய்து வந்த அந்த சித்தரின் சக்தி முழுவதும் அவர் அமர்ந்து தவம் செய்த அந்த மலை முழுவதும் வியாப்பித்து பரவியது. அந்த சித்தர் பல சித்திகளை பெற்று இறுதியில் அந்த மலையிலேயே ஜீவ சமாதி அடைந்தார்.
      
                   அந்த சித்தரின் சக்தி எல்லாம் ஒன்று கூடி பாதரசம் போல மாறி அந்த மலை முழுவதும் இருக்கிறது. வருடத்தின் ஒரு குறிப்பிட்ட புனிதமான நாளில் இது மலையில் இருந்து வெளியில் வருகிறது. இந்த பாதரசம் போன்ற திரவமே முன்பு நான் குறிப்பிட்ட வளமான வாழ்வு தரும் கருணை கல் ஆகும். பாதரசம் போன்ற திரவம் எப்படி கல்லாகும் என்ற கேள்வி எழலாம்.

                      இது எப்படி சாத்தியமாகிறது என்றல் அந்த மலையில் இன்றும் பல தவ சீலர்கள் தன்னலம் இன்றி ஆசா பாசங்களை துறந்து தவம் செய்து வருகிறார்கள். இவர்களை புத்தாஸ் (சித்தர்) என்று அங்கு அழைக்கிறார்கள். அந்த பாதரசம் போன்ற திரவம் வருடத்தின் ஒரு குறிப்பிட்ட நாளில் வெளிவரும் போது சில மந்திரங்களை பிரயோகம் செய்கிறார்கள். அந்த மந்திரங்களின் சக்தி பாதரசம் போன்ற திரவத்தை கல்லாக மாற்றுகிறது. பொதுவாக எந்த கற்களும் காந்தத்தில் ஒட்டுவதில்லை. ஆனால் இந்த அற்புத கல் காந்தத்தில் ஒட்டுகிறது. இத்தகைய அற்புத கல்லை ஒரு வருட காலம் போராடி அந்த அற்புத மலையில் தவமியற்றும் புத்தாஸ் (சித்தர்) இடம் பெற்றோம்.

                      இந்த அற்புத கல்லின் சக்தி என்ன?  இந்த கல்லை நாம் உடலில் அணிவதால் தெய்வங்கள் நமக்கு வசியமாகும். நாம் செய்யும் அனைத்து செயல்களிலும் நம்முடன் தெய்வங்கள் இருந்து வழிநடத்தும், அந்த செயல்கள் அனைத்திலும் வெற்றியை பெற்று தரும். இந்த அற்புத கல் ஜன வசியம், தன வசியம், தொழில் வசியம், புகழ், மேன்மை, வெற்றி, பாதுகாப்பு தருகிறது. இந்த அற்புத கல்லின் சக்தியை சொல்ல வார்த்தைகளில் அடங்காது. இந்த கல் நமது வாழ்வை வளமானதாக மாற்றுகிறது. தாய்லாந்தில் இந்த கல்லை நாம் பெரும் போது அந்த சித்தரிடம் இதனை பெறும்போது இந்த கல்லின் பெயரை கேட்டபோது தாய்லந்து வார்த்தையில் ஒரு பெயரினை சொன்னார். அதன் தமிழாக்கம் கருணை கல். அதாவது இந்த கல்லை நாம் அணிவதால் இறைவனின் கருணையுடன் நமக்கு உதவுவார்.  இந்த வளமான வாழ்வு தரும் கருணை கல் இந்த ஆண்டு 17 கற்கள் இறைவன் திருவருளால் எனக்கு கிடைத்தது. இந்த அற்புத கற்கள் பிராப்தம் உடையவர்களுக்கு மட்டுமே கிடைக்கும். தேவைப்படுவோர் சர்வ சக்தி விருட்ச பீடத்தை உடனே தொடர்பு கொள்ளவும். தொடர்புக்கு ஸ்ரீ லக்ஷ்மி தாச சுவாமிகள். செல் : 99440 99980, 85260 74891.