மொத்தப் பக்கக்காட்சிகள்

புதன், 15 ஜனவரி, 2014

ஜீவநாடி அற்புதங்களும் பேருண்மைகளும்


ஆதி என்னும் அசுதினாபுரம் கேளப்பா சொல்லுவேன்

இப்பாரதத்து பெருநகர் ஆங்கென் ஒளர் விரிசலும்
காலவழி தன்னிலே குறுக்கிடலும் விதியாகும்
வலுவிழர்ந்தார்ப் போல வாட்டமது கொண்டார்ப் போல
நின்றிடினும் கூட்டமது காண ஒளர்வழி
உலகுக்கு ஒளிஒத்து உத்தமர்க்குப் பெரும்பலன்
ஏற்றிய விளக்கொளி என்று ஞானியரும் ஜீவமுக்தரும்
யோகியரும் சித்தாதிப் பெருமுனியொரும் விண்டுரைதவாறு
தவஒளியாலே ஒளர்பலன் துல்லியமாய் எழுந்துபேச
துரிதத்தினால் துரியாதீதம் கடந்துமறு கண்ணும் ஒளர்வழிகண்டு
வையகத்தார்க்கு உறவென்னும் ஒளர்நிலை பதவி உகந்தேகூட்டவே
பாரதத்தின் பெருமைஒளி பருலகோர்க்குக் கண்ணொளியும்
நிறைபலம் காணச்செய்யும் விதியது இனியாகுமப்பா
                                                                                  - காகபுஜண்டர் ஜீவநாடி.     நாடியில் குறிப்பிட தகுந்த உயர்வான ஒன்று ஜீவநாடி ஆகும். இதுஒரு அதிசயநாடி என்றும் அற்புதநாடி என்றும் கூறினாலும் மிகையில்லை. ஜீவன் என்றால் உயிர், ஜீவநாடி என்றால் உயிர்நாடி என பொருள்படும், ஜீவிதம் என்றால் மனித வாழ்க்கை ஆகும். எனவே மனித வாழ்வில் தோன்றும் சிக்கல்களுக்கு, அந்த கேட்கும் நேரத்தில் உயிர்பெற்று பலன் சொல்வதால் அத்தகைய ஓலைச்சுவடிகளை ஜீவநாடி என்று போற்றுகிறோம். அவ்வாறு மனித வாழ்வில் முன் பிறவிகளில் செய்த கர்ம வினை பதிவுகளால் இந்த பிறவியில் நமக்கு வரும் கர்மவினையால் நாம் அடையும் துன்பங்கள் தீரவும் வழிகாட்டும் விதமாக சித்தர்களும், மகாமுனிவர்களும் இத்தகைய ஜீவநாடி ஓலைச்சுவடிகளை இயற்றினர்.

           சித்தர்கள் மற்றும் மகரிஷிகளின் ஜீவநாடி என்பது அரூபமாக நாடி படிப்பவரின் கண்களுக்கு ஒளிரும் மஞ்சள் நிறமுடைய எழுத்துக்களாய் தோன்றி பலன் கேட்பவரின் வினைபதிவினையும் அதனால் உண்டாகும் நல்ல மற்றும் தீய பலன்களையும், அவர்களுக்கு நேரும் துன்பங்களை போக்க செய்யவேண்டிய பரிகாரங்கள், பூஜைகள் மற்றும் செய்யவேண்டிய முறை முதலியவற்றை தெளிவாக பாடல்கள் வாயிலாக ஜீவநாடி படிப்பவர்க்கு உணர்த்தும். ஜீவநாடியை எல்லோரும் படித்து பலன் சொல்ல இயலாது, இறைஅருளும், சம்மந்தப்பட்ட சித்தர் மகரிஷிகளின் ஆசியும் இருந்தால் மட்டுமே அவர்களுக்கு ஜீவநாடி உயிர்பெற்று பலன் சொல்லும், மற்றவர் கண்களுக்கு சாதாரண ஓலைச்சுவடியாகவே காணப்படும்.

        இந்த உலக வாழ்வில் ஆன்மீகவழியில் நடந்தால் மட்டுமே நன்மைகளை பெறமுடியும், சித்தர்களின் சக்திகள் என்பது நாம் அறிந்த ஒரு விசயமாகும். இன்றைய விஞ்ஞானிகளுக்கு புரியாத பல விசயங்களை பலகோடி ஆண்டுகளுக்கு முன்பே கணக்கிட்டு சொன்னவர்கள் சித்தர்கள். இறைவனோடு இரண்டற கலந்தவர்கள் சித்தர்கள். இத்தகைய சித்தர்களால் சாதிக்கமுடியாத விஷயம் ஏதும்இல்லை. இத்தகைய சித்தர்கள் எழுதிய ஜீவநாடி உலகமக்களுக்கு கிடைத்த மாபெரும் பொக்கிஷமாகும். இத்தகைய ஜீவநாடி சுவடிகள் அரிதாகவே இருக்கின்றன. அத்தகைய ஜீவநாடி சென்னையில் மறைந்த ஜோதிட பெருமகனார் திரு.ஹனுமன்தாசன் அவர்களிடம் இருந்தது. அதன் மூலம் பயனடைந்தோர் பலர், அவர் வாசித்த சுவடி அகத்தியர் ஜீவநாடி ஆகும்.மேலும் தஞ்சையில் ஜோதிடர் திரு.கணேசன் அவர்களிடமும் ஒரு ஜீவநாடி சுவடி உள்ளது.            ஜீவநாடி என்பது நம்மை வாழ்விலும், வளத்திலும், ஆன்மீகத்திலும் உயரவைக்கும் உயிர்நாடி ஆகும். நம் வாழ்வின் அனைத்து சிக்கல்களுக்கும் உடனடி தீர்வினை தரும் உயர்நாடி ஜீவநாடி ஆகும். இத்தகைய அபூர்வசக்தி கொண்ட நந்தி மற்றும் அகத்தியர் சித்தரின் ஜீவநாடி எங்களின் சர்வசக்தி விருட்சபீடத்திற்க்கு இறையருளால், சித்தகளின் ஆசியால் வந்து சேர்ந்தது, அந்த அறிய ஜீவநாடியில் வந்த பாடலின் படி நாங்கள் சர்வசக்தி விருட்சபீடத்தை உருவாக்கி வருகிறோம். சர்வசக்தி விருட்சபீடத்தில் 27 நட்சத்திர பரிகார விருட்சங்களை நட்டு அனுதினமும் பூஜைகள் நடத்தி வரும் பக்தர்களின் குறைதீர ஜீவநாடி படித்து பலன்களை சொல்லிவருகிறோம்
                                       
                                       ஸ்ரீ லக்ஷ்மி தாச சுவாமிகள் ,
                                       சர்வ சக்தி விருட்ச பீடம்,
                                       ஸ்ரீ சர்வ சக்தி சேவா டிரஸ்ட் ,
                                       26/6, கிச்சகத்தியூர்,
                                       இலுப்பாபாளையம் (போஸ்ட்),
                                       சிறுமுகை - 641302
                                       தமிழ்நாடு, இந்தியா.
                                       செல் : 99440 99980, 85260 74891