மொத்தப் பக்கக்காட்சிகள்

திங்கள், 24 பிப்ரவரி, 2014

விருட்ச வழிபாடு செய்வது ஏன்?

               மனித உடல் பஞ்சபூத சக்திகளை உள்ளடக்கியே இறைவனால் உருவாக்கப்பட்டுள்ளது.  பஞ்சபூதங்களும் இணைந்து நிற்கும் ஒரு பொருளில்  ஜீவ ஐக்கியம் ( உயிர்ரோட்டம் ) உண்டாகும்.
           இயற்கையிலேயே பஞ்ச பூதங்களும் கலந்து  நிற்கும் பொருட்களில் தான் இறைவனை அமைக்கிறார்கள். அதனால் தான் கருங்கல்லில் தெய்வங்களை சிலைகளாக வடிக்கின்றனர், ஏனென்றால் கருங்கல்லில் பஞ்ச பூதசக்தி உண்டு. கருங்கல்லின் உள்ளே தேரை  வசிப்பது அனைவரும் அறிந்ததே. ஏனென்றால் பஞ்ச பூதங்கள் இனைந்து உள்ள  பொருளில் இயற்கையிலே உயிரோட்டம்  உண்டு, அதாவது மனிதன் விலங்குகள் செடிகொடிகள் மரங்கள் இயற்கையிலேயே உயிரோட்டம் ஜீவசக்தி  பெற்றவை. கருங்கல்லில் பஞ்சபூத சக்தி உண்டென்றாலும் அதில் ஜீவசக்தியை உண்டாக்கப்படுகிறது. அதற்கு பெயர் தான் பிராண பிரதிஷ்டை ஆகும். கருங்கல், பஞ்சலோகம் எதில் தெய்வ சிலைகளை செய்யப்பட்டாலும், அந்த சிலைகளில் பிராணபிரதிஷ்டை செய்து தெய்வங்களை ஆவாகனம் ( நிலைபெற ) செய்கின்றனர். அதனால் சிலைகளில் உயிரோட்டம உண்டாகி செயல்பட துவங்குகிறது.
          ஆனால் இயற்கையிலேயே பஞ்சபூதங்களால் தோன்றி இயற்கையிலேயே ஜீவசக்தியுடன் விளங்குவது விருட்சங்களாகும். கோயிலில் உள்ள சிலைகளை விட பல்லாயிரம் மடங்கு சக்தியுடையவை விருட்சங்கள் ஆகும். எனவே  தான் கோவில்களில் தல விருட்சங்களை முன்னோர்கள் அமைத்து வழிபட்டு வந்தனர்.
            விருட்சங்கள் ஜீவக்காந்த சக்தியுடையது. அதனால் தான் தெய்வங்கள் கூட விருட்சங்களுக்கு கீழ் அமர்ந்து  தவத்தை செய்தனர் என நாம்  சாஸ்த்திரங்கள் மூலம் அறிகிறோம். அவ்வகையில் உற்றுநோக்கினால்  அவ்வறிய விருட்சங்கள் அனைத்தும் ஒருங்கே அமையபெற்ற இடம் மாபெரும் சக்திகளை உடைய இடமாகும். அதுவே சர்வ சக்தி விருட்ச பீடமாகும்.
            விருட்ச பீடத்தில் உங்களின் தோஷம் நீங்க பரிகாரம் செய்தால் உடனே தோஷம் நீங்கும். விருட்சங்களை நட்டு வளர்தால் விருட்சங்கள் வளர வளர உங்கள் தொழிலும், வசதிகளும் விருட்சம் போல் வளர்ந்து வியாபித்து நிற்கும்.

  விருட்சபீட அமைவிடம் :
                                                        சர்வசக்தி நட்சத்திர விருட்ச பீடம்,
                                                        கிச்சகத்தியூர்,
                                                        இலுப்பாபாளையம் (அஞ்சல்),
                                                        சிறுமுகை - 641302,
                                                        கோயம்புத்தூர் (மாவட்டம்),
                                                        தமிழ்நாடு,
                                                        இந்தியா.
                                                        செல் : 85260 74891.
                                                                    99440 99980.

நன்கொடைகள் அனுப்ப :
                                                  A/C NAME : SRI SARVA SAKTHY SEVA TRUST
                                                  A/C NO       : 1031201001136,
                                                  BANK         ; CANARA BANK, SIRUMUGAI BRANCH
                                                  IFSC CODE ; CNRB0001031.