மொத்தப் பக்கக்காட்சிகள்

வியாழன், 5 ஜனவரி, 2017

மாந்த்ரீக மர்மங்கள் நேரடி பயிற்சி வகுப்பு

                                மாந்த்ரீக மர்மங்கள் நேரடி பயிற்சி வகுப்பு 

                   உலக நாடுகள் முழுவதிலும்  உள்ள நமது வாசகர்கள் பலர் எங்களை தொடர்பு கொண்டு ஜோதிட, மாந்த்ரீக பயிற்சி நமது சர்வ சக்தி விருட்ச பீடத்தில் நடத்தப்படுமா? என்று தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கின்றனர். அவர்களுக்கெல்லாம் இறைவனின் கட்டளை அதுவாக இருந்தால் நிச்சயம் பயிற்சி வகுப்புகள் நமது பீடத்தில், நமது ஸ்ரீ சர்வ சக்தி சேவா டிரஸ்ட் மூலியமாக நடத்தப்படும் என்று சொல்லி வந்தேன். தற்போது இறைவனின் உத்தரவும், எனது குருநாதரின் உத்தரவும் பயிற்சி வகுப்புகள் நடத்தும்படி கிடைத்தால் நமது பீடத்தில் பயிற்ச்சி வகுப்புகள் நடத்த இருக்கிறோம்.
                     
                 பல தலைமுறைகளாய் பாதுகாத்து வரப்பட்ட சித்தர்களின் அறிய ஓலைசுவடிகளில் உள்ள முறைகள் - எனக்கு எனது குருநாதர் உபதேசித்து - நான் கையாண்டு வெற்றிபெற்ற முறைகள், உலகில் பல மந்த்ரீகர்களும் செய்ய இயலாத காரியங்களை - நான் செய்து சாதனை படைத்த எளிய அறிய முறைகள் - பல ஆண்டு பாடுபட்டு நான் கற்றுக்கொண்ட முறைகள் - எவ்வித ஒளிவு - மறைவு இல்லாமல், நான் கற்ற குரு - சிஷ்ய முறையில் மாந்த்ரீக மர்மங்கள் நேரடி  பயிற்சி வகுப்பு உங்களுக்காக நடத்தப்படுகிறது. 

பயிற்சி காலம் :
                                  ஆறு மாதம்  நேரடி பயிற்சியும் பின் தீட்சையும் வழங்கப்படும். பிற மாந்த்ரீக பயிற்சி மையங்கள் இரண்டு மணி நேரத்தில் பயிற்சியும் தந்து தீட்சையும் தருகின்றனர். இது சாத்தியமாகுமா? எவ்வாறு சாத்தியமாகும், ஒரு சிஷ்யனுக்கு எந்த தெய்வ தீட்சை தரவேண்டும் என ஒரு குரு அறிந்து கொள்ளவே குறைந்த பட்சம் மூன்று நாட்கள் ஆகும். அவ்வாறு இருக்க எல்லா பயிற்சியும் அளித்து தீட்சை அளிக்க இரண்டு மணி நேரம் போதுமா? நமது சர்வ சக்தி விருட்ச பீடம் - ஆறு மாதங்கள்  நேரடி வகுப்பாக மாணவர்கள் தங்கி பயிலும் வண்ணம் ஏற்பாடுகளை செய்துள்ளோம். 
பயிற்சி விபரம் :
                                   எளிய முறையில் ஜோதிடம் பார்க்க ஜோதிட பயிற்சிஎண்கணித பயிற்சி, அதிர்ஷ்ட பெயர்களை அமைக்கும் முறை, அதிஷ்ட கற்கள் தேர்வு செய்யும் முறை, எளிய முறை ரோம ரிஷி பஞ்சபட்சி சாஸ்திரம், அஷ்ட கர்மங்கள் 1. வசியம் - இது மற்றவர்களை தன் வசப்படுத்துவது ( ராஜ வசியம், புருஷ வசியம், ஸ்திரி வசியம், தேவ வசியம், ஜன வசியம், தொழில் வசியம்,மிருக வசியம், சத்ரு வசியம், லோக வசியம் ), 2.ஸ்தம்பனம் - இது எந்த ஒரு இயக்கத்தையும் ஸ்தம்பிக்க செய்வது, 3.மோகனம் - இது பிறரை தன்மீது மோகிக்க செய்வது, 4.வித்வேஷனம் - இது ஒருவருக்கொருவர் பகையை உண்டாக்கி பிரிப்பது , 5.உச்சாடனம் - இது தீய சக்திகள் அனைத்தையும் இடத்தை விட்டு விரட்டுவதாகும்  ,6.அகர்ஷனம் - இது துர்தேவதைகளை தன்முன் பணிய வைப்பது, 7.பேதனம் - இது சுயநினைவற்று பேதலிக்க செய்வது, 8.மாரணம் - ஒருவரை உயிருக்கு கேடு விளைவிப்பது )  இவைகளுக்குண்டான எந்திர மந்திர மூலிகை பிரயோக முறைகள், எளிய முறை மைகள், அஞ்சனம் தயாரிக்க பயிற்சி ஏவல் - பில்லி - சூனியங்கள் நீக்கும் முறை, துர்தேவதைகள் முதல் பிரம்மராட்சசம் வரை அடக்கி கட்டும்  முறை, உடல்கட்டு கட்ட - அவிழ்க்க முறை, தியான பயிற்சி, யட்சனி வசிய முறை, அனைத்து காரியங்களுக்கான எந்திர - மந்திர முறை, உங்கள் வாழ்விலும் உங்களை நாடி வருபவர்களின் வாழ்விலும் வெற்றிகளை குவிக்க செய்யும் இரகசிய சஞ்சீவி மூலிகை பிரயோக வித்தை முறைகள் கற்று தரப்படும்.

பின்குறிப்பு :

                         இந்த பயிற்ச்சி வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு தங்குமிடம், உணவு இலவசமாக சர்வ சக்தி விருட்ச பீடத்திலேயே வழங்கப்படும். கட்டணம் ஏதும் கிடையாது. தீட்ஷை பெறும்போது மாணவர்கள் விரும்பிய காணிக்கையை கொடுத்து தீட்ஷை பெற்றுக்கொள்ளலாம்.
முன்பதிவு செய்ய :
                                       ஸ்ரீ லக்ஷ்மி தாச சுவாமிகள் ,
                                       சர்வ சக்தி விருட்ச பீடம்,
                                       ஸ்ரீ சர்வ சக்தி சேவா டிரஸ்ட் ,
                                       26/6, கிச்சகத்தியூர்,
                                       இலுப்பாபாளையம் (போஸ்ட்),
                                       சிறுமுகை - 641302
                                       தமிழ்நாடு, இந்தியா.
                                       செல் : 99440 99980, 85260 74891.
                                        E - mail : ssvbeedam@gmail.com.