வெள்ளி, 2 பிப்ரவரி, 2018

மூலம் நட்சத்திரம் - விருட்சம் - பரிகாரம்

     மூலம் நட்சத்திரம் - விருட்சம் - பரிகாரம்


                  மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மன உறுதி படைத்தவர்களாக இருப்பார்கள், திருமண வாழ்வில் சில பிரச்சனைகள் இருக்கும், எந்த செயலையும் செவ்வனே முடிக்கும் ஆற்றல் கொண்டவர்கள், ஆரோக்கிய குறைபாடு இருக்கும், அன்பு சாந்த குணம் கொண்டவர்கள், புத்திசாலிதனமும், திறமையும் ஆன்மீக நோக்கம் அதிகம் கொண்டவர்கள், முன்கோபமும் உண்டு, எதிரிகளை எளிதில் வெல்லும் ஆற்றல் கொண்டவர்கள், உழைப்புக்கு ஏற்ற சோம்பேறி தனமும் இருக்கும், எச்சரிக்கை உணர்வு மிகுந்தவர்கள், சிறிது முரட்டு சுபாவமும் உண்டு, மனதுக்குள் ஏதேனும் திட்டம் தீட்டியபடியே இருப்பார்கள், குறைவான புத்திர பாக்கியத்தை பெற்றிருப்பார்கள், தர்ம சிந்தனை, அதிக செல்வம், சுயகெளரவம், சுற்றத்தாரோடு ஒத்து வாழ்பவர்களாகவும் திகழ்வார்கள், உணர்ச்சி வசப்படுபவர்கள், புலனடக்கம் கொண்டவர்கள், சிலநேரங்களில் மன சலிப்பும் உண்டாகி வாட்டும்.


மூலம் நட்சத்திரம் - அதி தெய்வம் :

                மூலம் நட்சத்திரத்தின் அதிதெய்வம் ஸ்ரீ ஆஞ்சநேய பெருமான் ஆவர்.

மூலம் நட்சத்திரம் - அதி தேவதை :
                                 மூலம் நட்சத்திரத்தின் அதி தேவதை அஷ்ட திக்பாலகர்களில் ஒருவரும் தென்மேற்கு திசையின் அதிபதியுமான நிருதி பகவான் ஆகும்.


மூலம் நட்சத்திர மந்திரம் :


                       கராள வதனம் க்ருஷ்ணம் ந்ருவாகனம் !
                        ஊர்த்வகேசம் விரூபாக்ஷம் பஜே மூலாதி தேவதாம் !!


ஆஞ்சநேயர் காயத்திரி :                        ஸ்ரீஆஞ்சநேயாய வித்மஹே வாயுபுத்ராய தீமஹி !
                        தந்நோ அனுமத் ப்ரசோதயாத் !!


மூலம் நட்சத்திரம் - பரிகார விருட்சம் :
                  மூலம் நட்சத்திரத்தின் பரிகார விருட்சம் மா மரம் ஆகும்,  மூலம் நட்சத்திர அன்பர்கள் தான் பிறந்த மூலம் நட்சத்திரம் வரும் நாளில் மா மரம் தல விருட்சமாக உள்ள ஆலயங்கள் சென்று மா மரத்துக்கு நீர் உற்றுவதும், மா மரத்தடியில் தியானம் செய்வதும், விருட்ச பரிகாரங்கள் செய்துகொள்வதும் சிறந்த பரிகாரங்கள் ஆகும். மூலம் நட்சத்திர அன்பர்கள் ஆஞ்சநேயர்  காயத்திரி, அதிதேவதை  மந்திரங்களை மா  மரத்தின் அருகில் அமர்ந்து ஜெபம் செய்வது வாழ்வில் தோன்றும் துன்பங்களை நீக்கி இன்பமான வாழ்வும், செய்யும் செயல்களில் எல்லாம் வெற்றியும், உடலை வாட்டும் நோய்கள் தீர்ந்து நீண்ட ஆயுளும், வற்றாத செல்வமும், மங்காத புகழும் பெற்று நீடுடி வாழலாம்.

சனி, 27 ஜனவரி, 2018

கேட்டை நட்சத்திரம் - விருட்சம் - பரிகாரம்

                              கேட்டை நட்சத்திரம் - விருட்சம் - பரிகாரம் 


                              தர்ம குணம் கொண்டவர்கள், உறவினர்களின் தொல்லைகளுக்கு ஆளாவார்கள், தந்திரசாலிகள், அடிக்கடி கோபமும் கொள்வார்கள், புத்திர பாக்கியம் அதிகம் கொண்டவர்கள், மற்றவர்களால் மதிக்கப்படுபவர்கள், சிந்தித்து எழுதக்கூடியவர்கள், மனதளவில் ஒழுக்கம் குறைவு, காம உணர்ச்சி கொண்டவர்கள், மற்றவர்களை எளிதில் எரிச்சல் ஊட்டுபவர், போராடுவதில் ஆர்வமுண்டு, இசையில் ஆர்வமுண்டு, உடன் பிறந்தவர்களை ஆதரிப்பவர்கள், கூர்மையான பார்வை உடையவர்கள், எளிதாக கடுமையான சொற்களை பேசி விட்டு பின் வருந்தி மன்னிப்பும் கேட்டுக்கொள்வார்கள், நட்பு வட்டம் என்றும் இவர்களை சூழ்ந்திருக்கும், உண்மையை பேசுவதும் உண்மையாக நடப்பதும் போற்றப்படும் குணங்கள், நியாயத்திற்க்காக போராடுவார்கள், உயர்பதவிகளை அடைபவர்கள், தனது முயற்சியால் அனைத்து சுகங்களையும் பெறுபவர்கள்.அதி தெய்வம் :
                           கேட்டை நட்சத்திரத்தின் அதிதெய்வம் லக்ஷ்மி வராக பெருமாள் ஆவார்.


அதி தேவதை :


                          கேட்டை நட்சத்திரத்தின் அதிதேவதை இந்திரன் ஆவார், ஐராவதம் என்ற வெள்ளை யானையின் மீது அமர்ந்திருப்பவரும், வஜ்ராயுதம், அங்குசம் ஆகிய ஆயுதங்களை கைகளில் ஏந்தியவரும், ஆயிரம் கண்களை உடையவரும் தேவர்களின் தலைவரும் ஆவார், இந்த உலகையும் இயற்கை வளங்களையும் நிர்வகிப்பவர் இந்திரன் ஆவர்.


அதிதேவதை மந்திரம் :

                                இந்திரம் கஜவராரூடம் வஜ்ரபாச வசபயம் !
                                 கரே : சதுர்பி : ததம் ஜ்யேஷ்டாதீச்வர மாஸ்ரயே !!

வராஹ காயத்திரி :

                                பூவராஹாய வித்மஹே வஜ்ர ரூபாய தீமஹி !
                                 தந்நோ வராஹ ப்ரசோதயாத் !!


கேட்டை நட்சத்திர விருட்சம் :


Image result for பராய்


                        கேட்டை நட்சத்திரத்தின் பரிகார விருட்சம் பராய் மரம் ஆகும்,  கேட்டை நட்சத்திர அன்பர்கள் தான் பிறந்த கேட்டை  நட்சத்திரம் வரும் நாளில் பராய்  மரம் தல விருட்சமாக உள்ள ஆலயங்கள் சென்று பராய்  மரத்துக்கு நீர் உற்றுவதும், பராய் மரத்தடியில் தியானம் செய்வதும், விருட்ச பரிகாரங்கள் செய்துகொள்வதும் சிறந்த பரிகாரங்கள் ஆகும். கேட்டை நட்சத்திர அன்பர்கள் வராஹ காயத்திரி, அதிதேவதை  மந்திரங்களை பராய்  மரத்தின் அருகில் அமர்ந்து ஜெபம் செய்வது வாழ்வில் தோன்றும் துன்பங்களை நீக்கி இன்பமான வாழ்வும், செய்யும் செயல்களில் எல்லாம் வெற்றியும், உடலை வாட்டும் நோய்கள் தீர்ந்து நீண்ட ஆயுளும், வற்றாத செல்வமும், மங்காத புகழும் பெற்று நீடுடி வாழலாம்.
             

அனுஷம் நட்சத்திரம் - விருட்சம் - பரிகாரம்

                            அனுஷம் நட்சத்திரம் - விருட்சம் - பரிகாரம் :


                       அனுஷ நட்சத்திரத்தில் பிறந்த அன்பர்கள் பலராலும் பாராட்டப்படுபவர்களாக விளங்குவார்கள், இவர்கள் யாரை சார்ந்து உள்ளனரோ அவர்களுடைய லட்சியம் நோக்கங்களுக்கு உறுதுணையாக இருந்து அதன் மூலம் தானும் புகழும் அங்கீகாரமும் பெறுவர், அரசாங்க விருதுகளை பெரும் பேரு பெற்றவர்கள், உயர்ந்த அதிகாரமுள்ள பதவிகளை வகிக்கக்கூடியவர்கள், தன்னை நேசிப்பவர்களுக்கு தன்னையே அர்ப்பணிப்பவர்கள், ஆனாலும் இவர்களுடைய பொறாமை குணம், வெளிக்காட்டாத கோபம் ஆகியவை இவர்களிடம் உள்ள குறைகளாகும், இந்த குணங்களால் இவர்களுடைய பிடிவாதம் வலுப்பெற்று மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர், இசையில் பிரியமுள்ளவர்கள், வெட்க குணம் கொண்டவர்கள், நீதி நேர்மைக்கு கட்டுப்படுவார்கள், நல்லவர்களின் நட்பு, உண்மை, பிறருக்காக வாதாடுதல், புராதன பொருட்களில் ஆர்வம் போன்ற மனோபாவம் பெற்றவர், தாய் - தந்தைக்கு பிரியமானவர்கள், அவர்களை கடைசிவரை காப்பாற்றும் குணமுள்ளவராகவும் இருப்பார்கள், பிரயாணம் செய்வதில் விருப்பம் கொண்டவர்கள், அரசியல் செல்வாக்கு பெறுபவர்கள், வசதியும் ஆரோக்கியமும் உள்ளவர்கள், சிக்கனத்தை கடைபிடிப்பவர்கள், ஆழ்ந்த சிந்தனை கொண்டவர்கள், அனைவரிடமும் அன்பு காட்டக்கூடியவர்கள், சுகத்தை அனுபவிப்பவர்கள், வெளிநாடுகளுக்கு செல்லும் பேரு பெற்றவர்கள், பசியை பொறுக்கமாட்டார்கள், புகழ் பெறுபவர்கள்.

அதி தெய்வம் :


                               அனுஷம் நட்சத்திரத்தின் அதிதெய்வம் சூரிய நாராயண பெருமாள் ஆகும்.


அதி தேவதை :


                        அனுஷ நட்சத்திரத்தின் அதிதேவதை சூரிய பகவானின் அம்சமான மித்ரன். சூலம் அங்குசம் ஏந்தியபடி தாமரை மலரில் அமர்ந்த கோலத்தில் காட்சிதருபவர் மித்ரன்.சூரிய காயத்திரி மந்திரம் :

                           ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே பத்ம ஹஸ்தாய தீமஹி !
                             தந்நோ சூர்ய ப்ரசோதயாத் !!


அதிதேவதை மந்திரம் :

                            மித்ரம் பத்மாசனாரூடம் அனூராதேஸ்வரம் பஜே !
                              சூலாங்கு ச தரம் பாஹ்வோ : தேவம் ஸோநித வர்ணகம் !!அனுஷ நட்சத்திர விருட்சம் :

அனுஷ   நட்சத்திர அன்பர்களின் பரிகார விருட்சம் மகிழ மரம் ஆகும். அனுஷ  நட்சத்திர அன்பர்கள் தான் பிறந்த அனுஷ  நட்சத்திரம் வரும் நாளில் மகிழ  மரம் தல விருட்சமாக உள்ள ஆலயங்கள் சென்று மகிழ  மரத்துக்கு நீர் உற்றுவதும், மகிழ  மரத்தடியில் தியானம் செய்வதும், விருட்ச பரிகாரங்கள் செய்துகொள்வதும் சிறந்த பரிகாரங்கள் ஆகும். அனுஷ நட்சத்திர அன்பர்கள் அதிதேவதை மந்திரம், சூரிய காயத்திரி மந்திரங்களை மகிழ  மரத்தின் அருகில் அமர்ந்து ஜெபம் செய்வது வாழ்வில் தோன்றும் துன்பங்களை நீக்கி இன்பமான வாழ்வும், செய்யும் செயல்களில் எல்லாம் வெற்றியும், உடலை வாட்டும் நோய்கள் தீர்ந்து நீண்ட ஆயுளும், வற்றாத செல்வமும், மங்காத புகழும் பெற்று நீடுடி வாழலாம்.

வெள்ளி, 26 ஜனவரி, 2018

விசாகம் நட்சத்திரம் - விருட்சம் - பரிகாரம்

    விசாகம் நட்சத்திரம் - விருட்சம் - பரிகாரம் :               விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மனஉறுதி, வேகம், கட்டுப்படுமிக்கவர்கள். பக்தி மிகுந்தவர்களாக இருப்பார்கள். சிக்கனமானவர்கள், கவலையற்றவர்களாக இருப்பார்கள், எடுத்த காரியங்களை முடித்தே தீர வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள், முங்கோபமும் இவர்களிடம் காணப்படும், நீதி - நேர்மைக்கு கட்டுப்படுபவர்கள், சகல கலைகளையும் அறிந்தவர்கள், தான தருமத்தில் பிரியம் கொண்டவர்கள், திறமைசாலிகள், தாய் தந்தைக்கும், மற்றவர்களுக்கும் பிரியமானவர்களாக விளங்குவார்கள், நித்திரை பிரியர்கள், ஆக்க சிந்தனை, கற்பித்தல், பாதுகாத்தல், பயிற்சி அளித்தால் போன்ற குணநலன்களை பெற்றிருப்பார்கள். உறவினர்களுக்கு உதவி செய்யும் குணமும் உண்டு, நண்பர்களுடன் சேர்ந்திருப்பதில் மகிழ்ச்சி அடைவார்கள், கவர்ச்சியுடனும் தெளிவான வார்த்தைகளால் கருத்துக்களுடனும் பேசுவார்கள், தனது உடல் நலனில் அதிக அக்கறை காட்டமாட்டார்கள் அதனால் அடிக்கடி நோய்வாய்ப்பட நேரும்.


அதி தெய்வம் :
                                

         
       முருகப்பெருமானின் அபிமான நட்சத்திரம் விசாகம் ஆகும். விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முருகப்பெருமானை அதிதெய்வமாக கொள்ளலாம்.


அதி தேவதை : 
                                      விசாகம் நட்சத்திரத்தின் அதிதேவதை இந்த்ராக்னி ஆகும். இவர் தேவர்களின் புரோகிதன் ஆகும். அக்னி சொரூபம் ஆனவர்.


அதி தெய்வ மந்திரம் :

                      ஓம் தத்புருஷாய வித்மஹே மஹாஸேனாய தீமஹி !
                        தந்நோ ஷண்முக : ப்ரசோதயாத் !!


அதி தேவதை மந்திரம் :

                       இந்திராக்னி  ஸுபதெளஸ்யாதாம் 
                                விசாகா தேவதே உபௌ !
                         வராவேகரதாருடௌ வராரபீதி காராம் புஜெள !!


விசாகம் நட்சத்திர பரிகார விருட்சம் :


                           

விசாகம்   நட்சத்திர அன்பர்களின் பரிகார விருட்சம் விளா  மரம் ஆகும்.  விசாகம்  நட்சத்திர அன்பர்கள் தான் பிறந்த விசாகம் நட்சத்திரம் வரும் நாளில் விளா  மரம் தல விருட்சமாக உள்ள ஆலயங்கள் சென்று விளா  மரத்துக்கு நீர் உற்றுவதும், விளா  மரத்தடியில் தியானம் செய்வதும், விருட்ச பரிகாரங்கள் செய்துகொள்வதும் சிறந்த பரிகாரங்கள் ஆகும். விசாகம்  நட்சத்திர அன்பர்கள் ஷண்முக காயத்திரி, இனித்ராகினி  மந்திரங்களை விளா  மரத்தின் அருகில் அமர்ந்து ஜெபம் செய்வது வாழ்வில் தோன்றும் துன்பங்களை நீக்கி இன்பமான வாழ்வும், செய்யும் செயல்களில் எல்லாம் வெற்றியும், உடலை வாட்டும் நோய்கள் தீர்ந்து நீண்ட ஆயுளும், வற்றாத செல்வமும், மங்காத புகழும் பெற்று நீடுடி வாழலாம்.

        

வியாழன், 12 அக்டோபர், 2017

சுவாதி நட்சத்திரம் - விருட்சம் - பரிகாரம்

                                 சுவாதி  நட்சத்திரம் - விருட்சம் - பரிகாரம் 

            சுவாதி நட்சத்திரத்தில் தெளிந்த அறிவுள்ளவர்களாக இருப்பார்கள், தலமைப் பொறுப்பேற்கும் ஆற்றல் உள்ளவர்கள், கல்வியில் சிறந்து விளங்குவார்கள், நல்ல உணவை விரும்பி உண்பவர்கள், பிரபலமானவர்களது நட்பை எளிதில் பெற்றிடும் சாமர்த்தியம் உள்ளவர்கள், வாக்கில் சாதுர்யம் பளிச்சிடும், ஆனாலும் கலக பிரியராக இருப்பார்கள், எதிலும் ஆத்திரமும் அவசரமும் கொள்ளாதிருந்தால், இவர்களுடைய முயற்சிகள் எளிதாக வெற்றியாகும், கொடையாளிகளாக இருப்பார்கள், புகழ் பெற்று விளங்குவார்கள், தகுந்த சமயத்தில் உறவினர்களுக்கு உதவுவார்கள், சுதந்திரமாக வாழும் மனப்போக்கு உள்ளவர்கள், சொந்த தொழில் செய்யும் இந்த நட்சத்திர அன்பர்கள் அமோகமாக வாழ்வார்கள், தாங்களும் சௌகர்யமாக வாழ்ந்து, பிறரும் அப்படியே வாழ வேண்டும் என்று விரும்புவார்கள், இறையுணர்வு அதிகம் கொண்டவர்கள், மத்திய வயதைத் தாண்டியதும் கோயில், தீர்த்தம் என்று புனிதத் தலங்கள் தரிசிக்க பிரியப்படுவார்கள்.  


அதி தேவதையும், அதி தெய்வமும் :


சுவாதி நட்சத்திர அன்பர்களின் அதி தேவதை வாயு பகவானே ஆகும். ''லட்சுமி நரசிம்மரே'' சுவாதி நட்சத்திர அன்பர்களின் இஷ்ட தேவதை ஆகும்.

சுவாதி நட்சத்திர அதிதேவதை மந்திரம் 

வாயும் மிருக வராரூடம் ஸ்வாதி நட்சத்திர தேவதாம்  !
கேட சர்மோஜ்வலகர த்விதயம் ப்ரணமாம்யஹம் !!


நரசிம்ம காயத்திரி  

ஓம் வஜ்ரநகாய  வித்மஹே தீஷ்ண தம்ஷ்ட்ராய தீமஹி !
தந்நோ நரசிம்ஹ  ப்ரசோதயாத்  !!


சுவாதி  நட்சத்திர பரிகார விருட்சம் 

சுவாதி நட்சத்திர  அன்பர்களின் பரிகார விருட்சம் மருத மரம்   ஆகும்.  சுவாதி நட்சத்திர அன்பர்கள் தான் பிறந்த சுவாதி     நட்சத்திரம் வரும் நாளில் மருத  மரம் தல விருட்சமாக உள்ள ஆலயங்கள் சென்று மருத  மரத்துக்கு நீர் உற்றுவதும், மருத மரத்தடியில் தியானம் செய்வதும், விருட்ச பரிகாரங்கள் செய்துகொள்வதும் சிறந்த பரிகாரங்கள் ஆகும்.  சுவாதி நட்சத்திர அன்பர்கள் . சுவாதி நட்சத்திர  காயத்திரி,  சுவாதி       நட்சத்திர  மந்திரங்களை  மருத மரத்தின் அருகில் அமர்ந்து ஜெபம் செய்வது வாழ்வில் தோன்றும் துன்பங்களை நீக்கி இன்பமான வாழ்வும், செய்யும் செயல்களில் எல்லாம் வெற்றியும், உடலை வாட்டும் நோய்கள் தீர்ந்து நீண்ட ஆயுளும், வற்றாத செல்வமும், மங்காத புகழும் பெற்று நீடுடி வாழலாம்.


            நமது சர்வ சக்தி விருட்ச பீடத்தில் 27 நட்சத்திரங்களுக்கு உண்டான பரிகார விருட்சங்களும் பிரதிஷ்டை செய்து தினசரி பரிகார பூஜைகள் நடை பெற்று வருகின்றன. இவை மட்டுமின்றி மகா விருட்சங்களான ருத்ராட்சம், மஹா வில்வம், சரகொன்றை மற்றும் அதி முக்யமான பரிகார விருட்சங்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளது. இந்த விருட்சங்களுக்கு நடுவே பஞ்சம் மற்றும் பஞ்சமஹா பாவங்கள் சர்வ தோஷங்களை நீக்கும் பஞ்ச லிங்கங்களும் + பாதாள லிங்கமும் பிரதிஷ்டை செய்ய பணிகள் நடைபெற்று வருகிறது. எனவே சர்வ சக்தி விருட்ச பீடம் மிக உயர்ந்த பலன்களை தரும் நட்சத்திர பரிகார ஸ்தலம் ஆகும். உங்கள் வாழ்வு வளம் பெற இங்கு வந்து பரிகாரங்களை செய்து கொள்வது மிக்க பலன்தரும், உங்கள் வாழ்வு மலர உங்கள் துன்பங்களை களைய பஞ்ச லிங்க + பாதாள லிங்க பிரதிஷ்டை திருப்பணியில் உங்களையும் இணைத்துக்கொள்ளுங்கள், நன்கொடைகள் தந்து உதவுங்கள், திருப்பணிக்கு நன்கொடை அளிக்கும் அன்பர்களின் வாழ்வு சிறக்க அவர்கள் பிறந்த நட்சதிரதன்று (ஆயுள் முழுதும்) தொடர்ந்து பரிகார பூஜைகள் அவர்களுக்காக நடத்தப்படும்.

முகவரி :                        
                                      ஸ்ரீ லக்ஷ்மி தாச சுவாமிகள் ,
                                       சர்வ சக்தி விருட்ச பீடம்,
                                   விருட்சபீடம் சேவா சாரிட்டபிள் டிரஸ்ட் ,
                                       26/6, கிச்சகத்தியூர்,
                                       இலுப்பாபாளையம் (போஸ்ட்),
                                       சிறுமுகை - 641302
                                       தமிழ்நாடு, இந்தியா.
                                       செல் : 99440 99980, 85260 74891.

சித்திரை நட்சத்திரம் - விருட்சம் - பரிகாரம்

                                 சித்திரை நட்சத்திரம் - விருட்சம் - பரிகாரம் 

            சித்திரை  நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இனிய சொற்களையே பேசுவார்கள், தேசபக்தி மிகுந்தவர்கள், புலமையும் அறிவாற்றலும் உள்ளவர்கள், எதிலும் வெற்றிபெறக் கூடியவர்கள், பெண்களிடம் சரளமாக பழகுவார்கள், எல்லோரிடமும் அன்பாக நடந்து கொள்வார்கள், பெரும்பாலும் தாராள மனம் இருக்காது, ஆனால் கனிவாக பேசி காரியம் சாதிப்பதில் சமர்த்தர்கள், எப்போதும் எதைபற்றியாவது நினைத்து கவலைப்படுவார்கள், அதனால் ஆழ்ந்த உறக்கம் இருக்காது, அடக்கியாளும் திறனுடையவர், அடிக்கடி கோபப்படும் சுபாவம் உள்ளவர்கள், அரசியலில் செல்வாக்கு பெற்று திகழ்வார்.   


அதி தேவதையும், அதி தெய்வமும் :

சித்திரை நட்சத்திர அன்பர்களின் அதி தேவதை விஷ்ணு அம்சமான ''துவஷ்டா''. சங்கு - சக்கரத்தை கைகளில் ஏந்தி அழகிய ரதத்தில் அமர்ந்திருப்பவர். இவர் சுக்கிரனின் குமாரர். சித்திரை நட்சத்திர அன்பர்கள் சக்ரத்தாழ்வாரையும் வழிபடலாம்.

சித்திரை  நட்சத்திர அதிதேவதை மந்திரம் 

த்வஷ்டாரம் ரதமாரூடம் சித்ரா நக்ஷத்ர தேவதாம் !
பத்மாஸனஸ்தம் சாயேஷம் ஹஸ்த நக்ஷத்ர தேவதாம்  !!


சக்ரத்தாழ்வார் காயத்திரி  

ஓம் சுதர்சனாய   வித்மஹே மகா ஜ்வாலாய    தீமஹி !
தந்நோ சக்ர ப்ரசோதயாத்  !!


சித்திரை  நட்சத்திர பரிகார விருட்சம் 

சித்திரை  நட்சத்திர  அன்பர்களின் பரிகார விருட்சம் வில்வம்  மரம்   ஆகும்.  சித்திரை  நட்சத்திர அன்பர்கள் தான் பிறந்த சித்திரை      நட்சத்திரம் வரும் நாளில் வில்வம்   மரம் தல விருட்சமாக உள்ள ஆலயங்கள் சென்று வில்வம்    மரத்துக்கு நீர் உற்றுவதும், வில்வம்      மரத்தடியில் தியானம் செய்வதும், விருட்ச பரிகாரங்கள் செய்துகொள்வதும் சிறந்த பரிகாரங்கள் ஆகும்.  சித்திரை      நட்சத்திர அன்பர்கள் . சித்திரை         நட்சத்திர  காயத்திரி,  சித்திரை      நட்சத்திர  மந்திரங்களை  வில்வம்        மரத்தின் அருகில் அமர்ந்து ஜெபம் செய்வது வாழ்வில் தோன்றும் துன்பங்களை நீக்கி இன்பமான வாழ்வும், செய்யும் செயல்களில் எல்லாம் வெற்றியும், உடலை வாட்டும் நோய்கள் தீர்ந்து நீண்ட ஆயுளும், வற்றாத செல்வமும், மங்காத புகழும் பெற்று நீடுடி வாழலாம்.


            நமது சர்வ சக்தி விருட்ச பீடத்தில் 27 நட்சத்திரங்களுக்கு உண்டான பரிகார விருட்சங்களும் பிரதிஷ்டை செய்து தினசரி பரிகார பூஜைகள் நடை பெற்று வருகின்றன. இவை மட்டுமின்றி மகா விருட்சங்களான ருத்ராட்சம், மஹா வில்வம், சரகொன்றை மற்றும் அதி முக்யமான பரிகார விருட்சங்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளது. இந்த விருட்சங்களுக்கு நடுவே பஞ்சம் மற்றும் பஞ்சமஹா பாவங்கள் சர்வ தோஷங்களை நீக்கும் பஞ்ச லிங்கங்களும் + பாதாள லிங்கமும் பிரதிஷ்டை செய்ய பணிகள் நடைபெற்று வருகிறது. எனவே சர்வ சக்தி விருட்ச பீடம் மிக உயர்ந்த பலன்களை தரும் நட்சத்திர பரிகார ஸ்தலம் ஆகும். உங்கள் வாழ்வு வளம் பெற இங்கு வந்து பரிகாரங்களை செய்து கொள்வது மிக்க பலன்தரும், உங்கள் வாழ்வு மலர உங்கள் துன்பங்களை களைய பஞ்ச லிங்க + பாதாள லிங்க பிரதிஷ்டை திருப்பணியில் உங்களையும் இணைத்துக்கொள்ளுங்கள், நன்கொடைகள் தந்து உதவுங்கள், திருப்பணிக்கு நன்கொடை அளிக்கும் அன்பர்களின் வாழ்வு சிறக்க அவர்கள் பிறந்த நட்சதிரதன்று (ஆயுள் முழுதும்) தொடர்ந்து பரிகார பூஜைகள் அவர்களுக்காக நடத்தப்படும்.

முகவரி :                        
                                      ஸ்ரீ லக்ஷ்மி தாச சுவாமிகள் ,
                                       சர்வ சக்தி விருட்ச பீடம்,
                                   விருட்சபீடம் சேவா சாரிட்டபிள் டிரஸ்ட் ,
                                       26/6, கிச்சகத்தியூர்,
                                       இலுப்பாபாளையம் (போஸ்ட்),
                                       சிறுமுகை - 641302
                                       தமிழ்நாடு, இந்தியா.
                                       செல் : 99440 99980, 85260 74891.

ஹஸ்தம் நட்சத்திரம் - விருட்சம் - பரிகாரம்

                                 ஹஸ்தம் நட்சத்திரம் - விருட்சம் - பரிகாரம் 

            'ஹஸ்தம்  நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கையின் பின் பகுதியில் செல்வந்தர்களாக விளங்குவார்கள். படிப்பில் சிறப்புடையவர்கள், ஊக்கமும் உயர்வான குணமும் படைத்தவர்களாக இருப்பார்கள். மகான்களை வணங்குவார்கள், தல யாத்திரை மேற்கொள்வதில் ஆர்வம் அதிகம் உண்டு, அறிய செயல்களை செய்து புகழ் பெறுவார்கள், பெருந்தன்மையும், மகிழ்ச்சியான சுபாவமும் உடையவர்களாக இருப்பார்கள், தாய் சொல்லை மதித்து நடப்பார்கள், ஆழ்ந்த யோசனையுள்ளவர்கள், அண்டியவர்களை காப்பாற்றுவார்கள், இரக்க சுபாவத்துடன் பாவம் - புண்ணியம் பார்த்து காரியங்களை செய்வார்கள், மக்கட்பேறு நிறைந்தவர்கள், பெண்களுடன் பழகுவதிலும் அழகாக பேசுவதிலும் தேர்ந்தவர்களாக இருப்பார்கள். எதிரிகளை தோல்வியுற செய்வதில் வல்லவர்கள், எடுத்த காரியத்தை முடித்தே தீரவேண்டும் என்ற விடாமுயற்சியுடன் எந்த வித இடையூறுகளையும் பொருட்படுத்தாமல் உழைப்பவர்கள், ஓரளவு தயாள குணமும் இருக்கும், எளிதில் கோபம்கொள்ளும் சுபாவமுடையவர்கள், எதற்கும் வெக்கப்படமாட்டார்கள், பசி உணர்வு அதிகம் இல்லாதவர்களாக இருப்பார்கள், பிறரை அழுத்தி தன்னை உயர்வு படுத்திக் கொள்ள தயங்க மாட்டார்கள், தந்தையாரின் கவனிப்பு இவர்களுக்கு சரிவர கிடைப்பது அரிது.    


அதி தேவதையும், அதி தெய்வமும் :
ஹஸ்தம் நட்சத்திர அன்பர்களின் அதி தேவதை சவிதா. சவிதா என்றால் சூரியன். துவாதச ஆதித்தர்களில் ஒருவர். ஏழு வர்ணங்கள் கொண்ட குதிரைகள் பூட்டிய ரதத்தில் பத்மாசனமிட்டு அமர்ந்த கோலத்தில் காணப்படுகிறார் இவர். ஹஸ்தம் நட்சத்திர அன்பர்கள் தங்கள் நட்சத்திர பலன்களை முழுமையாக பெற வேதபுரீஸ்வரரை வழிபடலாம்.


ஹஸ்தம்  நட்சத்திர அதிதேவதை மந்திரம் 

ஸவித ரமஹம் வந்தே ஸப்தாஸ்வ ரதவாகனம்  !
பத்மாஸனஸ்தம் சாயேஷம் ஹஸ்த நக்ஷத்ர தேவதாம்  !!


சூர்ய  காயத்திரி 

ஓம் ஆதித்யாய  வித்மஹே மார்த்தாண்டாய   தீமஹி !
தந்நோ சூர்ய ப்ரசோதயாத் !!


ஹஸ்தம்  நட்சத்திர பரிகார விருட்சம் 

ஹஸ்தம் நட்சத்திர  அன்பர்களின் பரிகார விருட்சம் வேல மரம்   ஆகும்.  ஹஸ்தம் நட்சத்திர அன்பர்கள் தான் பிறந்த ஹஸ்தம்     நட்சத்திரம் வரும் நாளில் வேல  மரம் தல விருட்சமாக உள்ள ஆலயங்கள் சென்று வேல    மரத்துக்கு நீர் உற்றுவதும், வேல     மரத்தடியில் தியானம் செய்வதும், விருட்ச பரிகாரங்கள் செய்துகொள்வதும் சிறந்த பரிகாரங்கள் ஆகும்.  ஹஸ்தம்     நட்சத்திர அன்பர்கள் . ஹஸ்தம்        நட்சத்திர  காயத்திரி,  ஹஸ்தம்     நட்சத்திர  மந்திரங்களை  வேல       மரத்தின் அருகில் அமர்ந்து ஜெபம் செய்வது வாழ்வில் தோன்றும் துன்பங்களை நீக்கி இன்பமான வாழ்வும், செய்யும் செயல்களில் எல்லாம் வெற்றியும், உடலை வாட்டும் நோய்கள் தீர்ந்து நீண்ட ஆயுளும், வற்றாத செல்வமும், மங்காத புகழும் பெற்று நீடுடி வாழலாம்.


            நமது சர்வ சக்தி விருட்ச பீடத்தில் 27 நட்சத்திரங்களுக்கு உண்டான பரிகார விருட்சங்களும் பிரதிஷ்டை செய்து தினசரி பரிகார பூஜைகள் நடை பெற்று வருகின்றன. இவை மட்டுமின்றி மகா விருட்சங்களான ருத்ராட்சம், மஹா வில்வம், சரகொன்றை மற்றும் அதி முக்யமான பரிகார விருட்சங்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளது. இந்த விருட்சங்களுக்கு நடுவே பஞ்சம் மற்றும் பஞ்சமஹா பாவங்கள் சர்வ தோஷங்களை நீக்கும் பஞ்ச லிங்கங்களும் + பாதாள லிங்கமும் பிரதிஷ்டை செய்ய பணிகள் நடைபெற்று வருகிறது. எனவே சர்வ சக்தி விருட்ச பீடம் மிக உயர்ந்த பலன்களை தரும் நட்சத்திர பரிகார ஸ்தலம் ஆகும். உங்கள் வாழ்வு வளம் பெற இங்கு வந்து பரிகாரங்களை செய்து கொள்வது மிக்க பலன்தரும், உங்கள் வாழ்வு மலர உங்கள் துன்பங்களை களைய பஞ்ச லிங்க + பாதாள லிங்க பிரதிஷ்டை திருப்பணியில் உங்களையும் இணைத்துக்கொள்ளுங்கள், நன்கொடைகள் தந்து உதவுங்கள், திருப்பணிக்கு நன்கொடை அளிக்கும் அன்பர்களின் வாழ்வு சிறக்க அவர்கள் பிறந்த நட்சதிரதன்று (ஆயுள் முழுதும்) தொடர்ந்து பரிகார பூஜைகள் அவர்களுக்காக நடத்தப்படும்.

முகவரி :                        
                                      ஸ்ரீ லக்ஷ்மி தாச சுவாமிகள் ,
                                       சர்வ சக்தி விருட்ச பீடம்,
                                   விருட்சபீடம் சேவா சாரிட்டபிள் டிரஸ்ட் ,
                                       26/6, கிச்சகத்தியூர்,
                                       இலுப்பாபாளையம் (போஸ்ட்),
                                       சிறுமுகை - 641302
                                       தமிழ்நாடு, இந்தியா.
                                       செல் : 99440 99980, 85260 74891.

மூலம் நட்சத்திரம் - விருட்சம் - பரிகாரம்

     மூலம் நட்சத்திரம் - விருட்சம் - பரிகாரம்                   மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மன உறுதி படைத்தவர்களாக இருப்பார்கள், ...