செவ்வாய், 21 மே, 2013

சர்வ வசிய மை செய்முறை

                      சர்வ வசிய மை செய்முறைசர்வ வசிய மை செய்முறை :
வெள்ளை குண்டுமணி வேர், வெள்ளெருக்கன் வேர், வெள்ளை விஷ்ணு கிரந்தி வேர், பெரியா நங்கை வேர், வெள்ளை காக்கணம் வேர், வெண்கொழிஞ்சி வேர் இவைகளை சம எடையாக ஒரு புத்தம் புதிய சட்டியில்  போட்டு கருக்கி, அத்துடன் பச்சை கற்பூரம், கோரோசனை, குங்குமப்பூ, கஸ்தூரி,  புனுகு வகைக்கு ஒரு குண்டுமணி எடை கூட்டி கல்வத்தில் போட்டு புற்று தேன் விட்டு இரண்டு ஜாமம் அரைத்து கொம்பு டப்பாவில் பத்திரப்படுத்தவும்.
          இந்த சர்வ வசிய மையை வலது உள்ளங்கையில் வைத்துக் கொண்டு "ஓம் ஸ்ரீம் க்லீம் குமாரிகே ஜெகன் மோகினி த்ரிலோக்யம் வஸ்மானந் க்ரீம் ஸ்ரீம் ஸ்வாஹா" - என்ற வசிய மந்திரத்தை 1008 முறை ஜெபிக்க சர்வ வசிய மை உயிர் பெறும்.
       

சர்வ வசிய மையின் பலன் :
                              சர்வ வசிய மையை திலகமிட சத்ரு ( எதிரிகள் ) வசியம், பொது ஜன வசியம், தொழில் - வியாபார வசியம், இலட்சுமி காடாச்சம் உண்டாகும்.

சர்வ வசிய மை உயிரேற்ற வைக்க வேண்டிய  நிவேதனம் : பால், பழம், கற்பூரம், ஊதுபத்தி, வெற்றிலை - பாக்கு, தேங்காய், சர்கரை பொங்கல்.
குறிப்பு :: சர்வ வசிய மை தேவைப்படும் அன்பர்கள் என் அலைபேசியில் தொடர்பு கொள்ளவும். அலைபேசி எண் : +91 85260 74891.

சர்வ வசியம் தரும் - இரசமணி

சர்வ வசியம் தரும் - இரசமணி :


              முறைப்படி கன்னிநூல் காப்புகட்டி, சாப நிவர்த்தி செய்து கொண்டு வந்த ஜோதிப் புல்லைக் கல்வத்தில் போட்டு மைப்போல் அரைத்துக்கொள்ளவும், ஒரு பலம் பாதரசம் எடுத்து , அரைத்த ஜோதிப்புல் விழுதில் வைத்து, மண் சீலை செய்து பத்து எருவில் ( பசு சாணத்தில் தட்டிய வரட்டி ) புடம் போட்டு, புடம் ஆறிய பின் எடுத்தால் பாதரசம் கெட்டிப்பட்டு கல் போல் இருக்கும். இதற்கு மேல் மீண்டும் ஜோதிப்புல் அரைத்து அதனுள் வைத்து மண்சீலை ( மண் கவசம் ) செய்து பத்து எருவில் புடம் போடவும். புடம் ஆறிய பின் எடுத்து மீண்டும் இருபது முறை புடம் போட்டு எடுத்து வைத்துக் கொள்ளவும். இதை குகையில் வைத்து ஊத உருகி மணியாகும். இதை பால், தேன் இவைகளில் போட்டால் அதை உறிஞ்சி குடிக்கும். இந்த மணியை வாயில் போட்டுக்கொண்டு உமிழ்நீரை சாப்பிட விந்து கட்டும் உடலுறவில் லேசில் விந்து வெளிப்படாது. உடலில் உள்ள தாதுக்கள் கட்டும். நரை, திரை விலகி உடல் காயசித்தி ஆகும்.
                இந்த இரசமணியை லட்சம் உரு வசிய மந்திர உரு ஏற்றி வைத்துக் கொண்டால் சர்வ ஜன வசியம், தொழில் வசியம், வியாபார வசியம் முதலியன உண்டாகும். இந்த இரசமணியால் - இலட்சுமி கடாட்சம் உண்டாகும். இந்த இரசமணியை பால் கரக்கும் போது பசுவின் மூக்கில் வைத்தால் பால் சுரக்காது. இதை இடுப்பில் கட்டி பெண்ணை புணர்ந்தால் விந்து வெளிவராது தம்பனம் ஆகும். போகசக்தி அதிகரிக்கும்.

திங்கள், 20 மே, 2013

அஷ்டகர்ம மூலிகைகள் அறுபத்தி நான்கு

அஷ்டகர்ம  மூலிகைகள்  அறுபத்தி நான்கு :பண்டைய காலத்தில் வாழ்ந்து பல அற்புதங்களை செய்த நம் தமிழக சித்தர்கள் மூலிகைகளை கொண்டே மந்திர உருவேற்றி பல காரியங்களில் வெற்றியடைந்தனர். அதன்படி அவர்கள் பயன்படுத்திய மூலிகைகள் அஷ்டகர்மங்கள் ( எட்டு சித்திகள் )  செய்ய ஒரு சித்திக்கு 8 மூலிகை என அஷ்ட சித்திக்கு 64 மூலிகைகள் ஆகும். அஷ்டகர்மம் என்பது 1. ஆகர்ஷனம், 2. உச்சாடனம், 3. தம்பனம், 4. பேதனம், 5. மாரணம், 6. மோகனம், 7. வசியம், 8. வித்வேஷனம் ஆகும். இந்த அஷ்ட கர்ம செயல்களை பற்றி விரிவாக காணலாம்.
          


1. ஆகர்ஷனம்

                         நமக்கு தேவையானதை இருக்கும் இடத்திலிருந்து நாம் இருக்கும் இடத்திற்கே வரவழைக்கும் வித்தையாகும். இதற்கு உதவும் மூலிகைகள் 1. வேளை, 2. உள்ளொட்டி, 3. புறவொட்டி, 4.சிறு முன்னை, 5. குப்பைமேனி, 6. அழுகண்ணி, 7. சிறியாநங்கை, 8. எருக்கு என எட்டு மூலிகைகளாகும். இதில்
                 
                 மிருகங்களை அழைப்பதற்கு - வேளை, குப்பைமேனி.
                 பெண்களை அழப்பதற்கு -  உள்ளொட்டி, அழுகண்ணி.
                 அரசர், பிரபுக்ளை அழைப்பதற்கு - சிறுமுன்னை.
                 துர்தேவதைகளை அழைப்பதற்கு - புறவொட்டி.
                 தேவதைகளை அழைப்பதற்கு - எருக்கு.
                 அனைத்து அழைப்பிற்கும் - சிறியாநங்கை.

 2. உச்சாடனம்

                               பேய், பிசாசு, கெட்ட ஆவிகள், நோய்கள் தீமைகளை விரட்டியடித்தல். இதற்கு பயன்படும் மூலிகைகள் 1. பேய் மிரட்டி,  2. மான் செவிகள்ளி, 3. தேள்கொடுக்கி, 4. கொட்டைகரந்தை, 5. வெள்ளை கண்டங்கத்திரி, 6. மருதோன்றி, 7. பிரமதண்டு, 8. புல்லுருவி ஆகும். இதில்
                  
                 மிருகங்களை விரட்ட - பேய்மிரட்டி.
                 எதிரிகளை விரட்ட - மான்செவிகள்ளி.
                 உடலில் ஏறிய விஷங்களை விரட்ட - தேள்கொடுக்கி.
                  நீர்வாழ் உயிரனங்களை விரட்ட - கொட்டைகரந்தை.
                 கால்நடைகளை விரட்ட - வெள்ளை கண்டங்கத்தரி.
                 பூத பைசாசங்களை விரட்ட - மருதோன்றி, புல்லுருவி
                 பிறர் நமக்கு செய்யும் தீமகளை விரட்ட - பிரமதண்டு.

 3. பேதனம்

                                ஒன்றை மற்றொன்றாக மாற்றுதல், அதாவது  ஒரு விஷயத்தை நினைத்து நம்மிடம் வருபவரை அந்த நினைப்பை வேறுபட்டு போகும்படி செய்தல். இதற்கு பயன்படும் மூலிகைகள் 1. வட்டதுத்தி, 2. செம்பசளை, 3. மாவிலங்கு, 4. பாதிரி, 5. கோழியாவரை, 6. சீந்தில்கொடி, 7. புடலங்கொடி, 8. ஆகாயதாமரை ஆகும்.
                    
                     நெருப்பின் உக்கிரத்தை பேதிக்க - வட்டதுத்தி,
                     மனிதனின் எண்ணத்தை பேதிக்க - செம்பசளை,
                     பூத, பிசாசுகளை பேதிக்க - மாவிலங்கு, பாதிரி,
                    துர்தேவதைகளை பேதிக்க - கோழியாவரை,
                    எதிரிகளை பேதிக்க - சீந்தில்கொடி,
                    பெண்களை பேதிக்க - புடலங்கொடி,
                     வியாதிகளை பேதிக்க - ஆகாயதாமரை.
   

 4. மாரணம் 

                             கொல்வது அல்லது மாற்றுவது. உலோகங்களை அதன் தன்மையில் இருந்து மாற்றுவது. எதிரிகளுக்கு நோயை உண்டாக்கி கொல்வது. இதற்கு  பயன்படும்  மூலிகைகள் 1. நச்சுப்புல், 2. நிர்விஷம், 3. சித்திரமூலம், 4. அம்மன் பச்சரிசி, 5. கார்த்திகை கிழங்கு, 6. மருதோன்றி, 7. கருஞ்சூரி, 8. நாவி  ஆகும்.
                    
                  மனிதர்களை மாரணம் செய்ய - நச்சுப்புல், நிர்விஷம்,
                  வியாதிகளை மாரணம் செய்ய  - சித்திரமூலம், கருஞ்சூரை,
                  கண்ணாடிகளை மாற்ற - அம்மன் பச்சரிசி,
                  மிருகங்களை  மாரணம் செய்ய - மருதோன்றி, கார்திகை கிழங்கு.

  5. மோகனம் : 

                                      பிறரை நம்மிடம் மயங்கி இருக்க செய்வது. இதற்கு பயன்படும் மூலிகைகள் 1. பொன்னூமத்தை, 2. கஞ்சா வேர், 3. வெண்ணூமத்தை, 4. கோரைக்கிழங்கு, 5. மருளூமத்தை, 6. ஆலமர விழுது, 7. நன்னாரி, 8. கிராம்பு ஆகும்.
                     
                    பெண்களை மோகிக்க  - பொன்னூமத்தை,
                     பொதுமக்களை மோகிக்க - கஞ்சா வேர்,
                     உலகத்தை மோகிக்க - வெண்ணூமத்தை,
                     விலங்குகளை மோகிக்க - கோரைக்கிழங்கு, 
                     தேவதைகளை மோகிக்க - மருளூமத்தை,
                     அரசர்களை மோகிக்க -  ஆலம்விழுது,
                      மனிதர்களை மோகிக்க  -  கிராம்பு,
                      எல்லாவற்றையும் மோகிக்க - நன்னாரி.

 6. வசியம்

                                   எல்லாவற்றையும் நம்மிடம் விருப்பமாகவும்  இஷ்டமாயும் இருக்க வைத்தல். இதற்கு பயன்படு்ம் மூலிகைகள் 1. சீதேவிச் செங்கழுநீர், 2.  நிலவூமத்தை, 3. வெள்ளை விஷ்ணுகிரந்தி, 4. கருஞ்செம்பை, 5. வெள்ளை குன்றி மணி, 6. பொன்ணாங்கன்னி, 7. செந்நாயுருவி, 8. வெள்ளெருக்கு ஆகும்.
                       இராஜ வசியத்திற்கு - சீதேவி செங்கழுநீர்,
                       பெண் வசியத்திற்கு - நிலவூமத்தை,
                       லோக வசியத்திற்கு - வெள்ளெருக்கு,
                        ஜன வசியத்திற்கு - கருஞ்செம்பை, விஷ்ணுகிராந்தி,
                        விலங்கு வசியத்திற்கு - வெள்ளை குன்றி மணி,
                        தேவ வசியத்திற்கு - பொனணாங்கன்னி,
                         சாபம், வழக்குகள் வசியத்திற்கு - செந்நாயுருவி.

 7. வித்துவேஷனம்

                                                    பகையை உண்டாக்குதல். இதற்கு பயன்படும் மூலிகைகள். 1. கருங்காக்கனம், 2. வெள்ளை காக்கனம், 3. திருகு கள்ளி, 4. ஆடுதின்னாபாளை, 5. பூனைக்காலி, 6. கீழாநெல்லி, 7. ஏறண்டம், 8. சிற்றாமணக்கு ஆகும்.
                        
                       அரசர்களுக்குள் பகை உண்டாக்க - கருங்காக்கணம்,
                        தேவர்களுக்கு - வெள்ளைக்காக்கணம், திருகுகள்ளி,
                        பூத, பைசாசங்களுக்கு - ஆடுதின்னாபாளை,
                        பெண்களுக்கு நோய் உண்டாக்க  -  பூனைக்காலி,
                        எதிரிகளால் உண்டாகும்  ஆபத்தை  தடுக்க - கீழாநெல்லி,
                        உணவை உண்ணாமல் செய்ய - சிற்றாமணக்கு.

 8.  தம்பனம் : 

                                            தடுத்து நிறுத்துத்தல்,  விலங்குகளின் வாயை கட்டுதல். இதற்க்கு  பயன்படும் மூலிகைகள் 1.  கட்டுக்கொடி, 2.  பால்புரண்டி, 3.  பரட்டை, 4. நீர்முள்ளி, 5. நத்தைச்சூரி, 6.  சத்தி சாரணை, 7. பூமிச்சர்கரை,  8. குதிரைவாலி  ஆகும்.
                        
                        விந்துவை  கட்ட - கட்டுக்கொடி, பால்புரண்டி, நீர்முள்ளி,
                        தண்ணீரைக்கட்டி அதன் மேல் அமர  - கட்டுக்கொடி,
                        பெண்களின் முலைபாலை கட்ட - பால்புரண்டி,
                        வயிற்றுப் போக்கை நிறுத்த  - பரட்டை,
                        கற்களை கறைக்க - நத்தைச்சூரி,
                        செயல்களை செயல்படாமல் கட்ட - சத்திசாரணை,
                         திரவத்தை கட்டி திடமாக்க  - பூமிச்சர்கரை கிழங்கு,
                         கருப்பையில் உள்ள கருவை கட்ட - குதிரைவாலி.
       
                   மேற்படி மூலிகைகளை உரிய நாளில் காப்பு கட்டி, சாபநிவர்த்தி மந்திரம் சொல்லி பிடுங்கி வந்து உரிய மந்திர உருவேற்றி மேற்பட்ட அஷ்டகர்ம செயல்களை  செய்ய அனைத்தும் ஜெயமாகும்.
                          
                                                     ..                      
     

ரேவதி நட்சத்திரம் விருட்சம் பரிகாரம்

     ரேவதி நட்சத்திரம் - விருட்சம் - பரிகாரம்                    ரேவதி நட்சத்திரத்தில்  பிறந்தவர்கள் பணத்திற்கு தட்டுப்பாடற்ற வெற்றியையும்...