புதன், 5 ஜூன், 2013

இருபத்தேழு நட்சத்திரங்களுக்குண்டான பரிகார விருட்சங்கள்

இருபத்தேழு நட்சத்திரங்களுக்குண்டான பரிகார விருட்சங்கள்

          ஜோதிட ரீதியாக இருபத்தேழு நட்சத்திரங்களுக்கு உரிய இருபத்தேழு பரிகார விருட்சங்கள் உண்டு, அவை
              
               1. அஸ்வினி - எட்டி,
               2. பரணி - நெல்லி,
               3. க்ருத்திகை - அத்தி,
               4. ரோஹிணி - நாவல்,
               5. ம்ருகசீர்ஷம் - கருங்காலி,
               6. திருவாதிரை - செங்கரு,
               7. புனர்பூசம் - மூங்கில்,
               8. பூசம்  - அரசு,
               9. ஆயில்யம் - புன்னை,
               10. மகம் - ஆலம்,
               11. பூரம்  - பலா,
               12. உத்திரம் - அரளி,
               13. ஹஸ்தம் - வேல்,
               14.  சித்திரை -  வில்வம்,
               15. ஸ்வாதி - மருதை,
               16. விசாகம் - விளா,
               17. அனுஷம் - மகிழம்,
               18. கேட்டை - பிராய்,
               19. மூலம் - மாமரம்,
               20. பூராடம் - வஞ்சி,
               21. உத்ராடம் - பலா,
               22. திருவோணம் - எருக்கு,
               23. அவிட்டம் - வன்னி,
               24. சதயம் - கடம்பு,
               25. பூரட்டாதி - தேமா,
               26. உத்திரட்டாதி - வேம்பு,
               27. ரேவதி - இலுப்பை.
         உலக மக்கள்தொகை எத்தனை ஆயினும் அத்தனை பேரும் இருபத்தேழு நட்சத்திரத்துக்குள் அடக்கம். உங்கள்  பிறந்த நட்சத்திரம் என்பது உங்கள் உயிரினை போன்றது. ஜோதிட ரீதியாக உங்கள் நட்சத்திரத்திற்க்கு உரிய மரங்களை (பரிகார விருட்சங்கள்) வணங்கினாலே சகல தோஷங்களும் விலகும் என்பதனை அறிந்த நம் முன்னோர் ஒவ்வொரு ஆலயங்களிலும் தலவிருட்சம் என்ற பெயரில் இந்த  மரங்களை நட்டு பராமரித்து வந்தனர்.
           இந்த ஒவ்வொரு விருட்சமும் மனித வாழ்வில் என்னற்ற பலன்களை தருகின்றன. இதன் மருத்துவ குணங்கள் வார்த்தைகளால் வர்ணிக்க இயலாதவை. இந்த விருட்சங்களின்  ஈர்ப்பு சக்தியும், காந்த சக்தியும், தெய்வீகத் தன்மையும் அளப்பறியது.
            இயற்கையோடு இணைந்து  வாழ்வது என்பது இறைவனுடன் இணைந்து வாழ்வதாகும், இந்த விருட்சங்கள் வெளியிடும் காற்றை சுவாசித்தாலே  உடலில் உள்ள நோய்கள் நீங்கும். இவ்விருட்சங்களின் கீழ் அமர்ந்து தியானித்தாலே மனம் ஒடுங்கி தியானம் கைக்கூடும். சர்வ சித்திகளும் அடையலாம். புத்தர் போதி  மரத்தடியில் ஞானம் பெற்றார் என்பதும், அரச மரத்தினடியில் வினாயகர் அமர்ந்திருப்பதும் இவ்வுண்மையை விளக்குவதாகும்.
            அவர்கள் அமர்ந்த அந்த ஒரு மரத்திற்கே (விருட்சம்) அற்புத சக்திகள் உண்டென்றால், இந்த இருபத்தேழு அற்புத விருட்சமும் ஓரிடத்தில் இருந்தால் அவ்விடம் மாபெரும் அற்புத சக்திகள்  தரும் இறைபீடமாகும். இந்த இருபத்தேழு அற்புத விருட்சமும் ஓரிடத்தில் அமையப்பெற்ற ஒரு அற்புத பரிகார ஸ்தலம் தான் நமது "சர்வ சக்தி விருட்ச பீடம்"

 நட்சத்திர  தோஷ விருட்ச பரிகாரம் :

                                                                                  உங்கள் ஜெனன நட்சத்திரத்திற்கு முதல் நாள்  இரவு நவதானியத்தை தண்ணீரில் ஊறவைத்து மறுநாள் காலை ஊறவைத்த தண்ணீரை விருட்சத்திற்கு ஊற்றி பரிகாரம்  செய்து, பின் ஊறிய தானியத்தை வெல்லம் போட்டு அறைத்து பசுவுக்கு கோபூஜை செய்து உண்ண கொடுத்து பசுவை மூன்று முறை வலம் வந்து வணங்க தோஷங்கள் நீங்கி அஷ்ட ஐஸ்வர்யங்களும் உண்டாகும்.

  விருட்சபீட அமைவிடம் :
                                                        சர்வசக்தி நட்சத்திர விருட்ச பீடம்,
                                                        கிச்சகத்தியூர்,
                                                        இலுப்பாபாளையம் (அஞ்சல்),
                                                        சிறுமுகை - 641302,
                                                        கோயம்புத்தூர் (மாவட்டம்),
                                                        தமிழ்நாடு,
                                                        இந்தியா.

இவ்வறிய பணிக்கு நீங்களும் உதவலாம், நன்கொடைகளை அனுப்ப
ACCOUT DETAIL :
                                A/c name : RAJ KUMAR.V
                                A/c no : 1031101124373
                                BANK : CANARA BANK, sirumugai branch
                                IFSC CODE ; CNRB0001031


               இந்த 27 பரிகார மரங்களை பற்றி அடுத்த கட்டுறையில் விரிவாக அலசுவோம். வாழ்க சர்வ ஐஸ்வர்யமுடன்.

சுவாதி நட்சத்திரம் - விருட்சம் - பரிகாரம்

                                 சுவாதி  நட்சத்திரம் - விருட்சம் - பரிகாரம்               சுவாதி நட்சத்திரத்தில்  தெளிந்த அறிவுள்ளவர்க...