திங்கள், 24 பிப்ரவரி, 2014

விருட்ச வழிபாடு செய்வது ஏன்?

               மனித உடல் பஞ்சபூத சக்திகளை உள்ளடக்கியே இறைவனால் உருவாக்கப்பட்டுள்ளது.  பஞ்சபூதங்களும் இணைந்து நிற்கும் ஒரு பொருளில்  ஜீவ ஐக்கியம் ( உயிர்ரோட்டம் ) உண்டாகும்.
           இயற்கையிலேயே பஞ்ச பூதங்களும் கலந்து  நிற்கும் பொருட்களில் தான் இறைவனை அமைக்கிறார்கள். அதனால் தான் கருங்கல்லில் தெய்வங்களை சிலைகளாக வடிக்கின்றனர், ஏனென்றால் கருங்கல்லில் பஞ்ச பூதசக்தி உண்டு. கருங்கல்லின் உள்ளே தேரை  வசிப்பது அனைவரும் அறிந்ததே. ஏனென்றால் பஞ்ச பூதங்கள் இனைந்து உள்ள  பொருளில் இயற்கையிலே உயிரோட்டம்  உண்டு, அதாவது மனிதன் விலங்குகள் செடிகொடிகள் மரங்கள் இயற்கையிலேயே உயிரோட்டம் ஜீவசக்தி  பெற்றவை. கருங்கல்லில் பஞ்சபூத சக்தி உண்டென்றாலும் அதில் ஜீவசக்தியை உண்டாக்கப்படுகிறது. அதற்கு பெயர் தான் பிராண பிரதிஷ்டை ஆகும். கருங்கல், பஞ்சலோகம் எதில் தெய்வ சிலைகளை செய்யப்பட்டாலும், அந்த சிலைகளில் பிராணபிரதிஷ்டை செய்து தெய்வங்களை ஆவாகனம் ( நிலைபெற ) செய்கின்றனர். அதனால் சிலைகளில் உயிரோட்டம உண்டாகி செயல்பட துவங்குகிறது.
          ஆனால் இயற்கையிலேயே பஞ்சபூதங்களால் தோன்றி இயற்கையிலேயே ஜீவசக்தியுடன் விளங்குவது விருட்சங்களாகும். கோயிலில் உள்ள சிலைகளை விட பல்லாயிரம் மடங்கு சக்தியுடையவை விருட்சங்கள் ஆகும். எனவே  தான் கோவில்களில் தல விருட்சங்களை முன்னோர்கள் அமைத்து வழிபட்டு வந்தனர்.
            விருட்சங்கள் ஜீவக்காந்த சக்தியுடையது. அதனால் தான் தெய்வங்கள் கூட விருட்சங்களுக்கு கீழ் அமர்ந்து  தவத்தை செய்தனர் என நாம்  சாஸ்த்திரங்கள் மூலம் அறிகிறோம். அவ்வகையில் உற்றுநோக்கினால்  அவ்வறிய விருட்சங்கள் அனைத்தும் ஒருங்கே அமையபெற்ற இடம் மாபெரும் சக்திகளை உடைய இடமாகும். அதுவே சர்வ சக்தி விருட்ச பீடமாகும்.
            விருட்ச பீடத்தில் உங்களின் தோஷம் நீங்க பரிகாரம் செய்தால் உடனே தோஷம் நீங்கும். விருட்சங்களை நட்டு வளர்தால் விருட்சங்கள் வளர வளர உங்கள் தொழிலும், வசதிகளும் விருட்சம் போல் வளர்ந்து வியாபித்து நிற்கும்.

  விருட்சபீட அமைவிடம் :
                                                        சர்வசக்தி நட்சத்திர விருட்ச பீடம்,
                                                        கிச்சகத்தியூர்,
                                                        இலுப்பாபாளையம் (அஞ்சல்),
                                                        சிறுமுகை - 641302,
                                                        கோயம்புத்தூர் (மாவட்டம்),
                                                        தமிழ்நாடு,
                                                        இந்தியா.
                                                        செல் : 85260 74891.
                                                                    99440 99980.

நன்கொடைகள் அனுப்ப :
                                                  A/C NAME : SRI SARVA SAKTHY SEVA TRUST
                                                  A/C NO       : 1031201001136,
                                                  BANK         ; CANARA BANK, SIRUMUGAI BRANCH
                                                  IFSC CODE ; CNRB0001031.


         

நட்சத்திர பரிகார விருட்சங்கள்

          ஜோதிட ரீதியாக இருபத்தேழு நட்சத்திரங்களுக்கு உரிய இருபத்தேழு விருட்சங்கள் உண்டு, அவை
               1. அஸ்வினி - எட்டி,
               2. பரணி - நெல்லி,
               3. க்ருத்திகை - அத்தி,
               4. ரோஹிணி - நாவல்,
               5. ம்ருகசீர்ஷம் - கருங்காலி,
               6. திருவாதிரை - செங்கரு,
               7. புனர்பூசம் - மூங்கில்,
               8. பூசம்  - அரசு,
               9. ஆயில்யம் - புன்னை,
               10. மகம் - ஆலம்,
               11. பூரம்  - பலா,
               12. உத்திரம் - அரளி,
               13. ஹஸ்தம் - வேல்,
               14.  சித்திரை -  வில்வம்,
               15. ஸ்வாதி - மருதை,
               16. விசாகம் - விளா,
               17. அனுஷம் - மகிழம்,
               18. கேட்டை - பிராய்,
               19. மூலம் - மாமரம்,
               20. பூராடம் - வஞ்சி,
               21. உத்ராடம் - பலா,
               22. திருவோணம் - எருக்கு,
               23. அவிட்டம் - வன்னி,
               24. சதயம் - கடம்பு,
               25. பூரட்டாதி - தேமா,
               26. உத்திரட்டாதி - வேம்பு,
               27. ரேவதி - இலுப்பை.
         உலக மக்கள்தொகை எத்தனை ஆயினும் அத்தனை பேரும் 27 நட்சத்திரத்துக்குள் அடக்கம். உங்கள்  பிறந்த நட்சத்திரம் என்பது உங்கள் உயிரினை போன்றது. ஜோதிட ரீதியாக உங்கள் நட்சத்திரத்திற்க்கு உரிய மரங்களை வணங்கினாலே சகல தோஷங்களும் விலகும் என்பதனை அறிந்த நம் முன்னோர் ஒவ்வொரு ஆலயங்களிலும் தலவிருட்சம் என்ற பெயரில் இந்த  மரங்களை நட்டு பராமரித்து வந்தனர்.
           இந்த ஒவ்வொரு விருட்சமும் மனித வாழ்வில் என்னற்ற பலன்களை தருகின்றன. இதன் மருத்துவ குணங்கள் வார்த்தைகளால் வர்ணிக்க இயலாதவை. இந்த விருட்சங்களின்  ஈர்ப்பு சக்தியும், காந்த சக்தியும், தெய்வீகத் தன்மையும் அளப்பறியது.
            இயற்கையோடு இணைந்து  வாழ்வது என்பது இறைவனுடன் இணைந்து வாழ்வதாகும், இந்த விருட்சங்கள் வெளியிடும் காற்றை சுவாசித்தாலே  உடலில் உள்ள நோய்கள் நீங்கும். இவ்விருட்சங்களின் கீழ் அமர்ந்து தியானித்தாலே மனம் ஒடுங்கி தியானம் கைக்கூடும். சர்வ சித்திகளும் அடையலாம். புத்தர் போதி  மரத்தடியில் ஞானம் பெற்றார் என்பதும், அரச மரத்தினடியில் வினாயகர் அமர்ந்திருப்பதும் இவ்வுண்மையை விளக்குவதாகும்.
       
 நட்சத்திர  தோஷ விருட்ச பரிகாரம் :
                                                                                  நமது சர்வசக்தி விருட்ச பீடத்தில் உங்கள் ஜெனன நட்சத்திரத்திற்கு முதல் நாள்  இரவு நவதானியத்தை தண்ணீரில் ஊறவைத்து மறுநாள் காலை ஊறவைத்த தண்ணீரை விருட்சத்திற்கு ஊற்றி பரிகாரம்  செய்து, பின் ஊறிய தானியத்தை வெல்லம் போட்டு அறைத்து பசுவுக்கு கோபூஜை செய்து உண்ண கொடுத்து பசுவை மூன்று முறை வலம்
 வந்து வணங்க தோஷங்கள் நீங்கி அஷ்ட ஐஸ்வர்யங்களும் உண்டாகும்.

  விருட்சபீட அமைவிடம் :
                                                        சர்வசக்தி நட்சத்திர விருட்ச பீடம்,
                                                        கிச்சகத்தியூர்,
                                                        இலுப்பாபாளையம் (அஞ்சல்),
                                                        சிறுமுகை - 641302,
                                                        கோயம்புத்தூர் (மாவட்டம்),
                                                        தமிழ்நாடு,
                                                        இந்தியா.
                                                        செல் : 85260 74891.
                                                                    99440 99980.

சுவாதி நட்சத்திரம் - விருட்சம் - பரிகாரம்

                                 சுவாதி  நட்சத்திரம் - விருட்சம் - பரிகாரம்               சுவாதி நட்சத்திரத்தில்  தெளிந்த அறிவுள்ளவர்க...