சனி, 5 ஏப்ரல், 2014

அஸ்வினி நட்சத்திரம் - விருட்சம் - பரிகாரம்

        அஸ்வினி நட்சத்திரதின் அதிபதி கேது பகவான் ஆகும். கேது பகவான் ஞானகாரகன், அதாவது ஞானத்துக்கு அதிபதி. அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சூட்சும புத்தி கொண்டவர்கள். ஆடை அணிகலன்களில்  ஆர்வம் கொண்டவர்கள், அனைவராலும் விரும்பப்படுபவர்கள், எடுத்த காரியங்களை எப்பாடு பட்டாவது முடிக்கும் திறன் கொண்டவர்கள், சாந்தமான குணம் உடையவர்கள், தாராள மனமும் உண்டு, மன உறுதி கட்டுப்பாடு மிகுந்தவர்கள், அதே சமயம் பணிவும் உண்டு, பிறரை புரிந்து கொள்வதில் கெட்டிக்காரர்கள், எந்த தொழிலை செய்தாலும் அர்வமுடனும் அக்கறையுடனும் செயல்பட்டு பிறரின் பாராட்டுக்களை பெறுவர், துணிச்சலும் தன்னம்பிக்கையும் இவர்களுக்கு இரு கண்களை போன்றது. அதே சமயம் இவர்கள் புகழுக்கு மயங்குவதும் உண்டு, வாழ்வின் சுக போகங்களை அனுபவிப்பதில் ஆர்வம் கட்டுவார்கள், மிகந்த செயல் திறன் கொண்ட இவர்களின் பேச்சு ஒன்றாகவும் செயல் வேறாகவும் இருக்கும், இவர்களுக்கு நல்லவர்கள் மட்டும் இன்றி தீய நண்பர்களின் நட்பும் இருக்கும், சரி இவர்களின் நல்ல குணங்கள் ஒருபுறம் இருக்கட்டும் இவர்களின் வாழ்வில் தடை கற்களாக விளங்கும் எதிர்மறை குணங்கள் விலகவும், இவர்களுக்கு உண்டாகும் நட்சத்திர தோஷங்கள் போக்கவும், இவர்களின் வாழ்வில் உண்டான சோதனைகள் மாறி சாதனைகளும், வளமான வாழ்வும், செல்வ செழிப்பும் உண்டாக செய்ய வேண்டிய பரிகாரங்களை இனி கண்போம்.

அதி தேவதையும், அதி தெய்வமும் : 
        "திரியக் முகம்" என்ற சம நோக்கு கொண்டதாக 27 நட்சத்திரங்களில் முதல் நட்சத்திரமான அஸ்வினி நட்சதிரதிற்கு அமிர்தத்துக்கு ஒப்பான வெண்ணிற ஆடை உடுத்தி நான்கு வேதங்களுக்கும் அதிபதியம் படைப்பு கடவுளான பிரம்மனுக்கு மனைவியாகி, கல்வியினை  ஞானதினை  உலகோருக்கு அருளும் அன்னை சரஸ்வதியே அஸ்வினி நட்சத்திரத்தின் அதி தெய்வமாகும்.

சரஸ்வதி காயத்திரி மந்திரம் :

"ஓம் வாக்தேவ்யை ச வித்மஹெ
         விரிஞ்சி பத்ந்யை ச தீமஹி !
தன்னோ வாணீ ப்ரசோதயாத் !!

அஸ்வினி நட்சத்திர அதி தேவதைகள் அஸ்வினி தேவர்கள் ஆகும். இவர்கள் தேவ வைத்தியர்கள், சூரியனுக்கும் சஞ்ஞாதேவிக்கும் பிறந்தவர்கள், சஞ்ஞாதேவி பெண் குதிரை வடிவில் தவம் இயற்றிய போது சூரிய ஒளிபட்டு அந்த குதிரையின் நாசி துவாரத்தில் இருந்து தோன்றியவர்கள், அஸ்வம் என்றால் குதிரை, அஸ்வதில் இருந்து தோன்றியதால் அஸ்வினி தேவர்கள் என்ற பெயர் உண்டாயிற்று. அஸ்வினி தேவர்கள் இருவர், இவர்கள் இருவரும் இணை பிரியாமல் இருப்பார்கள். இவர்களே அஸ்வினி நட்சத்திரத்தின் அதி தேவதைகள் ஆகும்.

அஸ்வினி தேவர்கள் மந்திரம் :

                           அஸ்வினீ  தேவதே ஸ்வேத வர்னௌ
                                          தாவஸ்விநௌ து மஹ : !
                            சுதா சம்பூர்ண கலச கராலஜெள
                                           அஸ்வ வாசு கநெள !!


பரிகார விருட்சம் :
                                        அஸ்வினி நட்சத்திரத்தின் பரிகார விருட்சம் எட்டி மரம் ஆகும். தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து பாற்கடலை கடைந்த போது அமிர்தத்தொடு ஆலகால விஷமும் வெளிப்பட்டது அல்லவா, அந்த விஷத்தால் உலகமே அழிந்து போய்விடும் என்று சிவ பெருமான் அவ்விஷத்தை தான் உண்டு உலகை காப்பாற்றினார். அந்த ஆலகால விஷத்தின் அடையாளம் தான் இந்த எட்டி மரம். உலகையே ஆலகால விஷத்தில் இருந்து காத்த பரமனுக்கு நன்றி சொல்லும் விதமாக அஸ்வினி தேவர்கள் எட்டி மர வனத்தில் தவம் இயற்றினர். அஸ்வினி நட்சத்திர அன்பர்கள் தான் பிறந்த அஸ்வினி நட்சத்திரம் வரும் நாளில் எட்டி மரம் தல விருட்சமாக உள்ள ஆலயங்கள் சென்று எட்டி மரத்துக்கு நீர் உற்றுவதும், எட்டி மரத்தடியில் தியானம் செய்வதும், விருட்ச பரிகாரங்கள் செய்துகொள்வதும் சிறந்த பரிகாரங்கள் ஆகும். அஸ்வினி நட்சத்திர அன்பர்கள் சரஸ்வதி காயத்திரி, அஸ்வினி தேவர்கள் மந்திரம், அஸ்வினி நட்சத்திர காயத்திரி மந்திரங்களை எட்டி மரத்தின் அருகில் அமர்ந்து ஜெபம் செய்வது வாழ்வில் தோன்றும் துன்பங்களை நீக்கி இன்பமான வாழ்வும், செய்யும் செயல்களில் எல்லாம் வெற்றியும், உடலை வாட்டும் நோய்கள் தீர்ந்து நீண்ட ஆயுளும், வற்றாத செல்வமும், மங்காத புகழும் பெற்று நீடுடி வாழலாம்.

            நமது சர்வ சக்தி விருட்ச பீடத்தில் 27 நட்சத்திரங்களுக்கு உண்டான பரிகார விருட்சங்களும் பிரதிஷ்டை செய்து தினசரி பரிகார பூஜைகள் நடை பெற்று வருகின்றன. இவை மட்டுமின்றி மகா விருட்சங்களான ருத்ராட்சம், மஹா வில்வம், சரகொன்றை மற்றும் அதி முக்யமான பரிகார விருட்சங்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளது. இந்த விருட்சங்களுக்கு நடுவே பஞ்சம் மற்றும் பஞ்சமஹா பாவங்கள் சர்வ தோஷங்களை நீக்கும் பஞ்ச லிங்கங்களும் + பாதாள லிங்கமும் பிரதிஷ்டை செய்ய பணிகள் நடைபெற்று வருகிறது. எனவே சர்வ சக்தி விருட்ச பீடம் மிக உயர்ந்த பலன்களை தரும் நட்சத்திர பரிகார ஸ்தலம் ஆகும். உங்கள் வாழ்வு வளம் பெற இங்கு வந்து பரிகாரங்களை செய்து கொள்வது மிக்க பலன்தரும், உங்கள் வாழ்வு மலர உங்கள் துன்பங்களை களைய பஞ்ச லிங்க + பாதாள லிங்க பிரதிஷ்டை திருப்பணியில் உங்களையும் இணைத்துக்கொள்ளுங்கள், நன்கொடைகள் தந்து உதவுங்கள், திருப்பணிக்கு நன்கொடை அளிக்கும் அன்பர்களின் வாழ்வு சிறக்க அவர்கள் பிறந்த நட்சதிரதன்று (ஆயுள் முழுதும்) தொடர்ந்து பரிகார பூஜைகள் அவர்களுக்காக நடத்தப்படும்.

 நன்கொடைகளை கிழ்கண்ட வங்கிக் கணக்கில் செலுத்தலாம் :

ACCOUNT NAME : SRI SARVA SAKTHY SEVA TRUST,
ACCOUNT NO       : 1031201001136,
BANK & BRANCH : CANARA BANK, SIRUMUGAI BRANCH,
IFSC CODE             : CNRB0001031.


முகவரி :
                                      ஸ்ரீ லக்ஷ்மி தாச சுவாமிகள் ,
                                       சர்வ சக்தி விருட்ச பீடம்,
                                       ஸ்ரீ சர்வ சக்தி சேவா டிரஸ்ட் ,
                                       26/6, கிச்சகத்தியூர்,
                                       இலுப்பாபாளையம் (போஸ்ட்),
                                       சிறுமுகை - 641302
                                       தமிழ்நாடு, இந்தியா.
                                       செல் : 99440 99980, 85260 74891.

சுவாதி நட்சத்திரம் - விருட்சம் - பரிகாரம்

                                 சுவாதி  நட்சத்திரம் - விருட்சம் - பரிகாரம்               சுவாதி நட்சத்திரத்தில்  தெளிந்த அறிவுள்ளவர்க...