சனி, 5 ஏப்ரல், 2014

பரணி நட்சத்திரம் - விருட்சம் - பரிகாரம்

                  "பரணியில் பிறந்தார் தரணி ஆள்வார்'' என்று முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளனர் முன்னோர்கள், பரணி நட்சத்திரத்தின் நான்கு பாதங்களும் மேஷ இராசியில் இடம்பெறுவதால் இது ஒரு முழுமையான நட்சத்திரம் ஆகும். இந்த நட்சத்திர ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் வாழ்வை முழுமையாக அனுபவித்து வாழ பிறந்தவர்கள், சுவையான உணவுகளை விரும்பி உண்பவர்கள், சரியான அளவு, அமைப்புடன் கூடிய உடல்வாகு தோற்ற பொலிவு கொண்டவர்கள், நல்ல ஆரோகியமும் நீண்ட ஆயுளும் கொண்டவர்கள், சமயோஜித புத்தி கொண்டவர்கள், எத்தகைய துன்பத்தினையும் மனதால் போட்டு குழப்பிகொள்ளாமல், அறிவுப்பூர்வமாக அதனை சிந்தித்து துன்பத்தில் இருந்து வெளியேறுபவர்கள், சாந்தமான சுபாவமும் இரக்க குணமும் இயற்கையிலேயே அமைய பெற்றவர்கள், அதிவேக சிந்தனையும் செயல்திறனும் கொண்டவர்கள், பிறரை எளிதாக புரிந்து கொள்பவர்கள், பிரயாணத்தில் அதிக ஆர்வம் கட்டுவார்கள், காதல் மன்னர்கள், எளிதில் உணர்ச்சிவசப்படுவார்கள், திட சித்தம் இல்லாதவர்கள், இவர்கள் அதிகமான பகைவர்களை உண்டாக்கி கொள்வார்கள்.இவர்களுக்கு உண்டாகும் நட்சத்திர தோஷங்கள் போக்கவும், இவர்களின் வாழ்வில் உண்டான சோதனைகள் மாறி சாதனைகளும், வளமான வாழ்வும், செல்வ செழிப்பும் உண்டாக செய்ய வேண்டிய பரிகாரங்களை இனி கண்போம்.

அதி தேவதையும், அதி தெய்வமும் :
பரணி நட்சத்திர அன்பர்களின் அதி தெய்வம் காளி அல்லது துர்க்கை ஆகும். பரணி நட்சத்திர அதி தேவதை யமன், இந்த பூவுலகில் பிறந்த உயிரினங்களின் ஆயுளை முடிப்பவன் யமனே, நீல நிற தேகம்கொண்டு கையில் பாசமும் தண்டமும் ஏந்தி, நீதியில் கூரான தராசு முள்போல நடுநிலை காப்பவன். எருமை வாகனம் ஏறுபவன், சூர்யனுக்கும் சாயா தேவிக்கும் மகனாக பிறந்தவன், சனீஸ்வரனின் சகோதரன் யமன், யமனே பரணி நட்சத்திர அதி தேவதை ஆகும்.

துர்க்கை காயத்திரி மந்திரம் 

                                         ஓம் காத்யாயனாய வித்மஹே 
                                                கன்யா குமாரீய தீமஹி !
                                          தந்நோ துர்க்கி ப்ரசோதயாத் !!

யம காயத்திரி மந்திரம் 

பாச தண்டோஜ்வல புஜத்வயம் மகிஷ வாகனம் !
யமம் நீலதனும் பீர்ம பரணி தேவதாம் பஜே !!

பரணி நட்சத்திர காயத்திரி 

ஓம் க்ருஷ்ணவர்ணாயை வித்மஹே தண்டதராயை தீமஹி !
தந்நோ பரணி ப்ரசோதயாத் !!


பரணி நட்சத்திர பரிகார விருட்சம் 

பரணி நட்சத்திர அன்பர்களின் பரிகார விருட்சம் நெல்லி மரம் ஆகும். தவா என்றால் கருநெல்லி என்று பொருள். மஹா விஷ்ணுவுக்கு மாதவா என்று பெயர் உண்டு. லக்க்ஷ்மியின் அம்சம் தவாவுடன் சேர்ந்ததால் மாதவா என்று பெயர் வந்ததாக பெரியோர்கள் சொல்கிறார்கள். பரணி  நட்சத்திர அன்பர்கள் தான் பிறந்த பரணி  நட்சத்திரம் வரும் நாளில் நெல்லி  மரம் தல விருட்சமாக உள்ள ஆலயங்கள் சென்று நெல்லி  மரத்துக்கு நீர் உற்றுவதும், நெல்லி  மரத்தடியில் தியானம் செய்வதும், விருட்ச பரிகாரங்கள் செய்துகொள்வதும் சிறந்த பரிகாரங்கள் ஆகும். பரணி  நட்சத்திர அன்பர்கள் துர்க்கா  காயத்திரி, யம  காயத்திரி  மந்திரம், பரணி  நட்சத்திர காயத்திரி மந்திரங்களை நெல்லி  மரத்தின் அருகில் அமர்ந்து ஜெபம் செய்வது வாழ்வில் தோன்றும் துன்பங்களை நீக்கி இன்பமான வாழ்வும், செய்யும் செயல்களில் எல்லாம் வெற்றியும், உடலை வாட்டும் நோய்கள் தீர்ந்து நீண்ட ஆயுளும், வற்றாத செல்வமும், மங்காத புகழும் பெற்று நீடுடி வாழலாம்.


            நமது சர்வ சக்தி விருட்ச பீடத்தில் 27 நட்சத்திரங்களுக்கு உண்டான பரிகார விருட்சங்களும் பிரதிஷ்டை செய்து தினசரி பரிகார பூஜைகள் நடை பெற்று வருகின்றன. இவை மட்டுமின்றி மகா விருட்சங்களான ருத்ராட்சம், மஹா வில்வம், சரகொன்றை மற்றும் அதி முக்யமான பரிகார விருட்சங்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளது. இந்த விருட்சங்களுக்கு நடுவே பஞ்சம் மற்றும் பஞ்சமஹா பாவங்கள் சர்வ தோஷங்களை நீக்கும் பஞ்ச லிங்கங்களும் + பாதாள லிங்கமும் பிரதிஷ்டை செய்ய பணிகள் நடைபெற்று வருகிறது. எனவே சர்வ சக்தி விருட்ச பீடம் மிக உயர்ந்த பலன்களை தரும் நட்சத்திர பரிகார ஸ்தலம் ஆகும். உங்கள் வாழ்வு வளம் பெற இங்கு வந்து பரிகாரங்களை செய்து கொள்வது மிக்க பலன்தரும், உங்கள் வாழ்வு மலர உங்கள் துன்பங்களை களைய பஞ்ச லிங்க + பாதாள லிங்க பிரதிஷ்டை திருப்பணியில் உங்களையும் இணைத்துக்கொள்ளுங்கள், நன்கொடைகள் தந்து உதவுங்கள், திருப்பணிக்கு நன்கொடை அளிக்கும் அன்பர்களின் வாழ்வு சிறக்க அவர்கள் பிறந்த நட்சதிரதன்று (ஆயுள் முழுதும்) தொடர்ந்து பரிகார பூஜைகள் அவர்களுக்காக நடத்தப்படும்.

 நன்கொடைகளை கிழ்கண்ட வங்கிக் கணக்கில் செலுத்தலாம் :

ACCOUNT NAME : SRI SARVA SAKTHY SEVA TRUST,
ACCOUNT NO       : 1031201001136,
BANK & BRANCH : CANARA BANK, SIRUMUGAI BRANCH,
IFSC CODE             : CNRB0001031.


முகவரி :
                                      ஸ்ரீ லக்ஷ்மி தாச சுவாமிகள் ,
                                       சர்வ சக்தி விருட்ச பீடம்,
                                       ஸ்ரீ சர்வ சக்தி சேவா டிரஸ்ட் ,
                                       26/6, கிச்சகத்தியூர்,
                                       இலுப்பாபாளையம் (போஸ்ட்),
                                       சிறுமுகை - 641302
                                       தமிழ்நாடு, இந்தியா.
                                       செல் : 99440 99980, 85260 74891.சுவாதி நட்சத்திரம் - விருட்சம் - பரிகாரம்

                                 சுவாதி  நட்சத்திரம் - விருட்சம் - பரிகாரம்               சுவாதி நட்சத்திரத்தில்  தெளிந்த அறிவுள்ளவர்க...