செவ்வாய், 20 மே, 2014

ரோஹிணி நட்சத்திரம் - விருட்சம் - பரிகாரம்

           ரோஹிணி நட்சத்திர அன்பர்கள் கல்வியறிவு மிக்கவர்கள். கருணை உள்ளம் இவர்களின் பிறவி குணம், யாருக்கும் கட்டுப்படாதவர்கள், திடமான மனம் படைத்தவர்கள், இனிமையாக பேசுபவர்கள், கொடுத்த வாக்கு தவறாதவர்கள், உண்மையும் நேர்மையும் இவர்களிடம் உண்டு. சுகபோக வாழ்வினை அனுபவிப்பவர்கள், தித்திப்பான உணவு வகைகளை விரும்புபவர்கள், ஆடை அலங்கார பிரியர், தன்னுடைய சொந்த விஷயங்களை யாருடனும் பகிர்ந்துகொள்ள விரும்பாதவர்கள், மன அழுத்தம் உண்டாகும், பொருளின் மீது உண்டாகும் அளவற்ற பற்றுதான் இவர்களின் மன அழுத்தத்திற்கு காரணம், எனவே பொருளாசையினை குறைத்துக்கொள்வது நல்லது. இவர்களுக்கு உண்டாகும் நட்சத்திர தோஷங்கள் போக்கவும், இவர்களின் வாழ்வில் உண்டான சோதனைகள் மாறி சாதனைகளும், வளமான வாழ்வும், செல்வ செழிப்பும் உண்டாக செய்ய வேண்டிய பரிகாரங்களை இனி கண்போம்.


அதி தேவதையும், அதி தெய்வமும் :

                                                                பிரம்ம தேவன் ரோஹிணி நட்சத்திர அன்பர்களின் அதிதேவதை நான்முகனும் படைப்பு கடவுளான பிரம்மா ஆகும், இளம் சிவப்பு மேனியுடன், நான்கு கரங்களோடு, அட்சமாலை, கமாண்டலம் ஏந்தி அபய வரதராக அருள்பவர் பிரம்ம தேவன், மஹா விஷ்ணுவின் நாபி கமலத்தில் தோன்றியவர் பிரம்மதேவர். ரோஹிணி  நட்சத்திரத்தின் அதி தெய்வம்  பக்த ஜனேசுவரர் ஆகும். இரணிய வதம் செய்ய ஸ்ரீ விஷ்ணு பகவானுக்கு ஆற்றலை வழங்கியவர் பக்த ஜனேசுவரர் ஆகும். இவர் திருநாவலூர் திருத்தலத்தில் அருள்பாலிக்கிறார்.
பக்த ஜனேசுவரர் 

ரோஹினி நட்சத்திர மந்திரம் 

பிரஜாபதி: சதுர்பாஹூ :
கமண்டலு அஷ ஸூத்ர !
வரா அபயகர: பிரீத :
ரோஹிணி தேவதா அஸ்து மே !!

பிரம்ம காயத்திரி மந்திரம் 

வேதாத்மநாய வித்மஹே 
ஹிரண்ய கர்ப்பாய  தீமஹி !
தந்நோ பிரம்ம ப்ரசோதயாத் !!

ரோஹிணி நட்சத்திர காயத்திரி மந்திரம் 

ஓம் வன்னி ப்ராஜாவிருத்யைச வித்மஹே விச்வரூபாயை தீமஹி 
தந்நோ ரோஹிணி ப்ரசோதயாத் 


ரோஹிணி நட்சத்திர பரிகார விருட்சம் 


ரோஹிணி   நட்சத்திர அன்பர்களின் பரிகார விருட்சம் நாவல்  மரம் ஆகும். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பிறந்தது ரோஹிணி நட்சத்திரத்தில் தான். 27 நட்சத்திரங்களும் சந்திரனின் மனைவிகள் என்றாலும் சந்திரனுக்கு மிகவும் பிடித்தமான மனைவி ரோஹிணியே ஆகும். சிவன், கிருஷ்ணர், கணபதி உறையும் புனித மரம் நாவல் மரமாகும். நாவல் கொட்டை சுக்கிரனுடன் தொடர்புடையது.புத்தர் பிறந்த கபிலஸ்தலத்தில் புனித மரமாக நாவல் மரம் உள்ளது. ரோஹிணி நட்சத்திர அன்பர்கள் தான் பிறந்த ரோஹிணி நட்சத்திரம் வரும் நாளில் நாவல் மரம் தல விருட்சமாக உள்ள ஆலயங்கள் சென்று நாவல் மரத்துக்கு நீர் உற்றுவதும், நாவல் மரத்தடியில் தியானம் செய்வதும், விருட்ச பரிகாரங்கள் செய்துகொள்வதும் சிறந்த பரிகாரங்கள் ஆகும். ரோஹிணி நட்சத்திர அன்பர்கள் பிரம்ம காயத்திரி , ரோஹிணி மந்திரம்,ரோஹிணி  நட்சத்திர காயத்திரி மந்திரங்களை நாவல் மரத்தின் அருகில் அமர்ந்து ஜெபம் செய்வது வாழ்வில் தோன்றும் துன்பங்களை நீக்கி இன்பமான வாழ்வும், செய்யும் செயல்களில் எல்லாம் வெற்றியும், உடலை வாட்டும் நோய்கள் தீர்ந்து நீண்ட ஆயுளும், வற்றாத செல்வமும், மங்காத புகழும் பெற்று நீடுடி வாழலாம்.            நமது சர்வ சக்தி விருட்ச பீடத்தில் 27 நட்சத்திரங்களுக்கு உண்டான பரிகார விருட்சங்களும் பிரதிஷ்டை செய்து தினசரி பரிகார பூஜைகள் நடை பெற்று வருகின்றன. இவை மட்டுமின்றி மகா விருட்சங்களான ருத்ராட்சம், மஹா வில்வம், சரகொன்றை மற்றும் அதி முக்யமான பரிகார விருட்சங்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளது. இந்த விருட்சங்களுக்கு நடுவே பஞ்சம் மற்றும் பஞ்சமஹா பாவங்கள் சர்வ தோஷங்களை நீக்கும் பஞ்ச லிங்கங்களும் + பாதாள லிங்கமும் பிரதிஷ்டை செய்ய பணிகள் நடைபெற்று வருகிறது. எனவே சர்வ சக்தி விருட்ச பீடம் மிக உயர்ந்த பலன்களை தரும் நட்சத்திர பரிகார ஸ்தலம் ஆகும். உங்கள் வாழ்வு வளம் பெற இங்கு வந்து பரிகாரங்களை செய்து கொள்வது மிக்க பலன்தரும், உங்கள் வாழ்வு மலர உங்கள் துன்பங்களை களைய பஞ்ச லிங்க + பாதாள லிங்க பிரதிஷ்டை திருப்பணியில் உங்களையும் இணைத்துக்கொள்ளுங்கள், நன்கொடைகள் தந்து உதவுங்கள், திருப்பணிக்கு நன்கொடை அளிக்கும் அன்பர்களின் வாழ்வு சிறக்க அவர்கள் பிறந்த நட்சதிரதன்று (ஆயுள் முழுதும்) தொடர்ந்து பரிகார பூஜைகள் அவர்களுக்காக நடத்தப்படும்.


முகவரி :

                                       ஸ்ரீ லக்ஷ்மி தாச சுவாமிகள் ,
                                       சர்வ சக்தி விருட்ச பீடம்,
                                       ஸ்ரீ சர்வ சக்தி சேவா டிரஸ்ட் ,
                                       26/6, கிச்சகத்தியூர்,
                                       இலுப்பாபாளையம் (போஸ்ட்),
                                       சிறுமுகை - 641302
                                       தமிழ்நாடு, இந்தியா.
                                       செல் : 99440 99980, 85260 74891.


சுவாதி நட்சத்திரம் - விருட்சம் - பரிகாரம்

                                 சுவாதி  நட்சத்திரம் - விருட்சம் - பரிகாரம்               சுவாதி நட்சத்திரத்தில்  தெளிந்த அறிவுள்ளவர்க...