ஞாயிறு, 18 மே, 2014

அஷ்ட கர்மங்களுக்கு உண்டான நூல் இலைகளின் எண்ணிக்கை

         அஷ்ட கர்மங்களுக்கு உண்டான நூல் இலைகளின் எண்ணிக்கை :

தருவர வக்கர சக்கர சக்தி 
பருவ முதிராத பாலிகை கன்னி 
இருவின நூலால் ஏற்கும் வினைக்கு 
மருவிய கருமம் வகைவகை தானே 

அஷ்ட கர்ம செயல்கள் என்னும் வசியம், ஆகர்ஷணம், மோகனம், வித்வேஷனம், தம்பனம், உச்சாடனம், பேதனம், மாரணம் ஆகிய செயல்களை செய்யும் போது அதற்க்கு உண்டான எந்திரங்களை எழுதி அதற்க்கு உரிய வண்ணங்களில் நூல் இழைகளால் பிணைத்து கட்ட வேண்டும் என்பதை சித்தர்கள் குறிப்பிட்டு சென்றுள்ளனர். அந்த நூல்கள் எப்படி யாரால் நூற்க்கப்பட வேண்டும், அந்த நூல்கள் எத்தனை இழைகள் கொண்டதாக இருக்க வேண்டும் என்பதும் மிகவும் முக்கியம், இவற்றையெல்லாம் கவனத்தில் கொள்ளாமல் மனம் போன போக்கில் எந்திரங்களை எழுதி அதனை தாயத்தில் அடைத்து தருவதால் எந்த பலனையும் நாம் அடைய முடியாது, மேலே சொல்லப்பட்ட பாடலின் படி வரங்களை தருகின்ற எந்திரங்களை இறுத்தி கட்டும் நூலானது வயதுக்கு வராத கன்னிப் பெண் நூற்று அந்த நூலை அஷ்ட கர்ம செயல்களுக்கு ஏற்ற இழை கணக்கு அறிந்து கட்டுவதால் அஷ்ட கர்ம காரியங்கள் ஜெயமடையும் என்பதனை குறிப்பிடுகிறது.

வகையாகும் வசியம் ஆகருணைக்குத் 
தொகையா மிரண்டிழை சொற்ற மோகனம் 
பகையாகும் ஏடனை பற்றுநூல் மூன்றாம் 
புகையாகும் தம்பனம் போக்குநால் நூல்தானே.
நூலஞ்சு பேதனம் ஆறிழை மாரணம் 
காலோன்றைக் கட்டி கருத்தொக்கச் சூழ்ந்தபின்  
பாலொன்று மென்மொழிப் பங்கயச்சத்திக்கு
சேலொன்று  மோமங்கள் செய்மந்திரமே.

மேற்கண்ட பாடலின் படி அஷ்ட கர்ம செயல்களான வசியம், ஆகர்ஷணம், மோகனம், வித்வேஷனம், தம்பனம், உச்சாடனம், பேதனம், மாரணம் 
 ஆகிய காரியங்களுக்கான நூல் இழை கணக்கினை நாம் தெளிவாக அறியமுடிகிறது. அவையாவது :

வசியம் - 2 இழை, மோகனம் - 3 இழை, தம்பனம் - 4 இழை, உச்சாடனம் - 4 இழை, ஆகர்ஷணம் - 2 இழை, வித்வேஷனம் - 3 இழை, பேதனம் - 5 இழை, மாரணம் - 6 இழை  இவற்றை தெளிவாக கவனத்தில் கொண்டு அந்தந்த எந்திரங்கள் எழுதும்போது அதற்குரிய இழை கணக்கில் அதற்குரிய வண்ண நூலால் கட்டி மந்திரங்களை உருவேற்றினால் அந்த காரியங்கள் ஜெயமுடன் முடியும்.

சுவாதி நட்சத்திரம் - விருட்சம் - பரிகாரம்

                                 சுவாதி  நட்சத்திரம் - விருட்சம் - பரிகாரம்               சுவாதி நட்சத்திரத்தில்  தெளிந்த அறிவுள்ளவர்க...