செவ்வாய், 20 மே, 2014

மிருகசீரிடம் நட்சத்திரம் - விருட்சம் - பரிகாரம்

            மிருகசீரிடம் நட்சத்திர அன்பர்கள் வாழ்வை எளிதாக எடுத்துக் கொள்ளக்கூடியவர்கள், தங்கள் கருத்துக்களை வெளியிடாமல் இரகசியமாக வைத்திருப்பார்கள், இளகிய மனம் கொண்டவர்கள், தன்னடக்கம் மிக்கவர்கள், உற்சாகமான பேச்சினை கொண்டவர்கள், அன்பும் பாசமும் நிறைந்தவர்கள், பாவ காரியங்களை செய்ய கூசுபவர்கள், எடுத்த காரியங்களை முடிக்கும் வல்லமை கொண்டவர்கள், தாயிடம் பாசம் மிக்கவர்கள்,  இவர்களுக்கு உண்டாகும் நட்சத்திர தோஷங்கள் போக்கவும், இவர்களின் வாழ்வில் உண்டான சோதனைகள் மாறி சாதனைகளும், வளமான வாழ்வும், செல்வ செழிப்பும் உண்டாக செய்ய வேண்டிய பரிகாரங்களை இனி கண்போம்.


அதி தேவதையும், அதி தெய்வமும் :


                                                                       சந்திரன் 



மிருகசீரிடம்  நட்சத்திர அன்பர்களின் அதிதேவதை வெண்மை நிறம் கொண்ட சந்திரன் ஆகும், ஸோமன் என்ற வடமொழி பெயர் கொண்டவர், பத்து குதிரைகள் பூட்டிய ரதத்தில் அமர்ந்து, வலது கரத்தில் தண்டமேந்தியபடி அபய வரதராக அருள்பாலிப்பவர். மிருகசீரிடம்  நட்சத்திரத்தின் அதி தெய்வம்  மஹா காளி ஆகும்.
மஹா காளி 

மிருகசீரிடம் நட்சத்திர மந்திரம் 

ஸ்வேதவர்ணா க்ருதி : ஸோமோ த்வி புஜோ 
வரதோ அஸ்துமே !
தஸாஸ்வர தமோரூட மிருகசீர்ஷ்ய தேவதா !!

சந்திர காயத்திரி மந்திரம் 

ஓம் பத்மத்வஜாய வித்மஹே 
ஹேம ரூபாய  தீமஹி !
தந்நோ ஸோம ப்ரசோதயாத் !!

மிருகசீரிடம் நட்சத்திர காயத்திரி மந்திரம் 

ஓம் சசிசேகராய வித்மஹே மஹா ராஜாய தீமஹி 
தந்நோ மிருகசீர்ஷா ப்ரசோதயாத் 


மிருகசீரிடம் நட்சத்திர பரிகார விருட்சம் 


 மிருகசீரிடம் நட்சத்திர அன்பர்களின் பரிகார விருட்சம் கருங்காலி மரம் ஆகும். அம்பன், அசும்பன் என்ற அரக்கர்களை வதம் செய்து அனைவரையும் காத்தவள் கரிய நிறத்தவளான காளி, அரக்கர்களை அழித்து அன்னை மஹா காளேசுவரரை வழிபட்டபோது அன்னை விருட்ச ரூபமாய் இருந்தாள். கரிய நிரத்தவளான காளி நின்ற மரமே கருங்காலி மரம் ஆனது. மிருகசீரிடம் நட்சத்திர அன்பர்கள் தான் பிறந்த  மிருகசீரிடம் நட்சத்திரம் வரும் நாளில்  கருங்காலி மரம் தல விருட்சமாக உள்ள ஆலயங்கள் சென்று கருங்காலி மரத்துக்கு நீர் உற்றுவதும்,  கருங்காலி மரத்தடியில் தியானம் செய்வதும், விருட்ச பரிகாரங்கள் செய்துகொள்வதும் சிறந்த பரிகாரங்கள் ஆகும். மிருகசீரிடம் நட்சத்திர அன்பர்கள் சந்திர காயத்திரி மந்திரம், 
மிருகசீரிடம் நட்சத்திர மந்திரம், மிருகசீரிடம் காயத்திரி மந்திரம் 
போன்ற மந்திரங்களை  கருங்காலி மரத்தின் அருகில் அமர்ந்து ஜெபம் செய்வது வாழ்வில் தோன்றும் துன்பங்களை நீக்கி இன்பமான வாழ்வும், செய்யும் செயல்களில் எல்லாம் வெற்றியும், உடலை வாட்டும் நோய்கள் தீர்ந்து நீண்ட ஆயுளும், வற்றாத செல்வமும், மங்காத புகழும் பெற்று நீடுடி வாழலாம்.



            நமது சர்வ சக்தி விருட்ச பீடத்தில் 27 நட்சத்திரங்களுக்கு உண்டான பரிகார விருட்சங்களும் பிரதிஷ்டை செய்து தினசரி பரிகார பூஜைகள் நடை பெற்று வருகின்றன. இவை மட்டுமின்றி மகா விருட்சங்களான ருத்ராட்சம், மஹா வில்வம், சரகொன்றை மற்றும் அதி முக்யமான பரிகார விருட்சங்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளது. இந்த விருட்சங்களுக்கு நடுவே பஞ்சம் மற்றும் பஞ்சமஹா பாவங்கள் சர்வ தோஷங்களை நீக்கும் பஞ்ச லிங்கங்களும் + பாதாள லிங்கமும் பிரதிஷ்டை செய்ய பணிகள் நடைபெற்று வருகிறது. எனவே சர்வ சக்தி விருட்ச பீடம் மிக உயர்ந்த பலன்களை தரும் நட்சத்திர பரிகார ஸ்தலம் ஆகும். உங்கள் வாழ்வு வளம் பெற இங்கு வந்து பரிகாரங்களை செய்து கொள்வது மிக்க பலன்தரும், உங்கள் வாழ்வு மலர உங்கள் துன்பங்களை களைய பஞ்ச லிங்க + பாதாள லிங்க பிரதிஷ்டை திருப்பணியில் உங்களையும் இணைத்துக்கொள்ளுங்கள், நன்கொடைகள் தந்து உதவுங்கள், திருப்பணிக்கு நன்கொடை அளிக்கும் அன்பர்களின் வாழ்வு சிறக்க அவர்கள் பிறந்த நட்சதிரதன்று (ஆயுள் முழுதும்) தொடர்ந்து பரிகார பூஜைகள் அவர்களுக்காக நடத்தப்படும்.



முகவரி :

                                       ஸ்ரீ லக்ஷ்மி தாச சுவாமிகள் ,
                                       சர்வ சக்தி விருட்ச பீடம்,
                                       ஸ்ரீ சர்வ சக்தி சேவா டிரஸ்ட் ,
                                       26/6, கிச்சகத்தியூர்,
                                       இலுப்பாபாளையம் (போஸ்ட்),
                                       சிறுமுகை - 641302
                                       தமிழ்நாடு, இந்தியா.
                                       செல் : 99440 99980, 85260 74891.

சுவாதி நட்சத்திரம் - விருட்சம் - பரிகாரம்

                                 சுவாதி  நட்சத்திரம் - விருட்சம் - பரிகாரம்               சுவாதி நட்சத்திரத்தில்  தெளிந்த அறிவுள்ளவர்க...