புதன், 21 மே, 2014

திருவாதிரை நட்சத்திரம் - விருட்சம் - பரிகாரம்

           திருவாதிரை நட்சத்திர அன்பர்கள் உடல் பாலம் மிக்கவர்கள். எளிதில் கோபப்படும் குணம் உண்டு, பார்ப்பதற்கு முரட்டு சுபாவம் உள்ளவர் போல் காணப்படுவர், எடுத்த காரியத்தை சிறப்பாக முடிக்க முயற்சிப்பார்கள், தன் திறமையை பற்றிய கர்வம் உண்டு, சுயநலம் உண்டு, தம் கருத்துக்களை நியாயப்படுத்த எளிதில் வாக்குவாதத்தில் இறங்குவார்கள் அதனால் அதிகப்படியான சங்கடங்களை அனுபவிப்பார்கள், ஆச்சார சீலர்களாகவும், வியாபாரத்தில் நிபுணர்களாகவும் விளங்குவார்கள்,நீடித்த ஆயுள் உள்ளவர்கள், புறம் பேசுவதில் ஆர்வம் உள்ளவர்கள், சந்தர்ப்பத்தை தகுந்து பொய் பேசவும் தயங்க மாட்டார்கள், அடிக்கடி நோய்வாய் படுவார்கள் என்றாலும் விரைவில் அதிலிருந்து மீள்வார்கள், குறிப்பாக மூட்டு வலிக்கு ஆளாவர்கள், வசதியற்ற நிலையில் வாழ்ந்தாலும் இரக்க குணம் உள்ளவர்கள்.  இவர்களுக்கு உண்டாகும் நட்சத்திர தோஷங்கள் போக்கவும், இவர்களின் வாழ்வில் உண்டான சோதனைகள் மாறி சாதனைகளும், வளமான வாழ்வும், செல்வ செழிப்பும் உண்டாக செய்ய வேண்டிய பரிகாரங்களை இனி கண்போம்.


அதி தேவதையும், அதி தெய்வமும் :

                                                                   சிவ பெருமான்



திருவாதிரை நட்சத்திர அன்பர்களின் அதிதேவதை ருத்ரன் (சிவன்) ஆகும், வெண்மை நிறத்துடன் சூலமும் கத்தியும் ஏந்தி அபய வரத ஹஸ்தத்துடன் ரிஷப வாகனத்தில் அமர்ந்து வலம் வருபவர். திருவாதிரை   நட்சத்திரத்தின் அதி தெய்வம்  சிவன் ஆகும். ஆகையால் தான் மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திர நாளன்று சிவனுக்குறிய ஆருத்ரா தரிசன விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
  கருடாழ்வார் 

கருடாழ்வார் அவதரித்த நட்சத்திரம் இதுவே என்பதால் பெருமாள் கோவில் செல்லும்போதெல்லாம் கருடாழ்வாரை வணங்குவது நலமாகும்.

திருவாதிரை நட்சத்திர மந்திரம் 

ருத்ர: ஸ்வேத வருஷாரூடே :
ஸ்வேதமால்ய: சதுர்புஜ: மி!
சூல கட்க அபயவரான் 
ததானோ மே ப்ரஸீதது மிமி !!

ருத்ர காயத்திரி மந்திரம் 

ஓம் தத்புருஷாய வித்மஹே 
மஹாதேவாய  தீமஹி !
தந்நோ ருத்ர ப்ரசோதயாத் !!

திருவாதிரை நட்சத்திர காயத்திரி மந்திரம் 

ஓம் மஹா ச்ரேஷ்டாய வித்மஹே பசும்தநாய தீமஹி 
தந்நோ ஆர்த்ரா ப்ரசோதயாத் 


திருவாதிரை நட்சத்திர பரிகார விருட்சம் 


திருவாதிரை நட்சத்திர அன்பர்களின் பரிகார விருட்சம் செங்காலி மரம் ஆகும். செங்காலி மரம் அபூர்வமாகவே கோவில்களில் தல விருட்சமாக அமையும். திருவாதிரை நட்சத்திர அன்பர்கள் தான் பிறந்த திருவாதிரை  நட்சத்திரம் வரும் நாளில் கருங்காலி மரம் தல விருட்சமாக உள்ள ஆலயங்கள் சென்று கருங்காலி மரத்துக்கு நீர் உற்றுவதும், கருங்காலி மரத்தடியில் தியானம் செய்வதும், விருட்ச பரிகாரங்கள் செய்துகொள்வதும் சிறந்த பரிகாரங்கள் ஆகும்.  திருவாதிரை நட்சத்திர அன்பர்கள் ருத்ர காயத்திரி , திருவாதிரை நட்சத்திர மந்திரம், திருவாதிரை நட்சத்திர காயத்திரி மந்திரங்களை கருங்காலி மரத்தின் அருகில் அமர்ந்து ஜெபம் செய்வது வாழ்வில் தோன்றும் துன்பங்களை நீக்கி இன்பமான வாழ்வும், செய்யும் செயல்களில் எல்லாம் வெற்றியும், உடலை வாட்டும் நோய்கள் தீர்ந்து நீண்ட ஆயுளும், வற்றாத செல்வமும், மங்காத புகழும் பெற்று நீடுடி வாழலாம்.



            நமது சர்வ சக்தி விருட்ச பீடத்தில் 27 நட்சத்திரங்களுக்கு உண்டான பரிகார விருட்சங்களும் பிரதிஷ்டை செய்து தினசரி பரிகார பூஜைகள் நடை பெற்று வருகின்றன. இவை மட்டுமின்றி மகா விருட்சங்களான ருத்ராட்சம், மஹா வில்வம், சரகொன்றை மற்றும் அதி முக்யமான பரிகார விருட்சங்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளது. இந்த விருட்சங்களுக்கு நடுவே பஞ்சம் மற்றும் பஞ்சமஹா பாவங்கள் சர்வ தோஷங்களை நீக்கும் பஞ்ச லிங்கங்களும் + பாதாள லிங்கமும் பிரதிஷ்டை செய்ய பணிகள் நடைபெற்று வருகிறது. எனவே சர்வ சக்தி விருட்ச பீடம் மிக உயர்ந்த பலன்களை தரும் நட்சத்திர பரிகார ஸ்தலம் ஆகும். உங்கள் வாழ்வு வளம் பெற இங்கு வந்து பரிகாரங்களை செய்து கொள்வது மிக்க பலன்தரும், உங்கள் வாழ்வு மலர உங்கள் துன்பங்களை களைய பஞ்ச லிங்க + பாதாள லிங்க பிரதிஷ்டை திருப்பணியில் உங்களையும் இணைத்துக்கொள்ளுங்கள், நன்கொடைகள் தந்து உதவுங்கள், திருப்பணிக்கு நன்கொடை அளிக்கும் அன்பர்களின் வாழ்வு சிறக்க அவர்கள் பிறந்த நட்சதிரதன்று (ஆயுள் முழுதும்) தொடர்ந்து பரிகார பூஜைகள் அவர்களுக்காக நடத்தப்படும்.



முகவரி :

                                       ஸ்ரீ லக்ஷ்மி தாச சுவாமிகள் ,
                                       சர்வ சக்தி விருட்ச பீடம்,
                                       ஸ்ரீ சர்வ சக்தி சேவா டிரஸ்ட் ,
                                       26/6, கிச்சகத்தியூர்,
                                       இலுப்பாபாளையம் (போஸ்ட்),
                                       சிறுமுகை - 641302
                                       தமிழ்நாடு, இந்தியா.
                                       செல் : 99440 99980, 85260 74891.


சுவாதி நட்சத்திரம் - விருட்சம் - பரிகாரம்

                                 சுவாதி  நட்சத்திரம் - விருட்சம் - பரிகாரம்               சுவாதி நட்சத்திரத்தில்  தெளிந்த அறிவுள்ளவர்க...