ஞாயிறு, 11 மே, 2014

மாந்தி இராசியில் இருப்பதினால் உண்டாகும் பலன்கள்

   
12 இராசிகளிலும் ஜனன ஜாதகத்தில் மாந்தி அமரும்போது உண்டாகும் பலன்களை பொதுவாக காணலாம்.

1.மேஷம் :
                     மேஷத்தில் மாந்தி அமர்ந்திருப்பது ஜாதகரின் புத்தியை கெடுத்துவிடும், தீய வழிகளில் செல்ல துணைபுரியும், இது தீமையை உண்டாக்கும், முரட்டு சுபாவமும், தந்தை சொல்லை மதிக்க மாட்டார்கள்.

2.ரிஷபம் :
                     அதிக கோபத்தை உண்டாக்கும், கண், காது இவைகளில் வியாதிகளை உண்டாக்கும். பேச்சு ஏட்டிக்கு போட்டியாக இருக்கும். பற்களை அடிக்கடி நறநறவென கடிக்கும் பழக்கம் உண்டாகும்.

3.மிதுனம் :
                      வாய், தொண்டை பகுதிகளில் நோய்கள் ஏற்படும். மன கோளாறுகளை உண்டாக்கும், மனதைரியத்தை குறைக்கும், கலைத்துறையினருக்கு நல்லது.

4.கடகம் :
                    சுய ஒழுக்கத்தையும் கெடுக்கும், வாக்கு சுத்தம் இருக்காது, கடன்தொல்லைகளை உண்டாக்கும், எல்லாம் தெரிந்தவர்கள் போல் வேசமிடும் போலிமனிதர்கள் இவர்களே.

5.சிம்மம் :
                    வீண் ஜம்பங்களை உடைய மனிதர்.வயிற்றுக் கோளறுகளையும், நுரையீரல் மற்றும் இருதய கோளாறுகளையும், பெண்களுக்கு யோனியில் நோய்களையும் தரும்.

6.கன்னி :
                    கல்வியில் தடையை கொடுக்கும், தாம்பத்ய வாழ்வு சரியாக இருக்காது, குடும்பத்தாருடன் சண்டை, சச்சரவு பிரிவினைகளை உண்டாக்கும். கெட்ட வழியில் நடத்தையை உண்டாக்கும்.

7.துலாம் :
                    கெட்ட நடத்தை உள்ள பெண்களின் தொடர்பு உண்டாகும், வாழ்வில் ஏற்ற தாழ்வுகளும், கெட்ட பெயரையும் உண்டாக்கும், வீண்கர்வம் இருக்கும்.

8. விருச்சிகம் :
                              வாழ்வே போராட்டமாகும், கடன், நோய், எதிரிகளின் தொல்லைகளை கொடுக்கும்.

9.தனுசு :
                  இந்த இராசியில் மாந்தி அதிக கெடுதலை தருவதில்லை.

10. மகரம் :
                     இந்த இராசியில் மாந்தி நிற்க வாழ்வில் அதிகமான கஷ்டங்களை உண்டாக்கும். கெட்டவழி நடத்தைகளை உண்டாக்கி வாழ்வினை பாழாக்கும்.

11.கும்பம் :
                      மாந்திரீக பதிப்புகளை உண்டாக்கும், ஏவல், பில்லி, சூனியம், செய்வினை பதிப்புகளால் வாழ்வில் சீர்கேடு உண்டு.

12.மீனம் :
                   வெளிநாடு சென்று வேலைசெய்யவும், வியாபாரம் செய்யவும் நல்லது, அதிக தனவரவினையும் உண்டாக்கும். பெண்களால் வாழ்வில் துன்பங்கள் வரும்.

               மாந்தி 2,7,12 ம் இடங்களை பார்க்கும் தன்மை உடையது. மாந்தி இருக்கும் வீடும், பார்க்கும் வீடுகளும் பாதகத்தை உண்டாக்கும். இந்த மாந்தியை குரு, சுக்கிரன், வளர்பிறை சந்திரன், புதன் பார்த்தால் கெடுபலன்கள் குறையும், உங்கள் ஜனன ஜாதகத்தில் மாந்தி கெடுபலன்களை உண்டாக்கும் வண்ணம் அமர்ந்திருந்தால் உடனே மாந்திகுரிய பரிகாரங்களை செய்துகொள்ள நல்ல பலன்களை உடனே பெறலாம்.

சுவாதி நட்சத்திரம் - விருட்சம் - பரிகாரம்

                                 சுவாதி  நட்சத்திரம் - விருட்சம் - பரிகாரம்               சுவாதி நட்சத்திரத்தில்  தெளிந்த அறிவுள்ளவர்க...