ஞாயிறு, 11 மே, 2014

நாக தோஷம் ஜோதிட பார்வை

               நாக தோஷம் என்ற பெயரை கேட்ட உடனே அச்சப்படுகின்றனர் பலர். இது  தேவையற்ற பயமாகும். சரியான பரிகாரம் மூலம் இந்த தோஷத்தை நீக்கி கொள்ளலாம். ஜோதிட ரீதியாக இராகு மற்றும் கேது லக்னம் அல்லது இராசிக்கு 1,2,4,5,7,8,10,12 ம் இடங்களில் அமர்ந்தால் நாக தோஷம் என்று பொருள். இந்த நிலை உங்களுக்கு ஜாதகத்தில் இருந்தால் கோட்சார ரீதியில் அந்த இடங்களுக்கு இராகு, கேது வரும் காலங்களில் கெடு பலன்கள் நடைபெறுவதை காணலாம்.
              நாக தோஷம் தரும் கெடுபலன்களை இனி பார்ப்போம். குடும்ப வாழ்வில் சிக்கல்கள் தொடரும், கல்வி கெடும், நாணயம் தவறும், குடும்பத்தை விட்டு விலக்கி வைக்கும், சேமிப்பு இருக்காது, தயார் சுகம் கெடும், தொழிலாளர் ஒத்துழைப்பு இருக்காது, திருமணம் தடைபடும், புத்திர பாக்கியம் கெடும், பெண்களின் ஜதகமாயின்  கற்பிக்கு சோதனை வரும்.
             இத்தகைய பலன் உள்ளவர்கள் உடனே சர்ப்ப தோஷ பரிகாரம் செய்தல் கெடு பலன்கள் நீங்கி வாழ்வு சுகம் பெரும்.

சுவாதி நட்சத்திரம் - விருட்சம் - பரிகாரம்

                                 சுவாதி  நட்சத்திரம் - விருட்சம் - பரிகாரம்               சுவாதி நட்சத்திரத்தில்  தெளிந்த அறிவுள்ளவர்க...