செவ்வாய், 27 மே, 2014

அற்புத வசிய மூலிகை அழுகண்ணி தொழுகண்ணி

     அழுகண்ணி மூலிகைக்கு வடமொழியில் சாவல்யகரணி என்றும் தொழுகண்ணிக்கு சல்லிய கரணி என்றும் பெயர் இம்மூலிகைகள் இரண்டும் காயகற்ப மூலிகைகள் ஆகும். மிகப்பெரியதொரு வசிய மூலிகைகள் உண்டு என்று சொன்னால் அவை அழுகண்ணி மற்றும் தொழுகண்ணி ஆகும்.

        அழுகண்ணி ஒரு அடி நீளம் வளரும் ஒரு குத்து செடியாகும்.இதன் இலை தடிமனாகவும் வழுவழுப்பாக கடலை இலையினை போல் இருக்கும். இந்த இலையின் நுனியில் இருந்து பனித்துளி போல் நீர் கசிந்து பூமியில் கொட்டும், எனவே இந்த செடிக்கு அடியில் பூமியில் இரப்பதம் இருக்கும். இந்த நீர் இனிப்பு சுவை உடையதால் எப்போதும் எறும்பு மொய்துக்கொண்டே இருக்கும். இது ஒரு ஜீவ சக்தி உடைய மூலிகை, இதனை முறைப்படி காப்பு கட்டி சாபம் நீக்கி இந்த மூலிகையை எடுத்து உபயோகப்படுத்த வேண்டும். அழுகண்ணியின் வடக்கு போகும் வேரை எடுத்து தங்கம் அல்லது வெள்ளியில் காப்பு அல்லது தாயத்து செய்து அதனுள் வேரை வைத்து வலது கரத்தில் அணிந்து கொண்டால் சகல காரியங்களும் வெற்றியாகும், லக்ஷ்மி தேவி நமக்கு வசியமாகி லக்ஷ்மி கடாட்சம் உண்டாகும், தொழில் வியாபாரங்களில் மிகப் பெரிய முன்னேற்றம் உண்டாகும்.

            தொழுகண்ணி இலை பார்ப்பதற்கு சனப்ப இலை போல இருக்கும், இதை தொட்ட உடன் பக்க இலையுடன் இலை சேர்ந்து கைகூப்புவது போல் இருக்கும், ஒரு முழ நீளம் வரை வளரும், அந்தி மல்லி செடியின் தோற்றத்தை ஒத்து இருக்கும். தொழுகண்ணியின் வடக்கே போகும் வேரை எடுத்து தங்கம் அல்லது வெள்ளியில் காப்பு அல்லது தாயத்து செய்து அதனுள் வேரை வைத்து வலது கரத்தில் அணிந்து கொண்டால் சகல ஜன வசியம், சகல காரிய வெற்றி, குபேர அந்தஸ்து லக்ஷ்மி கடாட்சம் உண்டாக்கும்.

     இவ்விரு காயகற்ப மூலிகைகளை முறைப்படி உண்டுவந்தால் உடலில் வெட்டுப்பட்ட பாகங்களை உடனே இணைக்கும் என்று சித்தர் பாடல்கள் குறிப்பிடுகின்றன.

                  வியாபாரத்தில் செல்வம் கொழிக்க வைக்கும் வாலை சக்கரம்
         இன்றைய கால கட்டத்தில் வியாபாரம் செய்வது என்பது மிகவும் கடுமையான ஒரு செயல் ஆகிவிட்டது. ஒன்று பல போட்டியாளர்களும், அந்த வியாபார போட்டியல் வாடிக்கையாளர்களை கவர விலை குறைப்பும், பல சலுகைகளும் பரிசுப்பொருட்களை வாடிக்கையளர்களுக்கு அள்ளி வழங்குவதும் போன்ற காரணங்களாலும், செய்யும் வியாபாரங்களில் நல்ல லாபத்தினை நாம் அடைவது என்பது சாத்தியமில்லை. மேலும் நமது ஜாதகங்களில் உள்ள தோஷங்களும், கிரகங்களின் கோட்சாரமும், திசை - புத்தியால் நமக்கு உண்டாகும் பலன்களும் அதாவது நமது கர்மவினை பலன்களும் நம்மை நாம் செய்யும் வியாபாரத்தில்  பெரும் இலாபத்தினை வெற்றிகளை வளர்ச்சியினை பாதிக்கும் அம்சங்களாக விளங்குகின்றன.

       சரி இந்த நிலை மாற நாம் தெய்வ அருளினை தான் நாட வேண்டி இருக்கிறது, நாம் நேரடியாக தெய்வ அருளினை பெறுவது இயலாத காரியம் என்பதை அறிந்த முன்னோர்களும் சித்தர்களும் நாமும் வளமுடன் வாழ என்ற நோக்கிலேயே அருளி சென்றவை தான் எந்திரங்களும் அதற்க்கு உண்டான மந்திரங்களும் அதற்கென உடன் வைக்கும் வசிய மூலிகைகளும் ஆகும். அவ்வகையில் வியாபாரிகள் வியாபாரங்களில் வெற்றி மேல் வெற்றி அடையவும், செல்வங்கள் அடையவும், வாடிக்கையாளர்கள் பெருகவும் சொல்லி சென்ற எந்திரமே "வியாபாரத்தில் செல்வம் கொழிக்க வைக்கும் வாலை சக்கரம்" ஆகும். இந்த எந்திரத்துடன் மஹா லக்ஷ்மி தனாகர்சன சக்கரம் வரைந்து அத்துடன் அழுகண்ணி, தொழுகண்ணி வேர்களை இணைத்துகட்டி தகுந்த மந்திர உரு ஒருலட்சம் ஏற்றி நம் கையில் அணிந்தால் மேற்கண்ட நற்பலன்கள் அனைத்தும் அடைந்து வாழலாம்.

சுவாதி நட்சத்திரம் - விருட்சம் - பரிகாரம்

                                 சுவாதி  நட்சத்திரம் - விருட்சம் - பரிகாரம்               சுவாதி நட்சத்திரத்தில்  தெளிந்த அறிவுள்ளவர்க...