புதன், 28 மே, 2014

பாவங்களும் தோஷங்களும் நீக்கும் தானம்தானங்கள் செய்வது என்பது நமது பாவங்களையும் தோஷங்களையும் நீக்கி நம்மை காப்பது என்று நமது சாஸ்திரங்கள் பறைசாற்றுகின்றன, தர்மம் தலைகாக்கும் தக்க சமயத்தில் உயிர் காக்கும் என்பது உண்மையே, நம் வாழ்வில் வரும் துன்பங்களை போக்கிக்கொள்ள அதற்க்கு உண்டான தானங்களை சாஸ்திரங்கள் வழிகாட்டுகிறது, அவையாவன,
அன்னதானம் செய்வதால் ஏற்படும் பலன் - வறுமையும் கடன்களும் நீங்கும்,
பூமிதானம் - பிரம்ம லோகத்தையும் ஈஸ்வர தரிசனத்தையும் தரும்,
கோதானம்  ரிஷிக்கடன், தேவகடன், பித்ருக் கடன் ஆகியவற்றைப் போக்கக் கூடிய து,
வஸ்திரதானம்   ஆயுளை விருத்தியாக்கும். 
தீபதானம் கண்பார்வையை தீர்க்கமாக்கும், பித்ருக்களை இருட்டிலிருந்து வெளிச்சத்துக்கு கொண்டு வரும்.
தேன் தானம் - புத்திரபாக்கியம் உண்டாகும். 
அரிசி தானம் செய்வதால் - பாவங்கள் தீரும், 
தயிர் தானம் - இந்திரிய விருத்தி ஏற்படும், 
நெய் தானம் - நோய் நிவர்த்தி உண்டாகும்,
நெல்லிக்கனி தானம் - ஞானம் உண்டாகும். 
பால் தானம் - துக்கம் நீங்கும். 
தேங்காய் தானம் - பூரண நலன் உண்டாகும், நினைத்த காரியம் வெற்றி பெறும்.
தங்கம் தானம் - குடும்ப தோஷ நிவர்த்தி,
வெள்ளி தானம் - மனக்கவலை நீங்கும்,
பழங்கள் தானம் - புத்தியும் சித்தியும் உண்டாகும்.
            இப்படி நமக்கு உண்டாகும் பலவித இன்னல்களை அதற்குரிய தானங்களை செய்வதன் மூலம் நீக்கிக் கொள்ளலாம். இவை எல்லாவற்றையும் விட மிக சிறந்த ஒரு தானம் உண்டு, அதுதான் ஆலயங்களை கட்டுவது, இது ஒரு தனி மனிதன் செய்ய இயலுமா? இயலாது ஆகையால் நம்மால் இயன்ற சிறு தொகையினை ஆலயம் கட்டும் பணிக்காக தானமாக தரலாம், இவ்விதம் தருவதால் நம்மை வாட்டும் தோஷங்கள், நோய்கள் நம்மை விட்டு விலகி ஓடும், நம்மை சூழ்ந்த கஷ்டங்கள் விலகி இனிமையான சந்தோஷமான வளமையான வாழ்க்கை உருவாகும்.
நமது சர்வ சக்தி விருட்ச பீடத்தில் 27 நட்சத்திரங்களுக்கு உண்டான பரிகார விருட்சங்களும் பிரதிஷ்டை செய்து தினசரி பரிகார பூஜைகள் நடை பெற்று வருகின்றன. இவை மட்டுமின்றி மகா விருட்சங்களான ருத்ராட்சம், மஹா வில்வம், சரகொன்றை மற்றும் அதி முக்யமான பரிகார விருட்சங்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளது. இந்த விருட்சங்களுக்கு நடுவே பஞ்சம் மற்றும் பஞ்சமஹா பாவங்கள் சர்வ தோஷங்களை நீக்கும் பஞ்ச லிங்கங்களும் + பாதாள லிங்கமும் பிரதிஷ்டை செய்ய பணிகள் நடைபெற்று வருகிறது. எனவே சர்வ சக்தி விருட்ச பீடம் மிக உயர்ந்த பலன்களை தரும் நட்சத்திர பரிகார ஸ்தலம் ஆகும். உங்கள் வாழ்வு வளம் பெற இங்கு வந்து பரிகாரங்களை செய்து கொள்வது மிக்க பலன்தரும், உங்கள் வாழ்வு மலர உங்கள் துன்பங்களை களைய பஞ்ச லிங்க + பாதாள லிங்க பிரதிஷ்டை திருப்பணியில் உங்களையும் இணைத்துக்கொள்ளுங்கள், நன்கொடைகள் தந்து உதவுங்கள், திருப்பணிக்கு நன்கொடை அளிக்கும் அன்பர்களின் வாழ்வு சிறக்க அவர்கள் பிறந்த நட்சதிரதன்று (ஆயுள் முழுதும்) தொடர்ந்து பரிகார பூஜைகள் அவர்களுக்காக நடத்தப்படும்.

 நன்கொடைகளை கிழ்கண்ட வங்கிக் கணக்கில் செலுத்தலாம் :

ACCOUNT NAME : SRI SARVA SAKTHY SEVA TRUST,
ACCOUNT NO       : 1031201001136,
BANK & BRANCH : CANARA BANK, SIRUMUGAI BRANCH,
IFSC CODE             : CNRB0001031.


முகவரி :

                                       ஸ்ரீ லக்ஷ்மி தாச சுவாமிகள் ,
                                       சர்வ சக்தி விருட்ச பீடம்,
                                       ஸ்ரீ சர்வ சக்தி சேவா டிரஸ்ட் ,
                                       26/6, கிச்சகத்தியூர்,
                                       இலுப்பாபாளையம் (போஸ்ட்),
                                       சிறுமுகை - 641302
                                       தமிழ்நாடு, இந்தியா.
                                       செல் : 99440 99980, 85260 74891.

சுவாதி நட்சத்திரம் - விருட்சம் - பரிகாரம்

                                 சுவாதி  நட்சத்திரம் - விருட்சம் - பரிகாரம்               சுவாதி நட்சத்திரத்தில்  தெளிந்த அறிவுள்ளவர்க...