செவ்வாய், 6 மே, 2014

கடைப்பிள்ளை சித்தர் பஞ்சாட்சரம்

ஆதியென்ற அட்சரமே பிரம்மமூலம்
       அருள்பெருகும் மூலமதில் அடங்கிநின்ற
நீதியென்ற அக்கினியே சோதியாக
        நிலையறிந்து ஆதாரம் நன்றாய்பார்த்து
சோதிபஞ்சாட்சரம் சுருக்கம் நேர்மைகாண
        துலங்கும் நந்தி மூலகாலன்கினாயன்
சாதி முதலானதொரு போகர்நாதன்
        சந்ததியாம் கொங்கணவர் பாதம்காப்பே

பாதமென்ற அடிமுடியே ஆதியந்தம்
         பதிவான அகாரமுடனே உகாரம்ரெண்டும்
பேதமென்றி யொன்றாகி நின்றபோது
          பெருகிநின்ற அச்சரமே பஞ்சபூதம்
நீதமென்ற பூதமதுக்குயிராய் நின்ற
          நிசமான ஓங்காரம் வாசிமூலம்
நாதமென்ற மூலமடா ஆதாரத்தில்
          நடனமுடன் பஞ்சாட்சரத்தை நயந்துபாரே

பாரடா மனம்குவித்து நயந்துபார்க்க
        பதிவான கைலாச தேகமாச்சு
நேரடா அஞ்சில் ஓங்காரம்சேர்த்தால்
         நிசமான சடாச்சரம்  ஆறேழுத்தாச்சு
தூரடா ஆறிலஞ்சு தூலமாச்சு
         சூட்சமமாய் யீன்ற அஞ்சைசொல்லக்கேளு
பேரடா ஆறறிந்து சொல்லப்போறார்
          பிரியமுடன் ஆதார பிலத்தைக்கேளே

பிலமான சூட்சபஞ்சாட்சரத்தை கேளு
         பேர்பெரிய கொங்கணவர் வீரத்தாலே
நலமான அகாரமுடன் உகாரங்க்கூட்டி
          நாடிநின்ற மகாரமடா மவுனஞ்சேர்த்து
தலமான சிகாரமுடனே வகாரங்கூட்டி
          தான்பார்க்க அஞ்செழுத்தும் அஞ்சுமூலங்
குலமான அஞ்சில் ஓங்காரம்சேர்த்துக்
          குணமுடனே தான்சுருக்கிக் குணமாய்நில்லே

குணமாக தான்சுருக்கி சிவமேசெய்ய
            கூடும் தியாகஒரு கருவைக்கேளு
மனமான மூலமதில் ஒம்மென்றூனி
            மார்க்கமுடன் நடுமனையில் உகாரங்கூட்டி
கனமாக்க கண்டமதில் லங்கென்றூனி
            கடாட்சமுடன் புருவமைய தமரில்நின்று
யினமாக வசிசிவ ஓம்மென்றூணி
            யின்பமுடன் நூத்தெட்டு உருவேசெய்யே

உருவரிந்து உருவேத்தி நயனசூட்சம்
        உறுதியுடன் பார்க்கையிலே சொதிகானுந்
திருவறிந்து சோதியை நான்யென்னசொல்வேன்
         தீர்க்கமுடன் சூரியன்போல் வட்டங்கானுங்
குருவிருந்த வட்டமதின் னுள்ளே பார்த்தால்
          குளிர்ந்த மதிபூரண சந்திரனே காணுங்
கருவிருந்த பூரணச்சந்திரன் னுள்ளே
         காணுதடா கற்பூரத் தீபந்தானே

தானான கற்பூரதீபந் தன்னை
           தடையறவே ஒருமுகமாய் பார்க்கும்போது
கோனான தீபவொளி வெளிச்சத்தாலே
            குருவான பரவெளியை கண்டேனப்பா
வானான பரவெளியை கண்டால்மைந்தா
             மகிமையை நானென்னசொல்வேன் நீநானாச்சு
ஊரான உலகமெல்லாம் நீநானாக
             ஒடுங்கிநின்ற சிலம்பொலியை கண்டேன்பாரே

பாரப்பா கண்டுகொண்டு நிலையில்வந்தேன்
          பதிவான அகாரமடா சிவமுமாச்சு
நேரப்பா உகாரமது சத்தியாச்சு
          நிசமான மகாரமப்பா வாலையாச்சு
தாரப்பா சிகாரமுடன் வகாரம்ரெண்டு
         தன்னுணர்வாய் நின்றதொரு வாசியாச்சு
காரப்பா வாசியைநீ யறிவின்கண்ணால்
        கலந்துநின்ற காரணத்தை கருதிக்கொள்ளே

கருவான தூலமுடன் சூட்சஞ்சொன்னேன்
          காரணபஞ்சாச்சரத்தை கருவாய் கேளு
உருவான அகாரமுடன் உகாரங்கூட்டி
         உருமையுடன் ஒங்காரஞ் சுத்திக்காட்டித்
திருவான அதன்கீழே மகாரம்போட்டுத்
          தீர்க்கமுடன் மகாரமதில் சூட்சமிட்டு நடுவிலேறி
குருவான அகாரம் றீங்காரமிட்டு
          கும்பமென்ற சுழிமுனையில் சூலம்போடே

சூலமிட்டு ஆதியந்த சிங்கு வங்கு
          சூரியகலை சந்திரகலை வாசிபூட்டி
ஆலவட்டமான சுழிமூடி யொன்றாக அமர்ந்து
          ஒன்றாய்நின்ற காரணந் தானப்பா
தூலமிட்டுச் சூட்சமிட்டுத் தூலசூட்சம்
          துலங்குகின்ற காரணந்தான் அநேகமாச்சு
மூலவட்டமான குரி யோகமான
          மூன்றேழுத்தும் ரெண்டேழுத்தும் அஞ்சுமாச்சே

அஞ்சுபஞ்சாட்சரச் சுருக்கம் ஆர்தான்காண்பார்
              அரிதரிது சொல்லுகிறேன் அறிவாய்கேளு
அஞ்சுமொன்றாய் நின்றதொரு நாதவிந்து
                 அடங்கியிருந் திரண்டுமொரு மணியுமாச்சு
அஞ்சுமுகமான மணி ஒங்காரத்தால்
               ஆறுமுகமான சடாச்சரமே யாச்சு
அஞ்செழுத்தும் ஆறேழுத்தும் ஒன்றேசூட்சம்
               அருமையுள்ள சுரூபமணி யானவாரே

வாரான சுரூபமணி நாதவிந்து
             மதிகதிரு மொன்றான மணிக்கிமைந்த
பேரான சக்திசிவபானந் தன்னைப்
             பெருகிநின்ற மணிதனக்கு தானேயூட்ட
நேரான சுரூபமணி கமலியாச்சு
              நிறைந்துநின்ற கமலிமணி தனக்குமைந்த
பேரான வாலரசந்தானே யூட்ட
               பெருகிநின்ற அட்டசித்து மணியுமாச்சே 

சுவாதி நட்சத்திரம் - விருட்சம் - பரிகாரம்

                                 சுவாதி  நட்சத்திரம் - விருட்சம் - பரிகாரம்               சுவாதி நட்சத்திரத்தில்  தெளிந்த அறிவுள்ளவர்க...