வியாழன், 22 மே, 2014

பூசம் நட்சத்திரம் - விருட்சம் - பரிகாரம்

            பூசம் நட்சத்திர அன்பர்கள் கலை ஆர்வம் மிக்கவர்கள், தாய் - தந்தையை அதிகம் நேசிக்க கூடியவர்கள், யூகித்து அறியும் திறனும் புத்திசாலி தனமும் கொண்டவர்கள், தெய்வ பக்தி மிகுந்தவர்கள், விரைவில் கோபப்படும் குணமும், நட்புக்கு நேசக்கரம் நீட்டும் குணமும் உண்டு, பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பார்கள், நேர்மை உள்ளம் கொண்டவர்கள், கெளரவத்தை விட்டுக்கொடுக்கதவர்கள், எந்த சூழ்நிலையையும் சமாளிக்கும் சாமர்த்தியம் கொண்டவர்கள்,  இவர்களுக்கு உண்டாகும் நட்சத்திர தோஷங்கள் போக்கவும், இவர்களின் வாழ்வில் உண்டான சோதனைகள் மாறி சாதனைகளும், வளமான வாழ்வும், செல்வ செழிப்பும் உண்டாக செய்ய வேண்டிய பரிகாரங்களை இனி கண்போம்.


அதி தேவதையும், அதி தெய்வமும் 

                                                               ஸ்ரீ குருபகவான் 


பூசம் நட்சத்திர அன்பர்களின் அதிதேவதை பொன்  நிறம் கொண்ட ஸ்ரீ குருபகவான்  ஆகும்,  அபய வரத முத்திரை காட்டி அமர்ந்த நிலையில் அருள்பாலிப்பவர். பூசம் நட்சத்திரத்தின் அதி தெய்வம் கோமுக்தீஸ்வரர்  ஆகும். பசுவுக்கு முக்தி தந்ததால் இறைவனுக்கு இந்த திருநாமம் உண்டானது.
கோமுக்தீஸ்வரர் 

பூசம் நட்சத்திர மந்திரம் 

வந்தே ப்ரகஸ்பதிம் புஷ்ய தேவதாம் திவ்ய விக்ரகம் !
ஸர்வாபரண ஸம்பன்னம் ஸக்ர மந்த்ரிணமாதராத் !!

பிரகஸ்பதி மந்திரம் 

ஓம் பராவரசாய வித்மஹே 
குருவ்யக்தாய  தீமஹி !
தந்நோ குரு ப்ரசோதயாத் !!

பூசம் நட்சத்திர காயத்திரி மந்திரம் 

ப்ரம்மவரச்சஸாய வித்மஹே மஹா திஷ்யாய தீமஹி 
தந்நோ புஷ்ய ப்ரசோதயாத் 


பூசம் நட்சத்திர பரிகார விருட்சம் 


 பூசம் நட்சத்திர அன்பர்களின் பரிகார விருட்சம் அரச மரம் ஆகும். ஒரு அரச மரத்தை நட்டால் அவர் சந்ததியினர் அனைவருக்கும் சொர்கப் பதவி கிட்டும் என விருட்ச ஆயுர்வேதம் கூறுகிறது. மரங்களில் நான் அரச மரம் என கண்ணன் கீதையில் கூறுகிறார். பூசம் நட்சத்திர அன்பர்கள் தான் பிறந்த  பூசம் நட்சத்திரம் வரும் நாளில்  அரச மரம் தல விருட்சமாக உள்ள ஆலயங்கள் சென்று அரச மரத்துக்கு நீர் உற்றுவதும்,  அரச மரத்தடியில் தியானம் செய்வதும், விருட்ச பரிகாரங்கள் செய்துகொள்வதும் சிறந்த பரிகாரங்கள் ஆகும். பூசம் நட்சத்திர அன்பர்கள் குரு காயத்திரி மந்திரம், 
பூசம் நட்சத்திர மந்திரம், பூசம் நட்சத்திர  காயத்திரி மந்திரம் 
போன்ற மந்திரங்களை  அரச மரத்தின் அருகில் அமர்ந்து ஜெபம் செய்வது வாழ்வில் தோன்றும் துன்பங்களை நீக்கி இன்பமான வாழ்வும், செய்யும் செயல்களில் எல்லாம் வெற்றியும், உடலை வாட்டும் நோய்கள் தீர்ந்து நீண்ட ஆயுளும், வற்றாத செல்வமும், மங்காத புகழும் பெற்று நீடுடி வாழலாம்.            நமது சர்வ சக்தி விருட்ச பீடத்தில் 27 நட்சத்திரங்களுக்கு உண்டான பரிகார விருட்சங்களும் பிரதிஷ்டை செய்து தினசரி பரிகார பூஜைகள் நடை பெற்று வருகின்றன. இவை மட்டுமின்றி மகா விருட்சங்களான ருத்ராட்சம், மஹா வில்வம், சரகொன்றை மற்றும் அதி முக்யமான பரிகார விருட்சங்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளது. இந்த விருட்சங்களுக்கு நடுவே பஞ்சம் மற்றும் பஞ்சமஹா பாவங்கள் சர்வ தோஷங்களை நீக்கும் பஞ்ச லிங்கங்களும் + பாதாள லிங்கமும் பிரதிஷ்டை செய்ய பணிகள் நடைபெற்று வருகிறது. எனவே சர்வ சக்தி விருட்ச பீடம் மிக உயர்ந்த பலன்களை தரும் நட்சத்திர பரிகார ஸ்தலம் ஆகும். உங்கள் வாழ்வு வளம் பெற இங்கு வந்து பரிகாரங்களை செய்து கொள்வது மிக்க பலன்தரும், உங்கள் வாழ்வு மலர உங்கள் துன்பங்களை களைய பஞ்ச லிங்க + பாதாள லிங்க பிரதிஷ்டை திருப்பணியில் உங்களையும் இணைத்துக்கொள்ளுங்கள், நன்கொடைகள் தந்து உதவுங்கள், திருப்பணிக்கு நன்கொடை அளிக்கும் அன்பர்களின் வாழ்வு சிறக்க அவர்கள் பிறந்த நட்சதிரதன்று (ஆயுள் முழுதும்) தொடர்ந்து பரிகார பூஜைகள் அவர்களுக்காக நடத்தப்படும்.


முகவரி :

                                       ஸ்ரீ லக்ஷ்மி தாச சுவாமிகள் ,
                                       சர்வ சக்தி விருட்ச பீடம்,
                                       ஸ்ரீ சர்வ சக்தி சேவா டிரஸ்ட் ,
                                       26/6, கிச்சகத்தியூர்,
                                       இலுப்பாபாளையம் (போஸ்ட்),
                                       சிறுமுகை - 641302
                                       தமிழ்நாடு, இந்தியா.
                                       செல் : 99440 99980, 85260 74891.

சுவாதி நட்சத்திரம் - விருட்சம் - பரிகாரம்

                                 சுவாதி  நட்சத்திரம் - விருட்சம் - பரிகாரம்               சுவாதி நட்சத்திரத்தில்  தெளிந்த அறிவுள்ளவர்க...