ஞாயிறு, 11 மே, 2014

பிரம்மஹத்தி தோஷம்-விளைவும்-பரிகாரமும்

       
பிரம்மஹத்தி தோஷம் என்பது ஆசிரியர்களுக்கு உத்தம குருவுக்கு பிராமணர்களுக்கு எந்த வழியிலேனும் துரோகம் செய்வதாலும், பலரின் சொத்துக்களை நேர்மையற்ற வழியில் அபகரித்ததாலும், கன்னி பெண்ணை ஏமாற்றி கற்பை சூரையாடிவிட்டு பின் திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றியதாலும், தன்னுடைய பதவி அதிகாரத்தை பயன்படுத்தி பிறரை இம்சித்ததாலும், நல்ல பாம்பை வெள்ளிக்கிழமை தினம் அடித்து கொன்ற பாவத்தினாலும் ஏற்படுகிறது, இந்த தோஷம் சென்ற பிறவியில் உண்டானதா, இந்த பிறவியில் உண்டானதா என்பதை உங்கள் பிறப்பு ஜாதகம் மூலம் கண்டறியலாம்.
       ஜோதிட சாஸ்த்திரத்தின் படி குருவை சனியை எந்த  விதத்தில் தொடர்பு கொண்டாலும் பிரம்மஹத்தி தோஷம் உண்டு, குரு சனி சேர்க்கை, பார்வை, குரு சனி சாரம் பெறுதல், சனி குரு சாரம் பெறுவது, குரு சனி பரிவர்த்தனை பெறுவது முதலிய அம்சங்கள் பிரம்மஹத்தி தோஷத்திற்கான  கிரக நிலைகள் ஆகும்.


         இந்த பிரம்மஹத்தி தோஷத்தின் விளைவுகளாவன :-
                                                                                                                       தீராத நோய்கள் உடலில் ஏற்பட்டு வாட்டும், மணவாழ்கையில், புத்திர பாக்யம் உண்டாவதில், மாங்கல்ய பாக்யத்தில் பாதிப்புகள் உண்டாகும்.  தொழில் பாதிப்பு, தீராத கடன்கள் ஏற்பட்டு வாட்டும். செய்யாத தவறுகளுக்கு தண்டனை அடைவது, மன நிம்மதியின்மை, புத்தி சுவாதீனம் இல்லாமல் போவது என இதன் பாதிப்புகள் தோன்றி வாழ்வை சீர்குலைக்கும்.
       

          பரிகாரம் :
                             தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் கோவில் சென்று தோஷ நிவர்த்தி பரிகாரம் செய்யவும் . கோவை மாவட்டம் பாலமலை சென்று குளத்தில் நீட்டி செங்கோதை, பூங்கோதை அம்மன்    சமேத அரங்கநாதரையும் வணங்க தோஷம்  நீங்கும். இராமேஷ்வரம்  சென்றும் பரிகாரம் செய்து  கொள்ளலாம். மேலும்  சந்தேகங்களை தீர்த்து கொள்ள என்னை தொடர்பு கொள்ளவும்.                              

சுவாதி நட்சத்திரம் - விருட்சம் - பரிகாரம்

                                 சுவாதி  நட்சத்திரம் - விருட்சம் - பரிகாரம்               சுவாதி நட்சத்திரத்தில்  தெளிந்த அறிவுள்ளவர்க...