வியாழன், 17 ஜூலை, 2014

அபூர்வ காயகற்ப மூலிகை - கல்பிறமி

                          அபூர்வ காயகற்ப மூலிகை - கல்பிறமிகல்லை இளக்கி மெழுகாக்கும் 
     கல்லில் பிறமி இதன்பெருமை 
சொல்லில் உணர்த்த முடியாது 
     சொக்கர் அறிவார் யாரறிவார் 
பல்லு உதிர்ந்தது தான்முளைத்து 
     பாலன் ஆவான் கொண்டவனும் 
நில்லா உடலும் நிலைத்துவிடும் 
     நீண்டு ஆயுள் பெருகிடுமே 
                                                - தேரையர். 

                 இந்த அபூர்வ காயகற்ப மூலிகை - கல்பிறமி பற்றி தேரையர் பாடிய பாடல். அபூர்வ காயகற்ப மூலிகை - கல்பிறமி கல்லைக்கூட இளகவைத்து மெழுகின் பதமாக்க கூடியது என்றும் இந்த அபூர்வ மூலிகையின் சக்தியை வார்த்தைகளால் சொல்ல முடியாதது எனவும் அந்த சிவபெருமானை தவிர இதன் சக்தியை தெரிந்தவர் இந்த உலகில் யாரும் கிடையாது என்றும் இந்த அபூர்வ காயகற்ப மூலிகை - கல்பிறமியை முறைப்படி உண்டுவந்தால் பல்லு உதிர்ந்த கிழவனும் மீண்டும் பல் முளைத்து வாலிபன் ஆகிவிடுவான் என்றும் அழிந்துப் போகக்கூடிய அழியாமல் காயகற்பம் ஆகி நீண்ட ஆயுள் கிடைக்கும் என்றும் தேரையர் குறிப்பிடுகிறார். இன்னும் சில சித்தர் பாடலின்படி நாக ரச மெழுகு,  வெள்ளி ரச மெழுகு, வெள்வங்க ரச மெழுகு, அயகாந்த ரச மெழுகு முதலியவை உடலை காயகற்பம் ஆக்குவதற்கும் கௌரி பாஷாண மெழுகு, வெள்ளை பாஷாண மெழுகு, கார்முகில் பாஷாண மெழுகு, செம்புத்தொட்டி பாஷாண மெழுகு முதலியவை மூலம் இரசவாதம் என்னும் தங்கத்தை உருவாக்கும் வித்தையும் செய்யப்பட்டது என்று அறிய முடிகிறது. அபூர்வ காயகற்ப மூலிகை - கல்பிறமி பற்றி வாசகர்கள் அறிந்துகொள்ளவே இங்கே புகைப்படத்துடன் விளக்கினேன்.

சுவாதி நட்சத்திரம் - விருட்சம் - பரிகாரம்

                                 சுவாதி  நட்சத்திரம் - விருட்சம் - பரிகாரம்               சுவாதி நட்சத்திரத்தில்  தெளிந்த அறிவுள்ளவர்க...