வெள்ளி, 18 ஜூலை, 2014

அமானுஷ்யம் - வீட்டால் வந்த சோதனை

                        அமானுஷ்யம் - வீட்டால் வந்த சோதனை                     ஒரு மாதத்திற்கு முன்பு ஒரு இருபத்தி எட்டு வயதுடைய இளம் பெண் மற்றும் அவளின் தந்தை என்னை தேடி சர்வ சக்தி விருட்சபீடம் வந்திருந்தனர். பார்த்தால் நன்கு படித்து நல்ல உத்தியோகத்தில் இருப்பதும் பார்த்த உடனே தெய்வானுகிரகதால் எனக்கு புலப்பட்டது. ஆனால் அவளின் தந்தையோ எதோ எதற்கும் வழி இல்லாதவர் போல உடை பாவனைகள் இருந்தது, அவர்கள் இருவரின் முகமும் சோகமே படிந்திருந்தது அவர்கள் வந்த சமயம் நான் வேறு ஒருவருக்கு இருந்த ஏவலை நீக்கும் பணியில் மும்முரமாய் இருந்ததால் அவர்களை சிறிது நேரம் காத்திருக்க சொல்லிவிட்டு என் பணியை தொடரலானேன்.

                 என் பணியை முடித்துவிட்டு அவர்களை அழைத்தேன், உங்களுக்கு என்ன பிரச்சனை எதற்க்காக என்னை தேடி வந்துள்ளீர்கள் என்றேன். அந்த பெண் பேச துவங்கினாள். எங்கள் வீட்டில் எதோ ஒரு அமானுஷ்யம் உள்ளது. இரவில் நிம்மதியாக தூங்க கூட முடிவதில்லை, படுத்தால் ஒரு கை மட்டும் அமானுஷ்யமாக வந்து முகத்தில் அடிக்கிறது. விட்டத்தின் மேல் அமானுஷ்யமாக ஒரு உருவம் உட்கார்ந்து பயமுறுத்துகிறது, அந்த வீட்டுக்கு சென்றதில் இருந்தே தொடர்ந்த விரைய செலவுகள் தான் வந்தது, மருத்துவ செலவுகள் வந்தது, என் தந்தை செய்து வந்த தொழிலும் நலிந்து விட்டது, தற்போது நன் மட்டும் BE முடித்துவிட்டு பெங்களூரில் வேலை பார்த்து வருகிறேன், என் தம்பி படித்துக் கொண்டு இருக்கிறான், தற்போது நான் சம்பாதிப்பது மட்டுமே மொத்த குடும்பதிக்கும் வருமானம், சரி வீடு மாறி வேறு வீடு சென்று விடலாம் என்றாலும் அந்த அமானுஷ்ய சக்தி விடுவதில்லை, சொந்த வீடு கூட கட்ட முயற்சிதோம் அது ஒரு பெருங்கதை அஸ்திவாரத்துடன் நின்று போயிற்று, இந்த அமானுஷ்ய பாதிப்பில்  தப்பிக்க ஒரு நல்ல வழியினை நீங்கள் தான் சொல்ல வேண்டும் என்று சொல்லி முடித்தாள்.

                 நானும் என்னுடைய தெய்வத்தை வேண்டிக்கொண்டு அவர்கள் வீட்டில் என்ன அமானுஷ்ய சக்தி இருக்கிறது என்று பார்த்தேன், முன் ஒரு காலத்தில் வாழ்ந்த மாந்த்ரீகன் ஒருவன் துஷ்ட வேலைகளை செய்ய சுடுகாட்டு மாடன் என்ற தேவதையை அங்கு நிலைப்பெற செய்து வழிபட்டு வந்தான் அவன் இறந்த பல வருடங்களுக்கு பிறகு அந்த இடத்தை ஒருவர் வாங்கி வீடு கட்டினார், அந்த மந்த்ரீகன் இறந்து போயிருந்தாலும் அங்கு நிலைபெற்ற சுடுகாட்டு மாடன் அந்த இடத்தை விட்டு விலகவில்லை, சுடுகாட்டு மாடனுக்கு பல ஆண்டுகளாய் பலிகள் ஏதும் இல்லை, ஆகவே உங்கள் வீட்டில் அடிக்கடி உயிர் பலிகள் உண்டாவது உண்மையா என்றேன், ஆமாம் என்றனர், உங்கள் வீட்டில் நடை பிணமாக யாராவது இருக்க வேண்டுமே என்றேன், அதற்கும் ஆமாம் என்றனர், உங்களுக்கு மட்டுமல்ல சுற்றியிருக்கும் வீடுகளிலும் உங்களை போலவே நடக்கும் என்றேன், அதற்கும் ஆமாம் என்றனர் - பிறகு சொன்னேன் இது அங்கு அந்த மந்த்ரீகன் நிலைபெற செய்துவிட்டு சென்ற சுடுகாட்டு மாடனின் திருவிளையாடல் என்று. பின் அதற்குரிய பரிகாரங்களை கூறி செய்து கொடுத்தேன், பின் ஒரு வரம் கழித்து போன் வந்தது இப்பொழுதெல்லாம் வீட்டில் அந்த அமானுஷ்யம் வருவதில்லை, நிம்மதியாக உறங்கினோம், உங்களுக்கும் உங்கள் பீடதிக்கும் என்றும் நாங்கள் கடமைப் பட்டவர்கள், உயிருள்ளவரை உங்களுக்கு நன்றி சொல்லுவோம். மீண்டும் அடுத்த அமானுஷ்யத்தில் சந்திப்போம் ...

சுவாதி நட்சத்திரம் - விருட்சம் - பரிகாரம்

                                 சுவாதி  நட்சத்திரம் - விருட்சம் - பரிகாரம்               சுவாதி நட்சத்திரத்தில்  தெளிந்த அறிவுள்ளவர்க...