சனி, 23 ஆகஸ்ட், 2014

ஏவல் பில்லி சூனியம் நீக்கும் மோடி வித்தை

             ஏவல் பில்லி சூனியம் நீக்கும் மோடி வித்தை பற்றி இங்கு காணலாம். உலகிலேயே மாந்திரீக முறையில் ஜாம்பவான்கள் மட்டுமே உபயோகித்து இன்று மறைந்து போன முறைகளில் ஒன்று மோடி வித்தை. இத்தகைய மாந்திரீக முறையை செய்பவர்களை மோடி மஸ்தான் என்பார்கள்.
               
           ஏவல் பில்லி சூனியம் நீக்கும் மோடி வித்தை என்பது  ஏவல் பில்லி சூனியத்தால் பாதிக்கப்பட்டவர் உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் சரி அவர்கள் மந்திரீகரிடம் நேரில் வராமலேயே அவர்களுக்கு உண்டான ஏவல் பில்லி சூனியத்தை நீக்குவதாகும்.
                                                  
                       

           ஏவல் பில்லி சூனியம் நீக்கும் மோடி வித்தையில்  சுடுகாட்டு மண்ணை கொண்டு ஒரு பாவை செய்து அதில் ஏவலை நீக்குவதற்கு உண்டான எந்திரத்தை எழுதி அந்த பாவையின் ஆசன வாயில் சொருகி ஏவலால் பாதிக்கப் பட்டவரின் கைவிரலில் வெட்டப்பட்ட நகங்களை பாவையின் நகங்களில் பொருத்தி, பின் ஏவலால் பாதிக்கப் பட்டவரின் உச்சந்தலை முடியை பாவையின் உச்சந்தலையில் பொருத்தி, பாவையின் கண்களுக்கு சிவப்பு நிற கற்களை வைத்து பாவை உருவாக்கப்படும்.

           அந்த ஏவல் பாவையை  ஓரிடத்தில் நிற்க வைத்து அதன் அருகிலே ஏவல் பில்லி சூனியத்தால் பாதிக்கப்பட்டவரின் போட்டோவை வைத்து ஏவல் பாவையையும் போட்டோவையும் தனித்தனியாக ஒன்பது முறை நூலால் சுற்றி சுற்றியது போக மீதமுள்ள நூல் கண்டை வலது உள்ளங்கையில் வைத்துக்கொண்டு ஏவல் இறக்கும் மந்திரத்தை தினம் ஒன்றுக்கு 108 உரு வீதம் மூன்று நாட்களும் உருவேற்றவேண்டும்.

            அந்த   ஏவல் பாவைக்கு படையலாக இறைச்சி வகைகளும், பழவகைகள், இனிப்பு வகைகள் அவல் கடலை மதுபானம் சுருட்டு முதலியன படைக்கவேண்டும் . ஒரு நாள் ஏவலுக்கு படைத்ததை மறுநாள் மாற்றி மீண்டும் புதிதாக படைக்க வேண்டும். இப்படி மூன்று நாட்களும் படையல் படைக்க வேண்டும்.

            மூன்று நாட்கள் முடிந்தவுடன் அந்த  ஏவல் பாவையை ஒரு மண் சட்டியில் வைத்து பூமியில் புதைக்க ஏவல் பில்லி சூனிய பாதிப்பு நீங்கி அந்த நபர் குணமடைவர். இப்படி ஆளே நேரில் வராமல் ஏவலை நீக்குவது மோடி வித்தை ஆகும்.

அமானுஷ்யம் - மோகினி பிசாசை வைத்து உருவேற்றிய ஏவல்

அமானுஷ்யம் - மோகினி பிசாசை வைத்து உருவேற்றிய ஏவல்                  கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இருந்து ............. என்ற நபர் சர்வ சக்தி விருட்ச பீடம் வந்து என்னை சந்தித்தார். பார்பதற்கு வசதியான குடும்பத்தை சேர்ந்தவர் போன்ற தோற்றம் தெரிந்தது. ஆனால் அவர் முகம் மட்டும் களையிழந்து சோகம் படர்ந்து காணப்பட்டது. சிறிது நேரத்தில் அவரே தனக்கு நடந்து கொண்டிருக்கும் அமானுஷ்ய விஷயங்களை சொல்ல ஆரம்பித்தார்.
             நான் இரவில் நிம்மதியாக தூங்கி பத்து வருட காலம் ஆகிவிட்டது, எனது படுக்கை அறையில் சென்று மின்விசிறியை ஆன் செய்தால் அந்த மின்விசிறியில் ஒரு ஆணும் பெண்ணும் (அமானுஷ்ய  உருவங்கள்) நிர்வாணமாக வந்து பாட்டுப்படி என்னை கேலி செய்கிறது. மின்விசிறியை அணைத்துவிட்டு சுவற்றை பார்த்தல் அதே அமானுஷ்ய  ஆண் பெண் உருவங்கள் சுவற்றில் வந்து நிர்வாணமாக நடனமாடுகிறது, நானும் எனது மனைவியும் படுக்கையில் இருந்ததை சொல்லி கேலி செய்கிறது. பகலில் காரை ஓட்டிச் சென்றால் எதிரில் வரும் வாகனதில் இதே அமானுஷ்ய உருவங்கள் நிர்வாணமாக வந்து நடனமாடி கேலி செய்கிறது, இதனை ஒருகணம் பார்த்தல் உடனே விபத்து ஏற்பட்டு விடுகிறது. இதுவரை கடந்த பத்து வருடத்தில் சுமார் இருபது முறை விபத்து உண்டாகி அதில் தப்பிதிருகிறேன், அதேபோல் வியாபாரத்திலும் இந்த பத்து வருடத்தில் கையில் இருந்த 22 கோடி ரூபாயை இழந்து மேலும் 3 கோடி கடனுமாகி அந்த கடனுக்கு மதம் 6 இலட்சம் ரூபாய் வரை வட்டி கட்டி வருவதாகவும், இப்படி தனக்கு நடக்கும் அமானுஷ்ய விஷயங்களை பிறரிடம் சொன்னால் என்னை பைத்தியகாரன் என்று முத்திரை குத்துகிறார்கள். கட்டிய மனைவியும் பெற்ற மகளும் கூட நான் சொல்வதை நம்பவில்லை மாறாக என்னை கேலி செய்கின்றனர். இந்த தர்ம சங்கடத்தில் இருந்து என்னை காப்பாற்றி என் வியாபாரங்கள் மீண்டும் செழித்து கடன்கள் அடைந்து நிமதியாக நான் வாழ வழிகாட்ட வேண்டும் என்று கெஞ்சினார்.
             இதையெல்லாம் பொறுமையாக கேட்டுவிட்டு பூஜையில் அமர்ந்து இவருக்கு நடக்கும் அமானுஷ்ய சம்பவங்களுக்கு என்ன காரணம், அதை எப்படி நீக்குவது என்பதை என் அன்னையிடம் கேட்டேன். என் அன்னை எனக்கு தெளிவுபடுத்தினாள். பின் அவருக்கு விஷயங்களை தெளிவாக விளக்கினேன்.
             உங்கள் முதல் மனைவி என்ன செய்தார் என்றேன்? அவளுக்கும் எனக்கும் ஒத்துவரவில்லை வரவில்லை, அவளுடன் வாழ விருப்பமில்லை எனவே விவாகரத்து கொடுத்துவிட்டேன் என்றார். பின் இரண்டு வருடம் கழிந்து இன்னொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டேன், இப்போது   என் மகளுக்கு 22 வயதாகிறது. அடுத்த மாதம் மகளுக்கு திருமணம் என்றார்.
                உங்கள் முதல் மனைவி தான் நீங்கள் நிம்மதியுடன் வாழவே கூடாது என்று திறமையான ஒரு மந்திரீகரை அழைத்து மோகினிகளை வைத்து  உருவேற்றி ஏவலை செய்து வைத்துள்ளார். அந்த மோகினி உருவங்களே வந்து உங்களுக்கு  துன்பம் தருகிறது. அந்த ஏவல் தான் உங்கள் குடும்பமும், வியாபாரமும் சீர் குலைந்ததற்கு காரணம் என்று சொன்னேன்.
              இந்த ஏவலை மிகவும் கஷ்டப்பட்டுத்தான் போக்க முடியும். மிகவும் கடுமையான விஷயம் தான் கவனமாக நீக்க வேண்டும் இதில் கரணம் தப்பினால் இதை போக்கும் எனக்கு மரணம் தான் என்றேன். இருந்தாலும் உங்களை பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது நாளை வாருங்கள் உங்களுக்கான பரிகாரங்களை துவக்கி விடுகிறேன் என்றேன்.
                மறுநாள் அவரும் வந்தார் சில கடினமான பரிகார முறைகளை மேற்கொண்டு அவருக்கு செய்து வைத்த ஏவலை நீக்கி அவரை அனுப்பிவைத்தேன். இப்பொழுது அவருக்கு அந்த அமானுஷ்ய சம்பவங்கள் ஏதும் நடப்பதில்லை, மிகவும் சந்தோசமாகவும், நிம்மதியாகவும் இருக்கிறார். அவரின் வியாபாரங்களும் நன்றாக நடைபெற்று வருகிறது. அமானுஷ்ய உண்மை சம்பவங்கள் தொடரும்....

எந்திரங்கள் - சகல விதமான காரியங்களும் வெற்றி அடைய

  
சகல விதமான காரியங்களும் வெற்றி அடைய எந்திரங்கள் பட்டியல் 1.காதலர்கள் விரும்பியவரை மணந்து கொள்ள எந்திரம்,

2.பிரிந்து சென்ற கணவன் அல்லது மனைவியை திரும்ப வரவழைக்க எந்திரம்,

3.விரைவில் திருமணம் நடக்க எந்திரம்,

4.பெண் ஆசை ஒழிய எந்திரம்,

5.ஆண் ஆசை ஒழிய எந்திரம்,

6.துமாபதி பிரிவு முறை (தகாத உறவை பிரிக்க) எந்திரம்,

7.இடத்தை கலி செய்ய எந்திரம்,

8.எதிரியின் நாவினை கட்ட எந்திரம்,

9.வயதுக்கு வராத பெண்கள் வயதுக்கு வர எந்திரம்,

10.சபைக்கட்டு ( சபையில் நம்மை எதிர்த்து யாரும்  பேசாமல் இருக்க ) எந்திரம்,

11.தன்மேல் அனைவரும் அன்பும் ஆசையுமாயிருக்க காரிய சித்தி எந்திரம்,

12. குபேர வசியம் ( பணம் கையில் தங்க ) எந்திரம்,

13.ஏழரை சனி, அஷ்டம சனி, அர்தஷ்டம சனி தொல்லைகள் நீங்க எந்திரம்,

14.குரு எந்திரம் ( சுபகாரியங்கள் தடையின்றி நடக்க ),

15.மந்த புத்தியுடைய குழந்தைகள் நன்கு படிக்க எந்திரம்,

16.பயந்த சுபாவம் நீங்கி தைரியம் பெற எந்திரம்,

17.தீராத மருத்துவர்களால் கைவிடப்பட்ட நோய்கள் நீங்க சிவ எந்திரம்,

18.கெட்ட தசை, புத்தியின் கேடு பலன்கள் தடுக்க எந்திரம்,

19.கிரக மூலாதார எந்திரம்,

20.கர்ப்பம் தரிக்க எந்திரம்,

21.போட்டி தேர்வுகளில் வெற்றி பெற எந்திரம்,

22.பிரம்ம வாஸ்து எந்திரம்,

23.ஜோதிடம்,குறி சொல்பவர்களுக்கு வாக்கு பலிதமாக எந்திரம் ,

24.திசை கட்டு எந்திரம்,

25.பகைவர்கள் தேவதைகள் கட்டு அறுக்க எந்திரம்,

26.அஷ்ட திக்கு பந்தன எந்திரம்,

27.சத்ரு வசிய எந்திரம்,

28.வசிய சந்தனம்,

29.கடன் தொல்லை விலகிட அன்னபூரணி எந்திரம்,

30.மேலதிகரிகள், எதிரிகள் நமக்கு அடிமையாக எந்திரம்,

31.தேவதைகளை கட்ட எந்திரம்,

32.சல்லியம் பிரிவு முறை எந்திரம்,

33.காதலில் வெற்றியடைய யந்திரம்,

34.கணவன் - மனைவி ஒற்றுமையுடன் வாழ எந்திரம்,

35.வாஸ்து தோஷம் விலக எந்திரம்,

36.காணமல் போன பொருள் கிடைக்க எந்திரம்,

37.தீராத நோய்கள் தீர எந்திரம்,

38.அரசியலில் மக்கள் செல்வாக்கு பெற எந்திரம்,

39.பெண் ஆசை ஒழிய எந்திரம்,

40.பேராசை விலக எந்திரம்,

41.போதை குடி பீடி சிகரெட் விலக்கி நல்லவர் ஆக எந்திரம்,

42.கற்பு அழியாது இருக்க எந்திரம்,

43.இல்வாழ்வு, தாம்பத்ய சுகம் நீக்க எந்திரம்  ,

44.பெண்கள் வலையில் அகப்படாமல் இருக்க எந்திரம் ,

45.வழக்கு வெற்றி பெற எந்திரம்,

46.பெண்களை தாயாக நினைக்க எந்திரம்,

47.உடல் வசீகரம் உண்டாக எந்திரம்,

48.கல்வியில் சிறக்க எந்திரம்,

49.மன வருத்தம் தீர எந்திரம்,

50.தன்னை அறிந்துகொள்ள எந்திரம்,

51.அவாவருக்க ( சந்தேகங்களை நீக்க ) எந்திரம்,

52.பஞ்ச பூதங்களை அறிய எந்திரம்,

53.பாச வலையில் அகப்படாது இருக்க எந்திரம்,

54.விதியை வெல்ல எந்திரம்,

55.புகழ் பெற எந்திரம்,

56.உலக நடை அறிய எந்திரம்,

57.எதிரிகள் ஒழிய எந்திரம்,

58.இழந்ததை திரும்ப பெற எந்திரம்,

59.விநாயகர் வசிய எந்திரம்,

60.குல தெய்வ வசிய எந்திரம்,

61.அகத்தியர் வசிய எந்திரம்,

62.உபாசனை தெய்வ வசிய எந்திரம்,

63.காளி வசிய எந்திரம்,

64.யட்சணி குடுவை,

65.கலசம் தயார் செய்ய,

66.பானகம் செய்ய,

67.கர்ண யட்சணி வசியம்,

68.பத்மாவதி யட்சணி வசியம்,

69.அனைத்து யட்சணி, தெய்வங்கள், தேவதைகளை வசியம் செய்ய ஒரே தாந்த்ரீக முறைகள்.

             மேற்படி எந்திரங்கள் தேவைப்படுவோர் எங்கள் சர்வ சக்தி விருட்ச பீடத்தினை தொடர்பு கொள்ளவும். மேலும் உங்களின் வாழ்வு வளம் பெற உங்களின் துன்பங்கள் தீர அனைத்து விதமான பிரச்சனைகள் தீர உங்களுக்கான எந்திர மந்திர முறைகளை பற்றி அறிந்துகொள்ள ஸ்ரீ லக்ஷ்மி தாச சுவாமிகளை அலைப் பேசியில் தொடர்பு கொள்ளவும். அலைப் பேசி எண் : 85260 74891, 99440 99980.

வெள்ளி, 22 ஆகஸ்ட், 2014

அஷ்ட கர்மங்களுக்கான மந்திரங்கள்

                                      அஷ்ட கர்மங்களுக்கான மந்திரங்கள்


1. வசியம் : 
                       ஓம் ஸ்ரீம் ஐம் க்லீம் சௌம் ஹ்ரீம் ஓம் யங் ய ந ம சி வ சர்வ லோக வசி வசி ஸ்வாஹா !

2.மோகனம் :
                            ஓம் க்லீம் சௌம் ஹ்ரீம் ஸ்ரீம் ஐம் ஓம் சங் ம சி வ ய ந மோகனாய ஸ்வாஹா !

3. உச்சாடனம் :
                                 ஓம் ரங் ஹ்ரீம் ஸ்ரீம் ஐம் க்லீம் சௌம் க்லீம் ஐம் வ ய ந ம சி ஓம் ஸ்வாஹா !

4. ஸ்தம்பனம் :
                                 ஓம் ஐம் க்லீம் சௌம் ஹ்ரீம் ஸ்ரீம் ந ம சி வ ய ஓம் ஸ்வாஹா !

5. ஆக்ருஷ்ணம் :
                                     ஓம் ஐம் சௌம் ஸ்ரீம் க்லீம் ஹ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம் சௌம் ஐம் ந சி ய ம வ ஓம் ஆக்ருஷ்ணாயா நமஹா ஓம் ஸ்வாஹா !

6. பேதனம் :
                          ஓம் ஐம் ஸ்ரீம் ஹ்ரீம் சௌம் க்லீம் க்லீம் சௌம் ஹ்ரீம் ஸ்ரீம் ஐம் ந ய வ சி ம ஓம் ஸ்வாஹா !

7. வித்வேஷனம் :
                                       ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் சௌம் ஐம் க்லீம் க்லீம் ஐம் சௌம் ஹ்ரீம் ஸ்ரீம் ஓம் ய வ சி ந ம ஓம் ஸ்வாஹா !

8. மாரணம் :
                           ஓம் சௌம் ஹ்ரீம் ஸ்ரீம் ஐம் க்லீம் க்லீம் ஐம் ஸ்ரீம் ஹ்ரீம் சௌம் ஓம் சி வ ய ந ம ஹா ஓம் ஸ்வாஹா !

பதினெண் சித்தர்கள்

                                                         பதினெண் சித்தர்கள்


சித்தரின் பெயர்பிறந்த மாதம்

நட்சத்திரம்
சமாதியடைந்த இடம்


பதஞ்சலி
பங்குனி
மூலம்
இராமேசுவரம்.

கமலமுனி

வைகாசி

பூசம்

திருவாரூர்.

திருமூலர்

புரட்டாதி

அவிட்டம்

சிதம்பரம்.

குதம்பையார்

ஆடி

விசாகம்

மாயவரம்.

கோரக்கர்

கார்த்திகை

ஆயில்யம்

பேரூர்.

தன்வந்திரி

ஐப்பசி

புனர்பூசம்


வைத்தீச்வரன் கோவில்.

சுந்தரானந்தர்

ஆவணி

ரேவதி

மதுரை.

கொங்கணர்

சித்திரை

உத்திராடம்

திருப்பதி.

சட்டமுனி

ஆவணி

மிருகசீரிடம்

திருவரங்கம்.

வான்மீகர்

புரட்டாதி

அனுசம்

எட்டுக்குடி.

ராமதேவர்

மாசி

பூரம்

அழகர்மலை.

இடைக்காடர்

புரட்டாதி

திருவாதிரை

திருவண்ணாமலை.

மச்சமுனி

ஆடி

ரோகிணி

திருப்பரங்குன்றம்.

கருவூரார்

சித்திரை

அஸ்தம்

கருவூர், தஞ்சை.

போகர்

வைகாசி

பரணி

பழனி.

பாம்பாட்டி

கார்த்திகை

மிருகசீரிடம்

சங்கரன்கோவில்.

சிவவாக்கியர்

தை 

மகம் 

கும்பகோணம்.

மகம் நட்சத்திரம் - விருட்சம் - பரிகாரம்

                                 மகம் நட்சத்திரம் - விருட்சம் - பரிகாரம் 

            மகம்  நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஜகத்தினை ஆழ்வார்கள் என்று ஜோதிட சாஸ்திரம் உரைக்கிறது. இதற்க்கு உதாரணம் தமிழகத்தை 3 வது முறையாக ஆட்சி செய்யும் முதல்வர் மாண்புமிகு அம்மா ஜெ. ஜெயலலிதா அவர்களே உதாரணம். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வித்யா உபாசகர்களாக இருப்பார்கள். பரம்பரை பழக்கங்களில்  நம்பிக்கை கொண்டவர், அம்பிகையை வணங்கி துதிப்பார்கள், உறுதியான உடலமைப்பினை பெற்றவர்கள், உறவினர்களுக்கும் சுற்றதினருக்கும் உதவும் குணம் படைத்தவர்கள், சண்டப்பிரியர், நுண்கலைகளில் ஆர்வமும் தேர்ச்சியும் பெற்றவர்கள், சிறந்த நிர்வாக திறமை கொண்டவர்கள், ஆரோக்கியமான உணவுகளை உண்பார்கள், எப்போதும் உற்சாகமுடன் செயல்படுவார்கள், சந்தர்ப்பத்திற்கு தகுந்த படி வளைந்து கொடுக்கும் இயல்பும் உண்டு, பேச்சினால் பிறரை கவரும் ஆற்றல் பெற்றவர்கள், முன் கோபமும் இருக்கும், செல்வாக்குடனும் வசதியுடனும் வாழ்வார்கள், மன நிம்மதி சற்று குறைவாகவே காணப்படும், சுயநல எண்ணமும் இவர்களிடம் இருக்கும், அதி தேவதையும், அதி தெய்வமும் :மகம்  நட்சத்திர அன்பர்களின் அதி தெய்வம் திருவலங்காட்டில் அருள்பாலிக்கும் வட ஆரண்யேசுவரர் ஆகும். மகம்  நட்சத்திர அதி தேவதை பித்ருக்கள், மூதாதையர்கள் நம்மை விட்டு பிரிந்து மேலுலகம் சென்ற பின் தான் மீண்டும் பிறந்து தான் வாழ்ந்த குடும்பத்தை மீண்டும் சேரும் காலம் வரை மகம் நட்சத்திரத்தின் அருகில் காத்திருப்பதாக சாஸ்திரங்கள் சொல்கின்றன, நீத்தார் கடன் என்னும் பித்ரு பூஜைகளை நாம் முறையாக செய்யும்போது அதில் மிகவும் திருப்தி அடைந்து நம் நல்வாழ்வுக்கு ஆசி வழங்குபவர்களும் பித்ருக்கள் தான். 
மகம் நட்சத்திர மந்திரம் 

பிதர : பிண்டஹஸ்தாஸ் ச க்ருஸா : பவித்ரிண :  !
குசலம் தத்யு : அஸ்மாகம் மகா நஷத்திர தேவதா : !!

மகம் நட்சத்திர காயத்திரி 

மஹா அனகாய  வித்மஹே பித்ரியா தேவாய தீமஹி !
தந்நோ மக : ப்ரசோதயாத் !!


மகம் நட்சத்திர பரிகார விருட்சம் 

மகம் நட்சத்திர அன்பர்களின் பரிகார விருட்சம் ஆல மரம் ஆகும். இதன் அடியிலேயே கிருஷ்ண பரமாத்மா ஒய்வு எடுப்பதாகவும், தக்ஷிணாமூர்த்தி கடவுள் தவம் புரிவதாயும் சாஸ்திரங்கள் உரைக்கின்றன.  மகம்  நட்சத்திர அன்பர்கள் தான் பிறந்த மகம்  நட்சத்திரம் வரும் நாளில் ஆல  மரம் தல விருட்சமாக உள்ள ஆலயங்கள் சென்று ஆல  மரத்துக்கு நீர் உற்றுவதும், ஆல  மரத்தடியில் தியானம் செய்வதும், விருட்ச பரிகாரங்கள் செய்துகொள்வதும் சிறந்த பரிகாரங்கள் ஆகும். மகம்  நட்சத்திர அன்பர்கள் மகம்  நட்சத்திர  காயத்திரி,  மகம்  நட்சத்திர  மந்திரங்களை ஆல  மரத்தின் அருகில் அமர்ந்து ஜெபம் செய்வது வாழ்வில் தோன்றும் துன்பங்களை நீக்கி இன்பமான வாழ்வும், செய்யும் செயல்களில் எல்லாம் வெற்றியும், உடலை வாட்டும் நோய்கள் தீர்ந்து நீண்ட ஆயுளும், வற்றாத செல்வமும், மங்காத புகழும் பெற்று நீடுடி வாழலாம்.


            நமது சர்வ சக்தி விருட்ச பீடத்தில் 27 நட்சத்திரங்களுக்கு உண்டான பரிகார விருட்சங்களும் பிரதிஷ்டை செய்து தினசரி பரிகார பூஜைகள் நடை பெற்று வருகின்றன. இவை மட்டுமின்றி மகா விருட்சங்களான ருத்ராட்சம், மஹா வில்வம், சரகொன்றை மற்றும் அதி முக்யமான பரிகார விருட்சங்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளது. இந்த விருட்சங்களுக்கு நடுவே பஞ்சம் மற்றும் பஞ்சமஹா பாவங்கள் சர்வ தோஷங்களை நீக்கும் பஞ்ச லிங்கங்களும் + பாதாள லிங்கமும் பிரதிஷ்டை செய்ய பணிகள் நடைபெற்று வருகிறது. எனவே சர்வ சக்தி விருட்ச பீடம் மிக உயர்ந்த பலன்களை தரும் நட்சத்திர பரிகார ஸ்தலம் ஆகும். உங்கள் வாழ்வு வளம் பெற இங்கு வந்து பரிகாரங்களை செய்து கொள்வது மிக்க பலன்தரும், உங்கள் வாழ்வு மலர உங்கள் துன்பங்களை களைய பஞ்ச லிங்க + பாதாள லிங்க பிரதிஷ்டை திருப்பணியில் உங்களையும் இணைத்துக்கொள்ளுங்கள், நன்கொடைகள் தந்து உதவுங்கள், திருப்பணிக்கு நன்கொடை அளிக்கும் அன்பர்களின் வாழ்வு சிறக்க அவர்கள் பிறந்த நட்சதிரதன்று (ஆயுள் முழுதும்) தொடர்ந்து பரிகார பூஜைகள் அவர்களுக்காக நடத்தப்படும்.
முகவரி :                        
                                      ஸ்ரீ லக்ஷ்மி தாச சுவாமிகள் ,
                                       சர்வ சக்தி விருட்ச பீடம்,
                                       ஸ்ரீ சர்வ சக்தி சேவா டிரஸ்ட் ,
                                       26/6, கிச்சகத்தியூர்,
                                       இலுப்பாபாளையம் (போஸ்ட்),
                                       சிறுமுகை - 641302
                                       தமிழ்நாடு, இந்தியா.
                                       செல் : 99440 99980, 85260 74891.

சாபங்கள் பலிக்குமா ?

சாபங்கள் பலிக்குமா ?                                                  

                            இந்த கேள்விக்கு பதில் பலருக்கும் புரியாத புதிராகவே உள்ளது. எல்லோரும் நினைத்த நேரத்தில் கண்ட கண்ட காரணங்களுக்காக நியாயமே இல்லாமல் கொடுக்கும் சாபங்கள் எல்லாம் பலிக்காது, நியாயமான காரணங்களுக்காக மனம் நொந்து சபித்தால் மட்டுமே சாபங்கள் பலிக்கும். இப்படி மனிதனுக்கு வாழ்வில் வரும் சாபங்கள் மற்ற மனிதர்கள் கொடுக்கும் சாபம் மட்டுமல்ல, இவையன்றி பல வகைகளிலும் சாபங்கள் உண்டாகின்றன, அப்படிப்பட்ட சாபங்கள் பலவகைப்படும். அவை பெண் சாபம், பிரேத சாபம், பித்ருசாபம், சர்ப்பசாபம், கோசாபம், பூசாபம் (பூமி சாபம்), கங்கா சாபம், விருட்ச சாபம், தேவ சாபம், முனி சாபம், பிரம்ம சாபம் மற்றும் குல தெய்வ சாபம்.

1.பெண் சாபம் : 

                              பெண்களை ஏமாற்றுதல், சகோதரிகளை, தாயை ஆதரிக்காமல் கைவிடுவது, மனைவியை கைவிடுவது ஏமாற்றுவது மனம் நோகும்படி செய்வது இந்த காரணங்களால் பெண் சாபம் உண்டாகிறது. இதன் விளைவாக வம்சம் நாசமாகும்.
                              
2.பிரேத சாபம் :
                               இறந்த மனிதனின் உடலை வைத்துக்கொண்டு அவரை இழிவாக பேசுவது, பிணத்தை தாண்டுவது, இறுதி காரியங்களை செய்யவிடாமல் தடுப்பது, இறந்தவரின் உடலை உறவினர்கள் பார்க்கவிடாமல் தடுப்பது, சாவு நடந்த வீட்டில் இருந்து 98 அடி வரை தீட்டு உண்டு அந்த எல்லைக்குள் உள்ள வீடுகளில் உள்ளவர்கள் உடலை அடக்கம் செய்யும் முன்பு உணவு உண்பது, தாம்பத்ய உறவு வைத்துக்கொள்வது போன்ற காரணங்களால் பிரேத சாபம் உண்டாகிறது. இதன் விளைவாக வியாதிகள், அவமானங்கள், கடன்கள், அற்ப ஆயுள், ஆயுள் குறைவு உண்டாகிறது.

3.பிரம்ம சாபம் :
                                  வித்தை கற்று தந்த குருவை மறப்பது, நிந்திப்பது, தவறாக பேசுவது, வித்தையை தவறாக பயன்படுத்துவது, கற்ற வித்தையை பிறருக்கு சொல்லிக்கொடுக்காமல் மறைப்பது போன்ற காரணங்களால் பிரம்ம சாபம் உண்டாகிறது. இதன் விளைவாக வித்யா நட்டம் என்னும் கல்வியில் குறைபாடு உண்டாகிறது.

4. சர்ப்ப சாபம் :
                                 பாம்புகளை தேவையின்றி கொல்வது, அவற்றின் இருப்பிடங்களை தேவையின்றி அழிப்பது போன்ற காரணங்களால் சர்ப்ப சாபம் உண்டாகிறது. இதன் விளைவாக திருமண தடை, செவ்வாய் தோஷம், களத்திர தோஷம், நாக தோஷம், கால சர்ப்ப தோஷம் முதலியன உண்டாகிறது.

5. பித்ரு சாபம் :
                                  தாய் - தந்தை, தாத்தா - பாட்டி ஆகியோர்களுக்கு செய்ய வேண்டிய பணிவிடைகளை செய்யாமல் இறுதி காலத்தில் அவர்களை தவிக்கவிடுவது, உதாசீனப்படுத்துவது, ஒதுக்கிவைப்பது, அவர்கள் இறந்த பின்பு செய்ய வேண்டிய திதி பரிகாரங்களை செய்யாமல் இருப்பது போன்ற காரணங்களால் பித்ரு சாபம் உண்டாகிறது. இதன் விளைவாக ஆண்வாரிசுகள் இல்லாமல் போகும், பலரிஷ்ட்ட தோஷத்தால் குழந்தைகள் இறக்கும்.

6. கோ சாபம் :
                               பசுவை வதைப்பது, பால் வற்றிய பசுவை இறைசிக்காக வெட்ட கொடுப்பது, கன்றையும் - பசுவையும் பிரிப்பது, தாகத்தால் பசு தவிக்கும் போது தண்ணீர் கொடுக்க மறுப்பது, பசுவுக்கு போதிய உணவளிக்காதது போன்ற காரணங்களால் கோ சாபம் உண்டாகிறது. இதன் விளைவாக வாழ்வில் வளர்சிகள் இல்லாமல் தொட்டதெல்லாம் தோல்வியில் முடியும்.

7. பூ (பூமி) சாபம் :
                                     ஆத்திரத்தால் பூமியை சதா காலால் உதைப்பது, பூமியை பாழ்படுத்துவது, பூமியை சீர் கேடாக்கும் பொருட்களை பூமியில் புதைப்பது, தேவையற்ற பள்ளங்களை உண்டாக்குவது, பிறரின் பூமியை அபகரிப்பது போன்ற காரணங்களால் பூ ( பூமி ) சாபம் உண்டாகிறது. இதன் விளைவாக வாழ்வில் நரக வேதனை அடைய நேரிடும்.

8. கங்கா சாபம் :
                                    பலர் அருந்தக்கூடிய நீரை பாழாக்குவது, நீரை தேவைக்கு அதிகம் வீணாக்குவது, ஓடும் நதியை அசுத்தம் செய்வது போன்ற காரணங்களால் கங்கா சாபம் உண்டாகிறது. இதன் விளைவாக உடலில் நீர் சம்பந்தமான நோய்கள் உண்டாகி வாட்டும், நம் தேவைக்கு தண்ணீர் கிடைக்காமல் போகும்.

9. விருட்ச சாபம் :
                                      பசும் மரத்தை வெட்டுவது, கனி கொடுக்கும் மரத்தை பட்டுப் போக செய்வது, மரங்களை எரிப்பது, மரங்கள் சூழ்ந்த இடங்களை கட்டிடங்கள் கட்ட அழிப்பது, வனங்களை அழிப்பது போன்ற காரணங்களால் விருட்ச  சாபம் உண்டாகிறது. இதன் விளைவாக வாழ்வில் தீரா கடன்கள், நோய்கள், வாகன விபத்துக்கள் உண்டாகி வாட்டும்.

10. தேவ சாபம் :
                                  முன்னோர்கள் பூஜித்து வந்த தெய்வங்களின் பூஜையை செய்யாமல் நிறுத்துவது, தெய்வங்களை இகழ்ந்து பேசுவது, தெய்வ காரியங்களுக்கு உதவாமல் ஏளனம் செய்வது போன்ற காரணங்களால் தேவ சாபம் உண்டாகிறது. 

ரிஷி சாபம் :
.                            உண்மையான ஆசார்ய புருஷர்களை, பக்த்தர்களை, ஆன்மீக வாதிகளை மதிக்காமல் அவமதிப்பது போன்ற காரணங்களால் ரிஷி சாபம் உண்டாகிறது.

முனி சாபம் :
                            காவல் மற்றும் எல்லை தெய்வங்களுக்கு வழங்க வேண்டிய மரியாதைகளையும், பூஜைகளையும் செய்யாமல் உதாசீனப்படுத்துவது ஆகிய காரணங்களால் முனி சாபம் உண்டாகிறது.

குல தெய்வ சாபம் :
                                           குல தெய்வங்களுக்கு உண்டான பூஜைகளையும் மரியாதைகளையும் செய்யாமல் அவமதிப்பதால் குல தெய்வ சாபம் உண்டாகும்.

                      மேலே குறிப்பிட்ட தேவ சாபம், ரிஷி சாபம், முனி சாபம், குல தெய்வ சாபம் முதலியவற்றால் நமது வாழ்வில் உறவினர் பிரிவு, வம்ச அழிவு, செய்வினை, ஏவல், பில்லி, சூன்ய பாதிப்புகள் ஏற்பட்டு நமது குடும்பம் சீர்கெட்டு போகும்.


                             இவ்வாறு நமக்கு வாழ்வில் பல வழிகளில் சாபங்கள் தோன்றி நம் வாழ்வினை பாதிக்கும் நிலைகள் உண்டு. இத்தகைய பாதிப்புகளால் அவதிப்பட்டு வருபவர்கள், என்ன காரணத்தினால் நம் வாழ்வில் துன்பங்கள் வருகிறது என்றே தெரியாமல் வாழ்வில் கஷ்டமும் வேதனையும் அடைந்து வருபவர்கள் நமது சர்வ சக்தி விருட்ச பீடத்தினை அணுகி ஸ்ரீ லக்ஷ்மி தாச சுவாமிகளை சந்தித்து உரிய பரிகார முறைகளை தெரிந்துகொண்டு அதனை முறைப்படி செய்து வாழ்வில் வழம் பெற்று வாழ வாழ்த்துகிறோம். நேரில் வர இயலாதவர்கள் தொலைப்பேசி, இ மெயில் வாயிலாகவும் தொடர்புகொண்டு தகவல்களை பெறலாம்.

முகவரி :                                     

                                       ஸ்ரீ லக்ஷ்மி தாச சுவாமிகள் ,
                                       சர்வ சக்தி விருட்ச பீடம்,
                                       ஸ்ரீ சர்வ சக்தி சேவா டிரஸ்ட் ,
                                       26/6, கிச்சகத்தியூர்,
                                       இலுப்பாபாளையம் (போஸ்ட்),
                                       சிறுமுகை - 641302
                                       தமிழ்நாடு, இந்தியா.
                                       செல் : 99440 99980, 85260 74891.

ரேவதி நட்சத்திரம் விருட்சம் பரிகாரம்

     ரேவதி நட்சத்திரம் - விருட்சம் - பரிகாரம்                    ரேவதி நட்சத்திரத்தில்  பிறந்தவர்கள் பணத்திற்கு தட்டுப்பாடற்ற வெற்றியையும்...