வியாழன், 21 ஆகஸ்ட், 2014

ஆயில்யம் நட்சத்திரம் - விருட்சம் - பரிகாரம்

                         ஆயில்யம் நட்சத்திரம் - விருட்சம் - பரிகாரம் 

            ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தெய்வ பக்தி கொண்டவர்கள், வசீகரமான கண்களை கொண்டவர்கள், பகைவரையும் நண்பனாக பாவிக்கும் பண்பு உடையவர்கள், சுகபோகங்களை அன்பவிப்பதில் நட்டம் உடையவர்கள், தர்ம சிந்தனையும் நேர்மையான உள்ளமும் கொண்டவர்கள், சமார்த்தியமான பேச்சு திறனும் இருக்கும், பிரயாணங்களில் ஆர்வம் காட்டுவார்கள், ஆயில்யம் என்ற சொல்லுக்கு பற்றி கொள்ளுதல் அல்லது அணைத்து கொள்ளுதல் என்று பொருள் ஆதலால் குடும்பத்தின் மீது பற்றுதல் உடையவர்கள், விசுவாசம் உள்ளவர்கள், தைரியம் மிக்கவர்கள், தாய் - தந்தை பெரியோர்களிடம் அதிக பாசம் காட்டுவார்கள், தீய காரியங்களை செய்ய அஞ்சுவார்கள். வேலையில் திறமை சாலிகள், பல வழிகளில் பொருள் ஈட்டுவார்கள்.
அதி தேவதையும், அதி தெய்வமும் :

ஆயில்ய  நட்சத்திர அன்பர்களின் அதி தெய்வம் புன்னை வன நாதர் ஆகும். ஆயில்ய  நட்சத்திர அதி தேவதை ஆதிசேஷன், பரந்தாமனுக்கு பாற்கடலில் படுக்கையாகவும், பரம பதத்தில் ஆசனமாகவும், பரமன் நடக்கையில் குடையாகவும் சேவை செய்யும் பாக்கியம் பெற்றவர் ஆதிசேஷன், சிவந்த மேனியுடன் இரண்டு கத்திகளை ஏந்திய கோலத்தில் சர்ப்ப ராஜனை தரிசனம் காணலாம். 


சர்ப்ப காயத்திரி மந்திரம் 

                                         ஓம் ஸர்ப்பராஜாய வித்மஹே 
                                                சுக்லபாதாய தீமஹி !
                                          தந்நோ அனந்த ப்ரசோதயாத் !!

ஆயில்ய நட்சத்திர மந்திரம் 

ஸர்ப்போ ரக்தஸ் த்ரிநேதராஸ் த்ரிநேத்ரஸ் ச பலஸோபி கரத்வய !
ஆஸ்லேஷா தேவதா பீதாம்பர த்ருத் வரதோ அஸ்துமே !!

ஆயில்ய நட்சத்திர காயத்திரி 

ஸர்ப்பராஜாய வித்மஹே மஹா ரோசனாய தீமஹி !
தந்நோ ஆச்லேஷ ப்ரசோதயாத் !!


ஆயில்ய நட்சத்திர பரிகார விருட்சம் 

ஆயில்ய  நட்சத்திர அன்பர்களின் பரிகார விருட்சம் புன்னாகம் என்னும் புன்னை மரம் ஆகும். இதனை கிருஷ்ண மரம், காமினி மரம் என்றும் அழைகிறார்கள். ஆயில்ய  நட்சத்திர அன்பர்கள் தான் பிறந்த ஆயில்ய  நட்சத்திரம் வரும் நாளில் புன்னை  மரம் தல விருட்சமாக உள்ள ஆலயங்கள் சென்று புன்னை  மரத்துக்கு நீர் உற்றுவதும், புன்னை  மரத்தடியில் தியானம் செய்வதும், விருட்ச பரிகாரங்கள் செய்துகொள்வதும் சிறந்த பரிகாரங்கள் ஆகும். ஆயில்ய  நட்சத்திர அன்பர்கள் ஆயில்ய நட்சத்திர  காயத்திரி, ஸர்ப்ப   காயத்திரி  மந்திரம், ஆயில்ய  நட்சத்திர  மந்திரங்களை புன்னை  மரத்தின் அருகில் அமர்ந்து ஜெபம் செய்வது வாழ்வில் தோன்றும் துன்பங்களை நீக்கி இன்பமான வாழ்வும், செய்யும் செயல்களில் எல்லாம் வெற்றியும், உடலை வாட்டும் நோய்கள் தீர்ந்து நீண்ட ஆயுளும், வற்றாத செல்வமும், மங்காத புகழும் பெற்று நீடுடி வாழலாம்.


            நமது சர்வ சக்தி விருட்ச பீடத்தில் 27 நட்சத்திரங்களுக்கு உண்டான பரிகார விருட்சங்களும் பிரதிஷ்டை செய்து தினசரி பரிகார பூஜைகள் நடை பெற்று வருகின்றன. இவை மட்டுமின்றி மகா விருட்சங்களான ருத்ராட்சம், மஹா வில்வம், சரகொன்றை மற்றும் அதி முக்யமான பரிகார விருட்சங்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளது. இந்த விருட்சங்களுக்கு நடுவே பஞ்சம் மற்றும் பஞ்சமஹா பாவங்கள் சர்வ தோஷங்களை நீக்கும் பஞ்ச லிங்கங்களும் + பாதாள லிங்கமும் பிரதிஷ்டை செய்ய பணிகள் நடைபெற்று வருகிறது. எனவே சர்வ சக்தி விருட்ச பீடம் மிக உயர்ந்த பலன்களை தரும் நட்சத்திர பரிகார ஸ்தலம் ஆகும். உங்கள் வாழ்வு வளம் பெற இங்கு வந்து பரிகாரங்களை செய்து கொள்வது மிக்க பலன்தரும், உங்கள் வாழ்வு மலர உங்கள் துன்பங்களை களைய பஞ்ச லிங்க + பாதாள லிங்க பிரதிஷ்டை திருப்பணியில் உங்களையும் இணைத்துக்கொள்ளுங்கள், நன்கொடைகள் தந்து உதவுங்கள், திருப்பணிக்கு நன்கொடை அளிக்கும் அன்பர்களின் வாழ்வு சிறக்க அவர்கள் பிறந்த நட்சதிரதன்று (ஆயுள் முழுதும்) தொடர்ந்து பரிகார பூஜைகள் அவர்களுக்காக நடத்தப்படும்.

 


முகவரி :
                                      ஸ்ரீ லக்ஷ்மி தாச சுவாமிகள் ,
                                       சர்வ சக்தி விருட்ச பீடம்,
                                       ஸ்ரீ சர்வ சக்தி சேவா டிரஸ்ட் ,
                                       26/6, கிச்சகத்தியூர்,
                                       இலுப்பாபாளையம் (போஸ்ட்),
                                       சிறுமுகை - 641302
                                       தமிழ்நாடு, இந்தியா.
                                       செல் : 99440 99980, 85260 74891.

சுவாதி நட்சத்திரம் - விருட்சம் - பரிகாரம்

                                 சுவாதி  நட்சத்திரம் - விருட்சம் - பரிகாரம்               சுவாதி நட்சத்திரத்தில்  தெளிந்த அறிவுள்ளவர்க...