வெள்ளி, 22 ஆகஸ்ட், 2014

மகம் நட்சத்திரம் - விருட்சம் - பரிகாரம்

                                 மகம் நட்சத்திரம் - விருட்சம் - பரிகாரம் 

            மகம்  நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஜகத்தினை ஆழ்வார்கள் என்று ஜோதிட சாஸ்திரம் உரைக்கிறது. இதற்க்கு உதாரணம் தமிழகத்தை 3 வது முறையாக ஆட்சி செய்யும் முதல்வர் மாண்புமிகு அம்மா ஜெ. ஜெயலலிதா அவர்களே உதாரணம். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வித்யா உபாசகர்களாக இருப்பார்கள். பரம்பரை பழக்கங்களில்  நம்பிக்கை கொண்டவர், அம்பிகையை வணங்கி துதிப்பார்கள், உறுதியான உடலமைப்பினை பெற்றவர்கள், உறவினர்களுக்கும் சுற்றதினருக்கும் உதவும் குணம் படைத்தவர்கள், சண்டப்பிரியர், நுண்கலைகளில் ஆர்வமும் தேர்ச்சியும் பெற்றவர்கள், சிறந்த நிர்வாக திறமை கொண்டவர்கள், ஆரோக்கியமான உணவுகளை உண்பார்கள், எப்போதும் உற்சாகமுடன் செயல்படுவார்கள், சந்தர்ப்பத்திற்கு தகுந்த படி வளைந்து கொடுக்கும் இயல்பும் உண்டு, பேச்சினால் பிறரை கவரும் ஆற்றல் பெற்றவர்கள், முன் கோபமும் இருக்கும், செல்வாக்குடனும் வசதியுடனும் வாழ்வார்கள், மன நிம்மதி சற்று குறைவாகவே காணப்படும், சுயநல எண்ணமும் இவர்களிடம் இருக்கும், அதி தேவதையும், அதி தெய்வமும் :மகம்  நட்சத்திர அன்பர்களின் அதி தெய்வம் திருவலங்காட்டில் அருள்பாலிக்கும் வட ஆரண்யேசுவரர் ஆகும். மகம்  நட்சத்திர அதி தேவதை பித்ருக்கள், மூதாதையர்கள் நம்மை விட்டு பிரிந்து மேலுலகம் சென்ற பின் தான் மீண்டும் பிறந்து தான் வாழ்ந்த குடும்பத்தை மீண்டும் சேரும் காலம் வரை மகம் நட்சத்திரத்தின் அருகில் காத்திருப்பதாக சாஸ்திரங்கள் சொல்கின்றன, நீத்தார் கடன் என்னும் பித்ரு பூஜைகளை நாம் முறையாக செய்யும்போது அதில் மிகவும் திருப்தி அடைந்து நம் நல்வாழ்வுக்கு ஆசி வழங்குபவர்களும் பித்ருக்கள் தான். 
மகம் நட்சத்திர மந்திரம் 

பிதர : பிண்டஹஸ்தாஸ் ச க்ருஸா : பவித்ரிண :  !
குசலம் தத்யு : அஸ்மாகம் மகா நஷத்திர தேவதா : !!

மகம் நட்சத்திர காயத்திரி 

மஹா அனகாய  வித்மஹே பித்ரியா தேவாய தீமஹி !
தந்நோ மக : ப்ரசோதயாத் !!


மகம் நட்சத்திர பரிகார விருட்சம் 

மகம் நட்சத்திர அன்பர்களின் பரிகார விருட்சம் ஆல மரம் ஆகும். இதன் அடியிலேயே கிருஷ்ண பரமாத்மா ஒய்வு எடுப்பதாகவும், தக்ஷிணாமூர்த்தி கடவுள் தவம் புரிவதாயும் சாஸ்திரங்கள் உரைக்கின்றன.  மகம்  நட்சத்திர அன்பர்கள் தான் பிறந்த மகம்  நட்சத்திரம் வரும் நாளில் ஆல  மரம் தல விருட்சமாக உள்ள ஆலயங்கள் சென்று ஆல  மரத்துக்கு நீர் உற்றுவதும், ஆல  மரத்தடியில் தியானம் செய்வதும், விருட்ச பரிகாரங்கள் செய்துகொள்வதும் சிறந்த பரிகாரங்கள் ஆகும். மகம்  நட்சத்திர அன்பர்கள் மகம்  நட்சத்திர  காயத்திரி,  மகம்  நட்சத்திர  மந்திரங்களை ஆல  மரத்தின் அருகில் அமர்ந்து ஜெபம் செய்வது வாழ்வில் தோன்றும் துன்பங்களை நீக்கி இன்பமான வாழ்வும், செய்யும் செயல்களில் எல்லாம் வெற்றியும், உடலை வாட்டும் நோய்கள் தீர்ந்து நீண்ட ஆயுளும், வற்றாத செல்வமும், மங்காத புகழும் பெற்று நீடுடி வாழலாம்.


            நமது சர்வ சக்தி விருட்ச பீடத்தில் 27 நட்சத்திரங்களுக்கு உண்டான பரிகார விருட்சங்களும் பிரதிஷ்டை செய்து தினசரி பரிகார பூஜைகள் நடை பெற்று வருகின்றன. இவை மட்டுமின்றி மகா விருட்சங்களான ருத்ராட்சம், மஹா வில்வம், சரகொன்றை மற்றும் அதி முக்யமான பரிகார விருட்சங்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளது. இந்த விருட்சங்களுக்கு நடுவே பஞ்சம் மற்றும் பஞ்சமஹா பாவங்கள் சர்வ தோஷங்களை நீக்கும் பஞ்ச லிங்கங்களும் + பாதாள லிங்கமும் பிரதிஷ்டை செய்ய பணிகள் நடைபெற்று வருகிறது. எனவே சர்வ சக்தி விருட்ச பீடம் மிக உயர்ந்த பலன்களை தரும் நட்சத்திர பரிகார ஸ்தலம் ஆகும். உங்கள் வாழ்வு வளம் பெற இங்கு வந்து பரிகாரங்களை செய்து கொள்வது மிக்க பலன்தரும், உங்கள் வாழ்வு மலர உங்கள் துன்பங்களை களைய பஞ்ச லிங்க + பாதாள லிங்க பிரதிஷ்டை திருப்பணியில் உங்களையும் இணைத்துக்கொள்ளுங்கள், நன்கொடைகள் தந்து உதவுங்கள், திருப்பணிக்கு நன்கொடை அளிக்கும் அன்பர்களின் வாழ்வு சிறக்க அவர்கள் பிறந்த நட்சதிரதன்று (ஆயுள் முழுதும்) தொடர்ந்து பரிகார பூஜைகள் அவர்களுக்காக நடத்தப்படும்.
முகவரி :                        
                                      ஸ்ரீ லக்ஷ்மி தாச சுவாமிகள் ,
                                       சர்வ சக்தி விருட்ச பீடம்,
                                       ஸ்ரீ சர்வ சக்தி சேவா டிரஸ்ட் ,
                                       26/6, கிச்சகத்தியூர்,
                                       இலுப்பாபாளையம் (போஸ்ட்),
                                       சிறுமுகை - 641302
                                       தமிழ்நாடு, இந்தியா.
                                       செல் : 99440 99980, 85260 74891.

சுவாதி நட்சத்திரம் - விருட்சம் - பரிகாரம்

                                 சுவாதி  நட்சத்திரம் - விருட்சம் - பரிகாரம்               சுவாதி நட்சத்திரத்தில்  தெளிந்த அறிவுள்ளவர்க...