புதன், 20 ஆகஸ்ட், 2014

அஷ்டமா சித்திகளும் மூலாதார சக்கரங்களும்

                         அஷ்டமா சித்திகளும் மூலாதார சக்கரங்களும்

 மனித உடலில் 7 வகையான  சக்கரங்கள் உள்ளன அவையாவன,  மூலாதாரம், சுவதிஷ்ட்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்ஞை, சகஸ்காரம். மனிதனுக்கு ஆறறிவு படைத்த இறைவன் மனித உடலிலும் ஆறு சக்கரங்களையே படைத்தான் - 7 வது சக்கரமான சகஸ்காரம் என்பது மனித உடலை தாண்டியே அமைந்துள்ளது, ஆறு சக்கரங்களை அடைந்தாலே மனிதன் நினைத்ததை எல்லாம் அடைய முடியும், இந்த ஆறு சக்கரங்களை அடைவதே மிகவும் கடினம், இந்த ஆறு அல்ல எட்டு சக்கரங்களை அடைவதே அஷ்டமா சித்தி இதனை சித்தர்கள் மட்டுமே எட்டியுள்ளனர். இதில் எட்டாவது சக்கரம் எனப்படுவது அண்டவெளி ஆகும்.

இந்த சக்கரங்களின் மகிமையை அறியாமல் தான் என்ன பாடுபட்டேன் என்பதை பட்டினத்தார் அழகாக எழுதி உள்ள பாடலின் வாயிலாக காண்போம்.

மூலத்து உதித்து எழுந்த முக்கோண சக்கரத்துள் 
       வாலை தன்னை போற்றாமல் மதிமறந்தேன் பூரணமே !
உந்தி கமலத்தில் உதித்து நின்ற பிரம்மாவை 
       சந்தித்து காணாமல் நட்டழிந்தேன் பூரணமே !
நாபிக் கமல நடு நெடுமால் காணாமல் 
       ஆவிகெட்டு நானும் அறிவழிந்தேன் பூரணமே !
உருத்திரன் இருதயத்தை உண்மையுடன் பாராமல் 
        கருத்து அழிந்து நானும் கலங்கினேன் பூரணமே !
விசுத்தி மகேசுரனை விழிதிறந்து பாராமல் 
        பசித்து உருகி நெஞ்சம் பதறினேன் பூரணமே !
நெற்றி விழிஉடைய நிர்மல சதாசிவத்தை 
        புத்தியுடன் பாராமல் பொறி அழிந்தேன் பூரணமே !
நாத விந்து தன்னை நயம் உடனே பாராமல் 
        போதை மயக்கிப் பொறி அழிந்தேன் பூரணமே !
உச்சி வெளியை உறுதியுடன் பாராமல் 
         அச்சமுடன் நானும் அறிவு அழிந்தேன் பூரணமே !
இடைபிங்கலை இனிய இயல்பு அறியமாட்டாமல் 
          தடை உடனே நானும் தயங்கினேன் பூரணமே !
ஊனுக்குள் நீ நின்று உலாவினதை காணாமல் 
          நான் என்று இருந்து நலம் அழிந்தேன் பூரணமே !
உடலுக்குள் நீ நின்று உலாவினதை காணாமல் 
         காடுமலை தோறும் திரிந்து காலுழந்தேன் பூரணமே !
என்னை அறியாமல் எனக்குள்ளே நீயிருக்க 
          உன்னை அறியாமல் உடல் அழிந்தேன் பூரணமே !
ஐந்து பொறியை அடக்கி உன்னை போற்றாமல் 
          நயந்து உருகி நெஞ்சம் நடுங்கினேன் பூரணமே !
வாசி தன்னைப் பார்த்து மகிழ்ந்து உனைதான் போற்றாமல் 
          காசிவரை போய் திரிந்து காலுழந்தேன் பூரணமே !
எனக்குள்ளே நீ இருக்க உனக்குள்ளே நான் இருக்க 
          மனக்கவலை தீர வரம் அருள்வாய் பூரணமே !

                    பட்டினத்தார் பாடிய இந்த பாடலில் உடலில் உள்ள சக்கரங்கள் பற்றியும், அதில் உறையும் தெய்வங்களை பற்றியும் அதை அறியாமல் தான் அனுபவித்த துன்பங்களை பற்றியும் விரிவாக சொல்லியுள்ளார். மனிதர்களாகி துன்ப கடலில் சிக்கி உழலும் நாம் இனியாவது இறைவன் நம் உள்ளே தான் இருக்கிறார் என்பதனை உணர்ந்து அவரை கண்டு உணரும் பாக்கியத்தையும், இன்ப பெரு வாழ்வு என்னும் பேற்றையும் பெற்று உயவோம்மாக...
                  இனி கடவுளை தேடி கோவில் கோவிலாக அலைவதை விட்டு விட்டு நம்முள்ளே கடவுளை தேடுவோமாக... 

                                       வாழ்க !     வாளர்க !      வணக்கம் !

                                                                                    - ஸ்ரீ லக்ஷ்மி தாச சுவாமிகள்.
          

சுவாதி நட்சத்திரம் - விருட்சம் - பரிகாரம்

                                 சுவாதி  நட்சத்திரம் - விருட்சம் - பரிகாரம்               சுவாதி நட்சத்திரத்தில்  தெளிந்த அறிவுள்ளவர்க...