சனி, 23 ஆகஸ்ட், 2014

அமானுஷ்யம் - மோகினி பிசாசை வைத்து உருவேற்றிய ஏவல்

அமானுஷ்யம் - மோகினி பிசாசை வைத்து உருவேற்றிய ஏவல்                  கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இருந்து ............. என்ற நபர் சர்வ சக்தி விருட்ச பீடம் வந்து என்னை சந்தித்தார். பார்பதற்கு வசதியான குடும்பத்தை சேர்ந்தவர் போன்ற தோற்றம் தெரிந்தது. ஆனால் அவர் முகம் மட்டும் களையிழந்து சோகம் படர்ந்து காணப்பட்டது. சிறிது நேரத்தில் அவரே தனக்கு நடந்து கொண்டிருக்கும் அமானுஷ்ய விஷயங்களை சொல்ல ஆரம்பித்தார்.
             நான் இரவில் நிம்மதியாக தூங்கி பத்து வருட காலம் ஆகிவிட்டது, எனது படுக்கை அறையில் சென்று மின்விசிறியை ஆன் செய்தால் அந்த மின்விசிறியில் ஒரு ஆணும் பெண்ணும் (அமானுஷ்ய  உருவங்கள்) நிர்வாணமாக வந்து பாட்டுப்படி என்னை கேலி செய்கிறது. மின்விசிறியை அணைத்துவிட்டு சுவற்றை பார்த்தல் அதே அமானுஷ்ய  ஆண் பெண் உருவங்கள் சுவற்றில் வந்து நிர்வாணமாக நடனமாடுகிறது, நானும் எனது மனைவியும் படுக்கையில் இருந்ததை சொல்லி கேலி செய்கிறது. பகலில் காரை ஓட்டிச் சென்றால் எதிரில் வரும் வாகனதில் இதே அமானுஷ்ய உருவங்கள் நிர்வாணமாக வந்து நடனமாடி கேலி செய்கிறது, இதனை ஒருகணம் பார்த்தல் உடனே விபத்து ஏற்பட்டு விடுகிறது. இதுவரை கடந்த பத்து வருடத்தில் சுமார் இருபது முறை விபத்து உண்டாகி அதில் தப்பிதிருகிறேன், அதேபோல் வியாபாரத்திலும் இந்த பத்து வருடத்தில் கையில் இருந்த 22 கோடி ரூபாயை இழந்து மேலும் 3 கோடி கடனுமாகி அந்த கடனுக்கு மதம் 6 இலட்சம் ரூபாய் வரை வட்டி கட்டி வருவதாகவும், இப்படி தனக்கு நடக்கும் அமானுஷ்ய விஷயங்களை பிறரிடம் சொன்னால் என்னை பைத்தியகாரன் என்று முத்திரை குத்துகிறார்கள். கட்டிய மனைவியும் பெற்ற மகளும் கூட நான் சொல்வதை நம்பவில்லை மாறாக என்னை கேலி செய்கின்றனர். இந்த தர்ம சங்கடத்தில் இருந்து என்னை காப்பாற்றி என் வியாபாரங்கள் மீண்டும் செழித்து கடன்கள் அடைந்து நிமதியாக நான் வாழ வழிகாட்ட வேண்டும் என்று கெஞ்சினார்.
             இதையெல்லாம் பொறுமையாக கேட்டுவிட்டு பூஜையில் அமர்ந்து இவருக்கு நடக்கும் அமானுஷ்ய சம்பவங்களுக்கு என்ன காரணம், அதை எப்படி நீக்குவது என்பதை என் அன்னையிடம் கேட்டேன். என் அன்னை எனக்கு தெளிவுபடுத்தினாள். பின் அவருக்கு விஷயங்களை தெளிவாக விளக்கினேன்.
             உங்கள் முதல் மனைவி என்ன செய்தார் என்றேன்? அவளுக்கும் எனக்கும் ஒத்துவரவில்லை வரவில்லை, அவளுடன் வாழ விருப்பமில்லை எனவே விவாகரத்து கொடுத்துவிட்டேன் என்றார். பின் இரண்டு வருடம் கழிந்து இன்னொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டேன், இப்போது   என் மகளுக்கு 22 வயதாகிறது. அடுத்த மாதம் மகளுக்கு திருமணம் என்றார்.
                உங்கள் முதல் மனைவி தான் நீங்கள் நிம்மதியுடன் வாழவே கூடாது என்று திறமையான ஒரு மந்திரீகரை அழைத்து மோகினிகளை வைத்து  உருவேற்றி ஏவலை செய்து வைத்துள்ளார். அந்த மோகினி உருவங்களே வந்து உங்களுக்கு  துன்பம் தருகிறது. அந்த ஏவல் தான் உங்கள் குடும்பமும், வியாபாரமும் சீர் குலைந்ததற்கு காரணம் என்று சொன்னேன்.
              இந்த ஏவலை மிகவும் கஷ்டப்பட்டுத்தான் போக்க முடியும். மிகவும் கடுமையான விஷயம் தான் கவனமாக நீக்க வேண்டும் இதில் கரணம் தப்பினால் இதை போக்கும் எனக்கு மரணம் தான் என்றேன். இருந்தாலும் உங்களை பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது நாளை வாருங்கள் உங்களுக்கான பரிகாரங்களை துவக்கி விடுகிறேன் என்றேன்.
                மறுநாள் அவரும் வந்தார் சில கடினமான பரிகார முறைகளை மேற்கொண்டு அவருக்கு செய்து வைத்த ஏவலை நீக்கி அவரை அனுப்பிவைத்தேன். இப்பொழுது அவருக்கு அந்த அமானுஷ்ய சம்பவங்கள் ஏதும் நடப்பதில்லை, மிகவும் சந்தோசமாகவும், நிம்மதியாகவும் இருக்கிறார். அவரின் வியாபாரங்களும் நன்றாக நடைபெற்று வருகிறது. அமானுஷ்ய உண்மை சம்பவங்கள் தொடரும்....

சுவாதி நட்சத்திரம் - விருட்சம் - பரிகாரம்

                                 சுவாதி  நட்சத்திரம் - விருட்சம் - பரிகாரம்               சுவாதி நட்சத்திரத்தில்  தெளிந்த அறிவுள்ளவர்க...