திங்கள், 23 பிப்ரவரி, 2015

மூல நோயிக்கு அற்புத மருந்து


                                                                   மூல நோய்

                    மனிதனுக்கு உண்டாகக் கூடிய பலவகையான நோய்களில் மூல நோய் ஒன்றாகும். சரியாக சிகிச்சை மேற்கொள்ளாமல் விடப்படும்  மூல நோய் - புற்று நோயாக மாறும் வாய்ப்புகள் அதிகம். ஆசன வாய் பகுதியில் உள்ள இரத்தக் குழாய்கள் தடிமன் ஆவது தான் மூல நோய்.

 மூல நோய் - அறிகுறிகள் :

1. ஆசன வாயில் ( மலம் வெளியேறும் பாதையில் ) அரிப்பு உண்டாகுதல்.
2. மலசிக்கல் ஏற்படுதல், மலத்துடன் இரத்தம் கலந்து வெளியேறுதல்,
3. ஆசனவாயில் தொடர்ந்து உண்டாகும் வலி, எரிச்சல், அரிப்பு.
4.ஆசன வாயின் உள்பகுதி வீங்கி, மலம் கழிக்க சிரமப்படுதல் (உள் மூலம்).
5. ஆசன வாயின் வெளிப்பகுதியில் முளை போல் சதை வீங்கி தள்ளி உட்கார, படுக்க, மலம் கழிக்க முடியாத அளவுக்கு வலி, வேதனை சிரமத்தை உண்டாக்குதல். ( இதுவே வெளி மூலம் ஆகும் ).
6. மலவாய் எரிச்சல், விந்து கெடுதல், வயிற்று இரைச்சல், வயிறு நொந்து மலம் கழிதல், பசியின்மை, புளி ஏப்பம், நீர் வேட்கை, உடல் மெலிதல், உடல் பலம் குறைதல்,
7. மூல நோயானது மன ரீதியாகவும் பாதிப்படைய செய்யும், மனம் தளரும், நம்மை எதற்கெடுத்தாலும் கோபம் கொள்ள செய்யும்.

மூல நோய் - உண்டாக காரணங்கள் :

1. தொடர்ந்து உண்டாகும் மலசிக்கல்,
2. உடல் எடை ( தொந்தி ) யால் ஏற்படும் வயிற்று அழுத்தம்,
3. பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் கரு வளர்ச்சியால் உண்டாகும் வயிற்று அழுத்தம்,
4. பரம்பரை மற்றும் அதிக உடல் உஷ்ணம்,
5. கிழங்கு வகைகள் ( கருணை கிழங்கு தவிர ), மாமிச உணவுகள், உணவில் அதிகப்படியான காரம் சேர்த்து உண்பதாலும்,
6. தொடர்ந்து உட்கார்ந்தபடி வேலை செய்பவர்களுக்கு, 
7. வேளைக்கு உணவு உட்கொள்ளாமல் ( பட்டினி ) இருப்பதால் மூலாதாரத்தில் வெப்பம் அதிகமாவதால்,


                 இன்றைய ஆங்கில மருத்துவத்தில் மூல நோயிக்கு அறுவை சிகிச்சை (ஆபரேசன் ) ஒன்று தான் தீர்வாக உள்ளது, அப்படியே அறுவை சிகிச்சை செய்து கொண்டாலும் மீண்டும் மீண்டும் மூல நோய் வந்து நம்மை தீராத துன்பத்தில் ஆழ்த்துகிறது என்பதே உண்மை, இந்த முறையில் அறுவை சிகிச்சை ஒரு முறை செய்ய ஆகும் செலவு ஏறத்தாழ ரூபாய் 15000 முதல் 20000 வரை. நிரந்தரமாக குணப்படுத்த முடியாத சிகிச்சைக்கு இப்படி செலவு செய்ய வேண்டுமா சற்றே சிந்தியுங்கள்...

                   
நமது கிராமங்கள் தோறும் விளைந்துகிடக்கும் தொட்டற்சினுங்கி மூலிகையை நாம் அனைவரும் அறிவோம். இந்த தொட்டற்சினுங்கி இலையை ஒரு கைப்பிடி அளவு காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் தொடர்ந்து  பத்து நாட்கள் சாப்பிட்டு வந்தால் மூல நோய் இருந்த இடம் தெரியாமல் பறந்தோடும் மீண்டும் வராது. 

சாப்பிடும் முறை :
                                   காலை - வெறும்வயிற்றில்,
                                   மதியம்  - உணவுக்கு பின்,
                                   இரவு - உணவுக்கு பின்.                                                                  பத்தியம் - அசைவ உணவுகள்.

ரேவதி நட்சத்திரம் விருட்சம் பரிகாரம்

     ரேவதி நட்சத்திரம் - விருட்சம் - பரிகாரம்                    ரேவதி நட்சத்திரத்தில்  பிறந்தவர்கள் பணத்திற்கு தட்டுப்பாடற்ற வெற்றியையும்...