வெள்ளி, 4 செப்டம்பர், 2015

ஜால வித்தை குளிகை

                                                   ஜால வித்தை குளிகை


"தாரணி வேரொடு தாளிப்பானைவேர்
கோரமில் லாமற் கூட்டிச்சமனாய்
பூநீரா லரைத்துக் குளிகைசெய்
குளிகை தலைகொள் குத்தேறாது
பழிபடும்போரிற் படாது வெட்டு
ஒளிவிட்டெரிந்த உயர்பாணம் மேறாது
அழிவுறாதிந்த அதிசயக் குளிகையே"
நாம் சாலைகளில் வாகனங்களில் செல்லும் பொழுது விபத்துகளிருந்தும் சில ஆபத்துக்களில் இருந்தும் ஆயுதங்களினால் காயம் படாமல் தப்பிக்கும் உபாயமாக இதை "கருவூரார் பலதிரட்டு" என்ற நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது. சித்தர்கள் கூறியுள்ள பல விஷயங்கள் , நம்மை ஆச்சர்யத்தின் விளிம்பில் தள்ளுவனவாகவும் இருக்கின்றன இதை ஜாலவித்தைகள் என்கின்றனர். தாரணி என்ற மூலிகையின் வேர், தாளிப்பானை என்ற மூலிகையின் வேர் இரண்டையும் சம அளவு எடுத்து அத்துடன் பூநீர் விட்டு அரைத்து குளிகையாகச் செய்து கொள்ள வேண்டுமாம். இந்தக் குளிகையினை அணிந்து கொண்டு நாம் வெளியில் வாகனங்களில் செல்லும் பொழுது
விபத்துகளிருந்தும் சில ஆபத்துக்களில் இருந்தும் காப்பதோடு, போரிற்குச் சென்றால்குத்துகள் வெட்டுகள் அடிகள் ஆகியவற்றின் பாதிப்புக்களில் இருந்து  நம்மை காத்துக்கொள்ள உதவிடும் என்கிறார்.

சுவாதி நட்சத்திரம் - விருட்சம் - பரிகாரம்

                                 சுவாதி  நட்சத்திரம் - விருட்சம் - பரிகாரம்               சுவாதி நட்சத்திரத்தில்  தெளிந்த அறிவுள்ளவர்க...