திங்கள், 30 நவம்பர், 2015

அஷ்ட கர்மமும் உட்பிரிவுகளும்


                            மாந்த்ரீக கலையை பொறுத்தவரை நம் தமிழக சித்தர் பெருமக்களே உலகளவில் சிறந்து விளங்கினார்கள் என்பது உண்மை. அத்தகைய சித்தர்கள் அருளி செய்த மாந்த்ரீகம் ''அஷ்ட கர்மங்கள்'' என்று அழைக்கப்படுகிறது. அஷ்ட கர்மங்களவான 1.வசியம், 2.மோகனம், 3.தம்பனம், 4.உச்சாடனம், 5.ஆகர்ஷணம், 6.வித்வேஷணம்,  7.பேதனம், 8.மாரணம் ஆகும். இந்த ஒவ்வொரு கர்மத்திலும் உட்பிரிவுகள் உண்டு. அவை

1. வசியம் :
                       ஆறு வகைப்படும், அவை 1. உலக வசியம், 2. அரசர் வசியம், 3. மாதர் வசியம், 4. மைந்தர் வசியம், 5. பகைவர் வசியம், 6. விலங்கு வசியம் ஆகும். இதன் உட்பிரிவாக ஜன வசியம், தொழில் வசியம், வியாபார வசியம், வழக்கு வசியம் முதலியன அடங்கும்.

2. மோகனம் :
                            ஐந்து வகைப்படும். அவை 1. உலக மோகனம், 2. மாதர் மோகனம், 3. மைந்தர் மோகனம், 4.பகைவர் மோகனம், 5.விலங்கு மோகனம் முதலியன அடங்கும்

3. தம்பனம் :
                          எழு வகைப்படும். அவை 1. நில தம்பனம், 2. நீர் தம்பனம், 3. தீ தம்பனம், 4. சுக்கில தம்பனம், 5. படைக்கல தம்பனம், 6. பகை தம்பனம், 7.விலங்கு தம்பனம். இதில் நில தம்பனத்தின் உட்பிரிவாக மர தம்பனம், செக்கு கரும்பாலைகளின் தம்பனம், தன தானிய தம்பனம் முதலியனவும், நீர் தம்பனத்தின் உட்பிரிவாக உப்பு படாமை, முத்து மீன்கள் படாமை, ஆறு கரைபுரளாமை, மழை பெய்யாமை, இடி மரக்கலங்களின் தம்பனம், ஆறு குளங்களில் நீர் நிற்க முதலியனவும்,  சுக்கில தம்பனத்தின் உட்பிரிவாக சுக்கில தம்பனம், கரு தம்பனம், குழவி (குழந்தை) சாகாமை, மாதர் தெருளாமை, கெங்கை எழாமை முதலியனவும், தீ தம்பனத்தின் உட்பிரிவாக மழுவேந்த, இரும்பு வேகாமை, வீடு வேகாமை முதலியனவும், படைகல தம்பனத்தின் உட்பிரிவாக வெட்டறாமை, குத்து உறையாமை, அம்பு தைக்காமை, மரம் வெட்டறாமை, கிடாய் வெட்டறாமை முதலியனவும், பகை(சத்ரு) தம்பனத்தின் உட்பிரிவாக பகை நாவடக்கம், சினம் அடங்க, கால் நடை மடங்க, பகைவர் படைக்கலம் முடங்க, கை முடக்கம், பாடல் தம்பனம், ஆடல் தம்பனம், சரக்கு விற்காமை, தச்சர் தொழில் தம்பனம், தண்ணுமை (வாத்தியங்கள்) கொட்டல் , மண்கலங்கள் வனைதல்களின் தம்பனம் முதலியனவும், விலங்கு தம்பனத்தின் உட்பிரிவாக புலி தம்பனம், கரிதம்பனம், எலிதம்பனம், கிடாய்தம்பனம், பாம்புதம்பனம், நரித்தம்பனம், நாய்த்தம்பனம், பரித்தம்பனம், ஏற்றுதம்பனம், பசுதம்பனம், பன்றிதம்பனம் முதலியனவும் அடங்கும்.

4. உச்சாடனம் :
                               எட்டு வகைப்படும். அவை 1.தெய்வ உச்சாடனம், 2. அரசர் உச்சாடனம், 3.உலக உச்சாடனம், 4.பிணி உச்சாடனம், 5.மனிதர் உச்சாடனம், 6. பகைவர் உச்சாடனம், 7. நீர் உச்சாடனம், 8. பகைவர் உச்சாடனம் முதலியன அடங்கும், இதன் தெய்வ உச்சாடனத்தின் உட்பிரிவுகளாக ஐயன் போக, பிடாரி போக, பிரமகண்டன் போக, முயலகன் போக, குமாரகண்டன் போக, பிசாசு குரளி பேய்கள் போக முதலியனவும், அரச உச்சாடனத்தின் உட்பிரிவாக அரசன் போக, அரசன் பதி போக, அரசன் செல்வம் போக, அரசன் சேனை போக, அரசன் தேர் பரி கரி கருவி போக முதலியனவும், உலக உச்சாடனத்தின் உட்பிரிவாக வழிநடை போக, கிலேசம் இடர் போக, மோகம் போக, அச்சம் போக பெருவினை போக, தளை போக முதலியனவும், வியாதி உச்சாடனத்தின் உட்பிரிவாக சூலை நோய் போக, பித்து போக, வைசூரி நோய் போக, உளைப்பு நோய் போக, கழலை போக, விப்புருதி போக, வாதம் போக, குரல்வளை நோய் போக, குன்மம் போக, பித்தம் போக, தொடர் பித்தம் போக, பித்த பாண்டு போக, உக்கிர பித்தம் போக, ஈளை போக, கபம் போக, மேகம் போக, கல்லெரிப்பு போக, உடம்பெரிப்பு போக, வெப்பு நோய் போக, நான்மாறல் சுரம் போக, குலைப்பு போக, செவிநோய் போக, முலைகுத்து போக, தொழுநோய் போக, கண்நோய் போக, பல்லரணை பல்குத்து போக, கருங்குட்டம் செங்குட்டம் போக, ஒற்றை தலைவலி போக, வாயிற்று நோய் போக முதலியனவும், மாந்தர் உச்சாடனத்தின் உட்பிரிவாக மாதர் உச்சாடனம், மைந்தர் உச்சாடனம் முதலியனவும், சத்ரு (பகைவர்) உச்சாடனத்தின் உட்பிரிவாக சத்ரு போக, சத்ரு நாடு பதி போக, சத்ரு சேனை போக, சத்ரு தன தானியம் போக, சத்ரு செல்வம் போக, சத்ரு இருந்த மனை போக, சத்ரு கை ஆயுதம் போக, சத்ரு மனை வெண்கலம் போக, சத்ரு அணிகலன் போக, சத்ரு சுகம் கெட முதலியனவும் அடங்கும்.

5.ஆகர்ஷணம் :
                                ஏழு வகைப்படும். அவை 1. அரசர் அகர்ஷணம், 2. உலக அகர்ஷணம், 3. மாதர் அகர்ஷணம், 4. மைந்தர் அகர்ஷணம், 5. விலங்கு அகர்ஷணம், 6. பகைவர் அகர்ஷனம் 7. நீர் அகர்ஷணம் முதலியன அடங்கும். இதில்  அரசர் ஆகர்ஷணத்தின் உட்பிரிவாக அரசர் வர, அரசர் கரி பரி தேர் வர, அரசர் படை வர, அரசர் படைக்கலம் வர, அரசர் செல்வம் வர முதலியனவும், உலக அகர்ஷணத்தின் உட்பிரிவாக அகன்றவர் வர, நினைத்தவை வர, சுகம் வர, உணவு வர, தானியம் வர, வைப்புநிதி வர, கிலேசம் வர, படை வர முதலியனவும், விலங்கு ஆகர்ஷணத்தின் உட்பிரிவாக யானை வர, புலி வர, பரி வர, பன்றி வர, பாம்பு வர, எலி வர, பசு வர, எருமை வர, மரை, கலை, கரடி வர முதலியவையும், பகைவர் அகர்ஷணத்தின் உட்பிரிவாக பகைவர் வர, பகைவரின் தன தானியம் வர, பகைவரின் சேனை வர, பகைவரின் ஜனம் வர, பகைவரின் படைக்கலம் வர முதலியனவும், நீர் ஆகர்ஷணத்தின் உட்பிரிவாக கிணற்றுநீர் வர, மழை நீர் வர முதலியனவும் அடங்கும்.

6. வித்வேஷணம் : 
                                      மூன்று வகைப்படும். அவை உலக வித்வேஷணம், மிருக வித்வேஷணம், படைக்கல வித்வேஷணம் முதலியவை அடங்கும். உலக வித்வேஷணத்தின் உட்பிரிவாக வாது வெற்றி, சொல் வெற்றி, வழக்கு வெற்றி, படை வெற்றி, போர் வெற்றி, பாட்டு வெற்றி, எழுத்து வெற்றி, இசை தமிழ் வெற்றி, நாடக தமிழ் வெற்றி, மாதர் வெற்றி, மைந்தர் வெற்றி, சிறை வெற்றி,ஊழ் வெற்றி முதலியனவும், விலங்கு வித்வேஷணத்தின் உட்பிரிவாக கிடாய் வெற்றி, சேவல் வெற்றி, வேழ வெற்றி, குதிரை வெற்றி, காடை வெற்றி, கோழி வேழத்தை வெல்ல, தகர், சேவல், யானை, குதிரை, காடை முதலியவற்றின் வெற்றி முதலியனவும் அடங்கும்.

7. பேதனம் : 
                         ஏழு வகைப்படும். அவை நில பேதனம், நீர் பேதனம், உலக பேதனம், மாதர் பேதனம், மைந்தர் பேதனம், விலங்கு பேதனம், பகை பேதனம் முதலியவை அடங்கும். இதில் நில பேதனத்தின் உட்பிரிவாக பயிர் ஆதல், நெல் விளைதல், தனம் பொலிதல், தானியம் மெத்தவதால், ஊனமரம் காய்த்தல், கூடு கொட்டாரம் பெருகல், செக்கெண்ணை காணுதல், ஆலைச்சாறுண்டாதல், பயிரழிதல், தனதானியங்குன்றல், கூடு கொட்டாரம் குன்றல், ஆலைச்சாரு குறைதல், செக்கெண்ணை குறைதல், மரம் காயுதிர்தல் முதலியவையும், நீர் பேதனத்தின் உட்பிரிவாக ஆற்றில் நீருண்டாதல், கிணற்றில் நீருண்டாதல், உப்பு விளைதல், முத்து விளைதல், மீனுண்டாதல், மரக்கலம் உடையாமை, மரக்கலம் உடைதல், மீன்படாமை, ஆற்றுநீர் வற்றல், கிணற்றுநீர் வற்றல், உப்பு விளையாமை, முத்து விளையாமை முதலியனவும், உலக பேதனத்தின் உட்பிரிவாக சபையில் வார்த்தை வெல்லல், பெரும் பட்டம் கட்டுதல், நற்குணம் உண்டாதல், மைந்தரும் மாதரும் கூடுதல், உறவு உண்டாதல், சிறப்பு உண்டாதல், சுகம் உண்டாதல், செட்டு உண்டாதல், தலைமயிருண்டாதல், கேட்டது கூடுதல், தாரமுண்டாதல், வித்துவானாதல், நாட்டிற்கு நலம் பயத்தல், மனையுண்டாதல், பெண் வாழ்தல், ஞானம் உண்டாதல், கவிதை உண்டாதல், தனம் உண்டாதல், நாணம் உண்டாதல், தானியம் உண்டாதல், தன்வசமாதல், பெண்ணான்விடுதல், செய்மைக்காட்சி, முக்காலமும் உணரும் ஞானம், காய சித்தி, கூடுவிட்டு கூடு பாய்தல், உடம்பு பருத்தல், வாழ்நாள் வளர்தல், ஆரோக்கியமுண்டாதல், சொல் தெளிவின்றி மாறுதல், பட்டம் அழிதல், குணம் கெடல், மாதர்  மைந்தர் மனம் பிரிதல், மாதர் உறவு கெடுதல், சுகங் கெடுதல், வித்தை கெடுதல், நன்மை கெடுதல், சிறப்பு அழிதல், செட்டு இலையாதல், தலை தட்டல், கெட்டது கூடாமை, கவித்துவம் கெடுதல், மனை கெடுதல், பெண் வாழாமை, ஞானங் கெடுதல், தானியம் குறைதல், நாணம் அழிதல், தனம் தானியம் அழிதல், தூர தரிசனம் கெடுதல், பெண் ஆண் பிரிதல், தன்வயமாகாமை, கண் தெரியாமை, முக்கால உணர்வு அழித்தல், காய சித்தி கெடுதல், சீர் சிறப்பு கெடுதல், உடல் இளைத்தல், ஆரொகியங்கெடுதல், ஆயுள் அழிதல் முதலியனவும், பெண் பேதனத்தின் உட்பிரிவாக கன்னி கூடுதல், கெங்கை அரும்புதல், மாதர் தெருளல், கருவுண்டாதல், பெண் வாழ்தல், பகம் பருத்தல், வீருண்டாதல், போகம் பெருகுதல், பெரும்பாடு நீங்குதல், கெங்கை சுருங்குதல், கன்னி கூடாமை, தெருளாமை, மகளிர் வெறுத்தல், கருச்சிதைதல், பகஞ் சுருங்குதல், வீறு கெடுதல், போகங் கெடுதல், பெரும்பாடு தங்குதல் முதலியனவும், மைந்தர் பேதனத்தின் உட்பிரிவாக நோக்கியவர் கூட, கண்டவர் விளைய, கோசம் வளர, தாது பெருக, பிரிவுண்டாக, பிரிந்து பிணங்க, கோசங் குறைய, தாது குன்ற முதலியனவும், மிருக பேதனத்தின் உட்பிரிவாக எருமை பாலுண்டாதல், எருமை உண்டாதல், பசுவுண்டாதல், பசு பாலுண்டாதல், எருமை கெட, எருமை பால் குறைய, பசு கெட, பசு பால் குறைய முதலியனவும், சத்ரு பேதனத்தின் உட்பிரிவாக தினம் பகை உண்டாதல், பகைவரின் படைகள் வருதல், பகைவரின் தனம் தானியம் கெடுதல், பகைவரின் படைக்கலம் வருதல், பகை கெடுதல், பகைவரின் சேனை கெடுதல், பகைவரின் செல்வம் கெடுதல், பகைவரின் படைக்கலம் கெடுதல் முதலியனவும் அடங்கும்.

8. மாரணம் : 
                        பதிநான்கு வகைப்படும், அவை சத்ரு மாரணம், கருமாரணம், குழவி மாரணம், சேனை மாரணம், மனைவி மாரணம், கண் மாரணம், பகைவர் மாரணம், சத்ரு நாசம், கரி மாரணம், பரி மாரணம், மறி மரணம், எருமை மாரணம், பசு மாரணம், விஷ நாசம் முதலியவை அடங்கும்.

                    இத்தகைய அபூர்வ அஷ்ட கர்ம மாந்த்ரீக கலையை மக்களின் நன்மைக்காக பயன்படுத்தி மக்களை வளம்பெற செய்வதே அஷ்ட கர்ம மந்த்ரீகத்தின் நோக்கமாகும்.
          

ரேவதி நட்சத்திரம் விருட்சம் பரிகாரம்

     ரேவதி நட்சத்திரம் - விருட்சம் - பரிகாரம்                    ரேவதி நட்சத்திரத்தில்  பிறந்தவர்கள் பணத்திற்கு தட்டுப்பாடற்ற வெற்றியையும்...